தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் மாணவர்களோ பெற்றோரோ ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தேசிய நோய்த் தடுப்பு வேலைத் திட்டத்திற்கமைய ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாடு முழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் 350 பேர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.