ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் 15 இலக்குகளை தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடற்பயண சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக தனது போர்க்கப்பல்கள் விமானங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யேமனின் தலைநகரம் சனா உட்பட பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன.
ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஆயுதங்கள் ஏனைய போர் தளபாடங்களை இலக்கு வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தலைநகரம் உட்பட பல பகுதிகள் தாக்கப்பட்டதை ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திங்கட்கிழமை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை யேமன் வான்பரப்பிற்கு மேல் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.