யுத்த சூனிய பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்களுக்கு பொது அமைப்புக்கள் சமய நிறுவனங்கள், பொதுமக்கள் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர். கோவில்குளம் சிவன் கோவில் மண்டபத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகளை பொதி செய்வதில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

பார்த்திபன்
நீங்களாவது மனிதாபிமானத்தோடு வளருங்கள். நாளைய தமிழ்ச் சமுதாயம் உங்கள் கையில் தான்.
palli
இதுதான் மாணவ பண்பு எது அத்திய அவசியமோ அதில் தம்மையும் படிப்பு கெட்டுவிடாமல் இனைத்து கொள்வது. அதை விட்டு இந்த புலம் பெயர் தேசத்தில் சில கிருமிகள் மாணவர்களை படுத்தும் பாடு இருக்கே குடிப்பதுக்கு அதுவும் பிடிப்பதுக்கு இதுவும் கொடுத்து மாணவ(தமிழ்) சமுதாயத்தையே சீரளிக்க முயலுகின்றனர். முடிந்த போராட்டத்தில் உங்கள் பிள்ளைகளை விட்டு அவர்கள் எதிர் காலத்தையும் எம்மை போல் கேள்வியாக்கி விட வேண்டுமா??
மாயா
பசியோடு வந்தவர்களுக்கு ஒரு பிடி சாதம் கொடுக்க ஒரு நேரத்தை செலவழிக்கும் அன்பு செல்வங்களுக்கு நன்றி.