ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகின்றது: பா.நடேசன்

nadesan-10.jpgவிடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ‘த ஸ்ரேற்ஸ்மன்’ இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில், ‘’தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எமக்கு ஏமாற்றத்தையே தருகின்றன.

இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில்,  இந்தியாவின் இயற்கையான கூட்டாளிகள் யார் என்பதை அறிவதில் இன்றைய இந்திய அரசு தவறி விட்டது; அது ஈழத் தமிழர்கள் தான்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ’’இந்தியா ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. இதனை கண்டு நாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போரை நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் முயற்சிகள் எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை.  கடந்த சனிக்கிழமை சிங்கள வான்படையின் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் அதிகமாக வாழும் பாதுகாப்பு வலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தின.

பீரங்கி தாக்குதல்களும் கடுமையாகத் தொடர்கின்றன. இந்திய அதிகாரிகளின் கொழும்பு பயணத்தின் பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் உக்கிர நிலையை எட்டியுள்ளன.  விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவில்லை, இராணுவத்தினரே படையெடுப்பினை மேற்கொள்ளும் போது மக்களை மனித கேடயங்களாக முன்னால் நகர்த்தி முன்னேறுகின்றனர்.

தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் இன அழிப்புக்களின் உண்மைத் தன்மையை அனைத்துலக சமூகம் இப்போது மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது. தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து, தமது தாயகத்தை தாமே அளும் நியாயமான அரசியல் அவாக்கள் எமது மக்களுக்க உள்ளன. அந்த அரசியல் அவாக்களை வென்றெடுப்பதற்கு விடுதலைப் புலிகளையே அவர்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் விருப்பத்திற்கான போராட்டம் அவற்றை அவர்கள் அடையாதவரை முடிவுக்கு வராது.  எனவே, இங்கு தமிழ் மக்கள் மனிதப்பேரவலம் ஒன்றை சந்தித்துள்ள இன்றைய வேளையில், உலக சமூகம் உடனடியாத் தலையிட்டு அவர்களைக் காக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to X and Y Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    கடைசி நேரத்தில் தொப்புள் கொடி அறுந்துட்டு என்று ஐயாவுக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கு போல?. அவங்க எப்பவோ உங்களை அறுத்திட்டாங்க. நீங்க சுத்தி சுத்தி இப்பதான் சரியா சுத்துப்பட்டனீங்க. உங்கட இதே வேதனைதான் ஏனைய அப்பாவி போராளிகளுக்கும் இருந்திருக்கும். எங்கட காலத்திலயே அதையும் பார்க்க கிடைச்சிரிக்கி.

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழரென்றால் பருத்தித்துறை முதல் காலி வரை வாழ்கின்றார்கள். புலிகளின் போராட்டம் தொடங்கிய கால்முதல் இன்று வரை ஈழத்தமிழரின் பாதிபுக்களை கவனத்திற்கு எடுத்ததேயில்லை.

    புலிகளிற்கும் தலைவரிற்கும் பாதுகாப்பாகவும், வாய் மூடி,கைகட்டி அடிமைகள்போல் வாழ்வோரே நீங்கள் கூறும் ஈழ்த்தமிழராகும். இந்த 3 லட்சம் தமிழரை காக்கமுடியாத உங்களிற்கும் தமிழரின் விடுதலைக்கும் என்ன சம்பந்தம் என் கூறுவீர்களா.

    துரை

    Reply
  • X and Y
    X and Y

    Have you ever been heard about „ Vangam thantha Paadam“?

    The history of the world repeat itself.

    With 8th class education knowledge nobody could invent any political “systems of engineering”. This sentence suits not only you but also your leader and your supporters.

    Reply