![]()
விடுதலைப்புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது என பி.பி.ஸி. அறிவித்துள்ளது
இலங்கை மோதல்கள் காரணமாக பெரும் மனித நேய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நாவின் உயர் அதிகாரியான ஜோண் ஹோல்ம்ஸ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பார்த்திபன்
ஏற்கனவே அரசு இரண்டு தடவைகள் 48 மணிநேர யுத்தநிறுத்தத்தை அறிவித்தபோது வீடுதலைப்புலிகள் அதனை முற்றாக நிராகரித்ததுடன் நிரந்தரப் போர் நிறுத்தமொன்றையே தாம் ஏற்றுக் கொள்வோமென்று அறிவித்துமிருந்தனர். இப்ப இந்த ஒருதலைப்பட்ச யுத்தநிறுத்தம் தற்காலிகமானதா?? நிரந்தரமானதா?? என்றும் தெரியவில்லை. ஆனால் இப்போது இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் யுத்தநிறுத்தக் கோரிக்கையென்பது யாரைக் காப்பாற்ற என்பது எல்லோருக்கும் புரிந்த ஒன்றே…
chandran.raja
ஐ.நா ஐரோப்பிய ஒன்றியம் புலிகளிடம் யுத்த நிறுத்தத்தை கோரவில்லை மாறாக ஆயுதங்களை கீழேபோட்டு விட்டு சரணடைய அல்லவா? கேட்டிருந்தார்கள். இதை தானே “புலிக்குணம்” என்று சொல்வது. கடைசி நேரத்திலையும் நல்லபுத்தி வர மறுக்கிறதே!.
thevi
லங்கை மோதல்கள் காரணமாக பெரும் மனித நேய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேச நாடுகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக கூறும் புலிகள் அதே அமைப்புக்கள் மக்களை புலிகள் தடுத்து வைக்காமல் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை செவிசாய்க்கவில்லை. புலன் பெயர்ந்த மக்களைப் போல் உலகத்தையும் ஏமாற்றலாம், நாங்கள் கெட்டிக்காரர்கள் என புலி நினைக்கிறது. சர்வதேசத்திற்கு தாம் நல்லவர்களாம்.
Enaas
“பிச்சை வேன்டாம் நாயெய் பிடி என்டு சொல்லுகினம் LTTE”
Rohan
துரதிஷ்டவசமாக, வெற்றி பெறுகிறவன் தான் விதிகளை அமைக்கிறான்! பீரங்கிகளையும் விமானங்களையும் பயன்படுத்தி இராணுவம் தாக்குகிறது. புலியின் தமிழில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் மடிகிறார்கள். ஆனால், சிறு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்துவதாக அரசு பம்மாத்துகிறது. அதை எல்லோருமே நம்புகிறார்கள்.