பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று தொடங்கியிருக்கின்றனர். இந்த பெரும் இன அழிவைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளை பாகு வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் வீதியில் இறங்கி உடனடியாக போராடுங்கள் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள எம் உறவுகளே! ஒன்று குவிந்து தமிழர் பலத்தையும், தமிழ் இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்: இலங்கைத் தழிழ் மாணவர் ஒன்றியம்
புலம் பெயர் தமிழர்களே!
இளையோர்கள!
இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள். என இலங்கை தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச அன்புற்கினிய உறவுகளே !…
இளையோர்களே !…
சர்வதேசத்திலே தழிழர் போராட்டம் சார்பாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அது உங்களால் ஏற்படுத்தப்பட்டவை.
தழிழர் வரலாற்றை சிங்கள பயங்கரவாதம் அழித்தொழிக்கும் இறுதிக்கட்டத்தில் நிற்கின்றோம். இது சிங்கள பயங்கரவாதம் தழிழர் மீது செய்கின்ற மாபெரும் இன அழிப்பாய் காட்சியழிக்கின்றது.
இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் தழிழர் போராட்டத்தையும், தழிழ் இனத்தையும் அழித்து விடுவேன் என்று மகிந்த கம்பனியின் கதாநாயகன் கங்கணம் கட்டி நிற்கின்றார்.
ஈழத்திலே எதிர்வரும் சில தினங்கள் தழிழர் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தினங்களாய் இருக்கின்றது. தமது தாயக மண்ணிலே உணவில்லாமல், உறக்கம் இல்லாமல், காய்ந்து, கறுத்து, மெலிந்து, எமது உரிமையை பாதுகாக்க தங்கள் உயிரை துட்சமாய் நினைத்து எமது விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒட்டுமொத்த தழிழ் இனத்துக்காயும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் புதைகுழிகளுக்கு எதிராயும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
குருதியில் துவைந்து நின்று சிங்கள் எதிரிக்கெதிராய்போரிடுகின்றனர். எமது உறவுகளே இன்னும் சில நாட்களுக்கு உலகின் அனைத்து நாடுகளிலும் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள்.
இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்.
புலம் பெயர் தழிழாகளே !….
இளையோர்களே !….
உங்களது நாடுகளில் நடத்தப்படும் போராட்டத்தில் அன்னாட்டை சேர்ந்த ஒரு தழிழரேனும் குறையாமல் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள் சிங்கள பயங்கரவாதத்திடமிருந்து எமது உயிரையும், உரிமையையும் பாதுகாக்க ஒன்று திரளுங்கள்.
பார்த்திபன்
நடேசன் புலத்துப் புண்ணாக்குகளை உசுப்பி விடுவதை நிறுத்திவிட்டு, அப்பாவி மக்களை வெளியேறவிட்டு தமது வீரத்தை இராணுவத்திடம் காட்டலாமே?? அது வீரம். அதை விடுத்து இன்னும் திருந்தாத ஜென்மங்கள்.
Raviraaj
சரியாக சொன்னீர்கள் பார்த்திபன் இதற்குமேல் என்ன வேண்டும் இனியும் ஆயுதபோராட்டம் வேனுமா? எம்தமிழ் மக்களை வெளியேறவிடும் நடேசன் .
ரவிராஜ்
thurai
புலத்துப் புலிகழும் வன்னிமக்களின் அழிவினைக் காட்டித்தான் வீதியில் இற்ங்கியுள்ளார்கள். இந்த அழிவிற்கு புலிகளே காரணமென் உலகறியும். புலியின் புலுடாக்களை இல்ங்கையில் வ்யிறுப் பிள்ளையும் அறியும். ஆனால் புலத்தில் பயங்கரவாத புலிக்குட்டிகள் மட்டும் அறியவில்லை.
துரை
chandran.raja
நீங்கள் சொல்லுகிறத்தை தான் நாம் செய்கிறோம். தூதர கண்னாடியை உடைச்சோம். உள்ளுக்கை புகுந்து மேசையும் உடைச்சோம் கம்பத்திலை ஏறி கொடியையும் பிடுங்கினோம். முட்டை எறிஞ்சோம் போத்துளுக்கை அதையும் விட்டு எறிஞ்சோம். பிரபாகரனையும் உங்களையும் காப்பாற்ற சொல்லி உண்னாவிதரம் இருக்கிறோம். யாரும் மசியிறமாதிரி தெரியலை. கோமாவுக்கு வந்தால் தூக்கிக்கொண்டு போயிடுவாங்க போல இருக்கு! தீ குளிச்சா பக்கென பாய்ஞ்சு அமத்திருவாங்காக! இந்தியாமாதிரி இங்கெல்லாம் இல்லேங்க! இனி என்னதான் செய்யிறது? சொல்லுங்கா!
Kullan
நீங்கள் யார்? எங்களைத் தெருவில் இறங்கிப்போராடச் சொல்ல? ஈழத்தமிழர்களை அவர்கள் நாட்டிலேயே தெருவில் விட்டது போதாதா? இங்குள்ள இம்பிள்ளைகளின் வாழ்வைப் பழுதாக்காமல் மனைவி பிள்ளைகளுடன் பங்கருக்குள் இருக்கவும். உங்களின் மாவியா தொழிற்பாட்டுக்கு நாமும் புலம்பெயர் பிள்ளைகளும் அடிமையாகத் தயாராக இல்லை. ஐரோப்பிய தமிழ் பெற்றோர்களே! இவர்கள் எல்லாம் பிள்ளை பிடிகாரர்கள். கணனி ரிவி ஊடாக உங்கள் பிள்ளைகளைக் கடத்திவிடுவார்கள். கவனமாக இருங்கள். உங்கள் பிள்ளைகளின் வாழ்வை வீணடிக்க வேண்டுமாயின் உங்கள் பிள்ளைகளை தெருவில் இறக்குங்கள்
மாயா
பிரபாகரனோட மகள் லண்டன்ல இருக்கிறா. இறங்க சொல்லுராராக்கும்.
BC
//மாயா – பிரபாகரனோட மகள் லண்டன்ல இருக்கிறா. இறங்க சொல்லுராராக்கும்.//
அது எப்படி? ஊரார் பிள்ளைகள் தெருவில் இறங்கினால் தன் பிள்ளை தானே வளரும் என்பது அவர்கள் கொள்கை.
பார்த்திபன்
நடேசன் போன்றவர்களால் பலாத்தகாரமாகவும் உசுப்பேற்றறியும் இணைக்கப்பட்ட உங்களை போன்ற இந்த இளையோர்களைப் பாருங்கள். இந்த அப்பாவிச் சிறார்களில் புலித்தலைமைகளின் பிள்ளைகள் யாராவது இருக்கின்றார்களா??இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட யார் காரணம்?? இன்று இவர்களுக்கு ஏற்பட்ட நிலையே நாளை உங்களுக்கும் வரவேண்டுமென்று புலிகள் விரும்புகின்றார்கள். எனியும் நீங்கள் சிந்திக்காது விட்டால் நாளை உங்களுக்காக குரல் கொடுக்க எவரும் இருக்க மாட்டார்கள்.
இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள்.
http://www.youtube.com/watch?v=Vgv582GxwDY&eurl=http%3A%2F%2Flive%2Eathirady%2Eorg%2F&feature=player_embedded