வன்னியில் போர்ப்பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை குறித்து சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கைக்கு திடீர் முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லி பாண்ட், பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கொஷ்னர், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் ஹாம் பில்ட் ஆகியோரே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகச் செய்திகள் தெரிவித்தன.