பிரபாகரன் தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியக் கடற்பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு – இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்

india.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடலாம் என்று அந்நாட்டின் உளவுத்துறை வழங்கிய தகவலையடுத்து தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
பிரபாகரன் பாக்கு நீரினையூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லலாம் என்ற தகவலையடுத்து சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரையான 650 கிலோ மீற்றர் நீளமுடைய கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பொலிஸ் அத்தியட்சகர் முகுன் கொட்னிஷ் தலைமையிலான விரைந்து செயற்படும் அதிரடிப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக்கப்பல்கள் சென்னையின் தெற்கில் 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நாகபட்டினம் கரையோர பகுதியிலும் சென்னையில் வலப்பக்கமாக 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ராமேஸ்வரம் கரையோர பகுதியிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்தியப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

Show More
Leave a Reply to thamba Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Kusumpan
    Kusumpan

    பிரபாகரன் சொல்லிப் போட்டுத்தான் வரப்போகிறார். ஏன் கடுப்பேத்துறியள். நீங்கள் நடேசரைப் பிடித்தாலும் தலைவரைப் பிடிக்க மாட்டியள். ஏலும் எண்டால் பாப்பம்

    Reply
  • thamba
    thamba

    Our leader is a brillent man he knows how to pay ransome and get released from indian police or goverment officers – you can’t catch him? – the sri lanka Army enter the no fire zoon and will have upset about our leader wait and see.

    Reply
  • ramesh
    ramesh

    இது என்ன புதுக்கதை விடுறியள்? தமிழ்நாடு எலக்சனுக்கு ரெண்டு நாளைக்கு முதலே “றெசுக்கியு ஒப்பறேசன்” எண்டு வன்னியிலிருந்து தலைவரக் காப்பாத்திக் கொண்டு போவியளல்லோ. முதல் செய்த மாதிரி. அப்பதானே கலைஞர் ஐயா வெல்லுவார். இது எங்களுக்கு வேளைக்கே தெரியும் தானே.

    Reply
  • rajan
    rajan

    தமிழனை முட்டாளாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றது உலகம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ராஜன் இரண்டு சகாப்தத்திற்கும் மேலாக ஈழத்தமிழ் மக்கள் முட்டாள்ளாக நிரூபித்துக் கொண்டுயிருக்கிறோமே! வெளிநாட்டு தொழில்துறையை வளர்த்தெடுக்க குண்டுகளாகவும் நவீனமான துப்பாக்கிகளாகவும் பீரங்கிகளாகவும் யுத்தசாதனங்களாகவும் வாங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாக்களை அனுப்பி வைத்துக்கொண்டிருந்தோமே ஒழிய தமிழ்மக்களின் வயிற்றுபசியை போக்கவே நோய்களை தீர்கவே அவர்கள் வாழ்வை உயர்த்தவோ ஒருசதமும் பயன்படவில்லை என எண்ணும்போது நாம் ஒரு அசல்முட்டாள் கூட்டம் என்பதைமறக்க முடியுமா?

    எமக்கு கிடைத்த இந்த மாபெரும் செல்வத்தை கொண்டு நகரங்கள் துறைமுகங்கள் தொழில்சாலைகள் கல்விகூடங்கள் நெடும்சாலைகளை அமைத்து பேரினவாதத்திற்குஒரு பெரிய பொருளாதார அடியை பலமாக கொடுத்திருக்க முடியும் இப்ப புரிந்துகொள் கஷ்ரமாக இருக்குமென நினைக்கவில்லை.
    இப்படித்தான் சின்னஞ்சிறு இஸ்ரேயிலும் உலகத்திற்கு சவால்விடுவதும் அல்லாமல் சாதனைகளையும் நிகழ்திக் கொண்டிருக்கிறது. காலம் கடந்தாலும் “இனியொரு விதி செய்வோம் அதை என்னாலும் காப்போம்” நலன்களும் தேவைகளும் மக்களின் அடிப்படை தேவைகளில்லிருந்து பிறக்கட்டும் வறண்ட சூத்திரத்திலும் பகையுணர்ச்சிலும் இல்லாதிருக்கட்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //தமிழனை முட்டாளாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றது உலகம்.- rajan //

    இன்று சில தமிழர்களின் செயற்பாடுகளால், அவர்கள் தான் உலகிற்கு தம்மை முட்டாள்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் உலகைக் குறை கூறி என்ன பயன்??

    Reply