புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளைக் கவனிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம், பொலன்நறுவை மற்றும் கண்டி ஆகிய 3 மவாட்டங்களின் செயலாளர்களை உள்ளடக்கிய இக்குழுவினர், இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள வவுனியா மாவட்ட செயலாளர்களுக்கு உதவி வருகின்றனர். இக்குழுவினர் அரசாங்க நிறுவனங்கள், தொண்டர் அமைப்புக்கள் மற்றும் மாகாண சபைகள் போன்றவற்றின் மூலம் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kullan
எவ்வளவு வெளிநாட்டுப்பணங்கள் பொக்கட்டுகளுக்குள் போகப்போகிறதோ யார் அறிவார். பிச்சைக்காரனிடம் களவெடுப்பவனுக்குத்தான் காலம்