இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடவுள்ளார். இன்று காலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவைச் சந்தித்த ஜோன் ஹோல்ம்ஸ் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் தேவைகள் பற்றிக் கலந்துறையாடியுள்ளார்.
இதேவேளை, இவர் வவுனியாப் பகுதிக்கு சென்று அங்கு தங்கியுள்ள இடம் பெயர்ந்த மக்களைச் சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
Kullan
என்ன அதிகமாகச் செய்யப்போகிறீர்கள் அறிக்கை விடுவியள் அடங்கி விடுவியள். அரசாங்கள் நினைத்ததை நடத்தும். சும்மா போங்க.