மேல் மாகாண சபைத் தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தி முடிக்க கிடைத்ததாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மேல் மாகாணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த 2769 மத்திய நிலையங்களிலும் இவ்வாறு தேர்தலை நடத்தி முடிக்க கிடைத்தது.
இத்தேர்தலை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய சகல அராசங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்