சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கைத் தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம், இலங்கையில் நடைபெற்று வரும் போரில் இந்த ஆண்டில் மட்டும் 9 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 17 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்; 35 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்திய உயர்நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) இலங்கை சென்று திரும்பியது. அக்குழு இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை. குழு திரும்பி சென்றவுடன் 22 தடவை விமான குண்டு வீச்சுகளும், பீரங்கி தாக்குதல்களும், முப்படைத் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.
அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவி சங்கர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து இனி இலங்கைத் தமிழர்களால் ஒரே நாட்டில் வாழ முடியாது. தமிழ் ஈழம்தான் இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார். இதனையடுத்து அதிமுக அணி வெற்றி பெற்றால் தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என ஜெயலலிதா கூறியதற்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெயலலிதாவின் இந்த முடிவுக்கு உலகம் முழுதும் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரும் கடிதங்கள், மின்னஞ்சல் உள்ளிட்டவை மூலம் நன்றி தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதாவின் இந்த முடிவு இலங்கை அரசு பேரதிர்ச்சி கொடுக்கும். இந்திய அரசு தவறான வெளிநாட்டு கொள்கைகளால் உலக அரங்கில் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.
thurai
புலிகளின் எந்தக்கொள்கையினால் உலகெங்கும்தடை செய்யப்படுள்ளார்களென்பதை முதலில் அறியவும். அந்த விடயத்தை உலகில் உண்ணா விரதமிருக்கும் தமிழரிற்கு சொல்லி அவர்களின் உயிர்களை முதலில் காக்கவும். அதோடு கிளிநொச்சியில் புலிக்கொடியைக் பறக்கவிட முடியாதவர்கள் உலகெங்கும் பிடித்துக் காட்டும் கோமாளித்தனத்தை முதலில் தடுக்கவும்.
துரை
வல்வெட்டித்துறை
இந்திய அரசு பெயரைக் கெடுத்துக் கொள்வது இருக்கட்டும்!, உங்கள் ஊரான, வல்வெட்டித் துறை, கொழும்பை விட இந்தியாவுக்கு 19பது கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது, ஒலிப்பெருக்கியில் எம்.ஜி.ஆர்.பாட்டு போட்டு காதை செவிடாக்குவது போல், மீனுக்கு டைனமைட் வைப்பது போல், சாதாரணமான விஷயங்களாக சிலவற்றை எடுக்க வேண்டாம், தமிழ் நாட்டின் ஒரு பகுதியைபோல் இருக்கும் நிலையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டு என்று சில நலன் விரும்பிகள் கூறியதற்கு, நாங்கள் வெளிநாடு, எங்கட ஆட்கள் “ஹய் பய்”, என்று ஏளனம் செய்த உங்களுக்கு, இப்போது நீங்கள் கூறிய வசனத்திற்கு ஒன்று கூறுகிறோம்!, “மறுபடியும் வழ்க்கையில்,தமிழ்நாட்டிற்குள் வசிக்கும் ஒரு குடிமகன் போல் பேச வேண்டாம்”.
பார்த்திபன்
சிவாஜிலிங்கம் முதலில் கூத்தமைப்புத் தவறுகளை இன்னும் திருத்துவதற்கு முயற்சிக்வில்லை. அதற்குள் அடுத்தவருக்கு உபதேசம்.