இடம் பெயரும் மக்களுக்கு சமைத்து உதவ 115 முஸ்லிம்கள் வன்னி விரைவு

Wanni_War_Boat_Refugeesவன்னியில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 115 முஸ்லிம்கள் இன்று வன்னிக்கு சென்றனர். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி நகரசபை, ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவர்கள் இன்று வன்னிக்கு சென்றனர். இரண்டு பஸ் வண்டிகளிலும், ஒரு லொறியிலும் சமையல் பாத்திரங்களுடன் காத்தான்குடிப்பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு முன்பாக இருந்து இவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எஸ். எச். அஸ்பர் தலைமையில் இவர்கள் வன்னிக்கு சென்றுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகள் முஸ்லிம் மக்களுக்கு எத்தனையோ அநியாயங்கள் செய்திருந்தும் அம்மக்கள் இன்று அடிபட்டு வந்திருக்கும் தமிழ்ச் சகோதரங்களுக்காக உதவ ஓடோடி வருவதை அறியும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்கள் பாசத்திற்கு தலை வணங்குகின்றோம். இந்த ஒற்றுமை எனி என்றும் தொடர வேண்டும் என்று மனமார விரும்புகின்றோம்.

    Reply
  • thurai
    thurai

    கூடப்பிறவா சகோதரர்களிற்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

    வணங்காமண் எங்கே? எங்கள் மானம் காக்கப்புறப்பட்ட ஜிரிவி யினது நேயர்கள் எங்கே? சேர்த்த உணவுப்பொருட்கள் எங்கே? மருந்துகள் வாங்க சேகரித்த பணமெங்கே?

    உங்கள் துடிப்புகள் எல்லாம் பெரும் நடிப்பு.பயங்கரவாதத்தை வளர்க்கும் பகல்கொள்ளையர் கூட்டம்.

    துரை

    Reply
  • Rohan
    Rohan

    சுனாமி நேரம் வராத பாசமா புதிதாக வரப் போகிறது? உணர்வு பூர்வமாக வரும் இவ்வாறான எதிவினைகள் எல்லாம் அரசியல் நுழைந்தவுடன் மறைந்து போகும். உதவ வரும் கரஙகளை முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்ப்பதிலேயே இனவாதம் இருக்கிறது என்று தான் நான் பார்க்கிறேன்.

    Reply
  • yahiya wasith
    yahiya wasith

    மனிதம் மனிதத்திற்கு உதவ வேண்டும்.இது ஒவ்வொரு சிறிலங்கனினதும் கடமை. இதற்கெதற்கு ஜாதியும்.சாதியும்.ஆனால் வணங்கா மண் எப்போது போகப் போகின்றது என்பதுதான் அனைவரினதும் ஏக்கமும் பெருமூச்சும்.

    Reply
  • மாயா
    மாயா

    // Rohan on April 26, 2009 12:19 am சுனாமி நேரம் வராத பாசமா புதிதாக வரப் போகிறது? உணர்வு பூர்வமாக வரும் இவ்வாறான எதிவினைகள் எல்லாம் அரசியல் நுழைந்தவுடன் மறைந்து போகும். உதவ வரும் கரஙகளை முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்ப்பதிலேயே இனவாதம் இருக்கிறது என்று தான் நான் பார்க்கிறேன்.// நல்ல எண்ணங்கள் றோகண். அனைவரும் ஒரே குலமாக மதிக்கப்பட வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Rohan க்கு எதையும் எதிர்மறையாகத் தான் சிந்திக்க தோணுதோ?? எல்லாம் புலிகளின் சகவாசம் தோசம் போல.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //உதவ வரும் கரங்களை//ரோகன்
    கூடிவாழ்ந்த உறவுகளை பிரித்தெடுத்து……..இனவாதம் இல்லை. அப்படித்தானே! ரோகன்.

    Reply
  • mano
    mano

    எதிர்காலத்தில் இந்த உணர்வு இப்படியே இருக்குமா? என்று சிந்திப்பதில் எந்த இலாபமும் இல்லை. ஆற்றில் விழுந்து வெளியேறத் துடிப்பவனுக்கு உதவும் ஒருவனுக்கு நன்றி சொல்வது எப்போதும் சரியானது.

    புலிகளைக் காப்பாற்றப் புறப்பட்ட வணங்காமண் சேர்த்த பொருட்களை> இந்த மீண்டுவந்த மக்களுக்கு அனுப்பிவைக்கலாமே?
    அனுப்ப விரும்பினால் எத்தனையோ வழிகள் இருக்கிறது. இலங்கை அரசாங்கத்திடம் (அரசாங்கம் அந்த மக்களுக்குக் கொடுக்காமல் சிங்கள மக்களிடம் கொடுத்துவிடும் என்று ஏதாவது முட்டாள்தனமாக உளறும் கூட்டம் தடுத்துவிடும்) அல்லது ஐசிஆர்சி மூலம் அனுப்பிவைக்கலாம் தானே!

    யாழ்ப்பாண மக்கள் இன்றைய நிலையிலும் தமது பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள். கோயில் திருவிழாக்கள் மேலதிக செலவுகளை நிறுத்திவிட்டு வன்னியிலிருந்து வந்த மக்களுக்கு உதவுகிறார்கள். கொடி பிடித்து கோஷம் போடாத> பக்கம் பக்கமாக கட்டுரை எழுதாத புலம்பெயர் தமிழர்களும் தமது உறவினர்கள் மூலம் உதவுகிறார்கள்.

    Reply
  • palli
    palli

    //வணங்காமண் எங்கே? எங்கள் மானம் காக்கப்புறப்பட்ட ஜிரிவி யினது நேயர்கள் எங்கே? சேர்த்த உணவுப்பொருட்கள் எங்கே? மருந்துகள் வாங்க சேகரித்த பணமெங்கே?//

    துரை எல்லாமே மிக பாதுகாப்பாக எமது (புலி) ஆதரவுகளிடம் கவனமாக இருக்கிறது. அதை எப்போ எப்படி பணமாக்க வேண்டுமோ. அப்ப பணமாக்கி எங்கே கொடுத்து எதுக்கு செலவு செய்ய வேண்டுமோ அதுக்கு அப்போ எல்லாம் பண்ணிப்போம். அதை விட்டு இந்த பளசுகளை கிண்டாதையுங்கோ.(உபயம் பாலா)

    Reply
  • நண்பன்
    நண்பன்

    // Rohan on April 26, 2009 12:19 am சுனாமி நேரம் வராத பாசமா புதிதாக வரப் போகிறது? உணர்வு பூர்வமாக வரும் இவ்வாறான எதிவினைகள் எல்லாம் அரசியல் நுழைந்தவுடன் மறைந்து போகும். உதவ வரும் கரஙகளை முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்ப்பதிலேயே இனவாதம் இருக்கிறது என்று தான் நான் பார்க்கிறேன்.//
    அநியாயமா செத்த தமிழர்களை நினைச்சு வருத்தமாயிருக்கு. இதை முன்னமே Rohan சொல்லியிருந்தால் தமிழனும் சிங்களவனும் இவ்வளவு செத்து இருக்க மாட்டாங்கள். இப்பவும் லேட்டில்ல தலைவருக்கு ஒரு தந்தியடிச்சு சரணடையச் சொல்லங்கோ. அங்க கற்பழிக்கிறார்கள் – கொல்கிறார்கள் என்று புளுகி சாகடிக்க வச்சிருக்கிற சினஞ் சிறுசுகளாவது உயிர் தப்பும்.

    //உதவ வரும் கரஙகளை முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்ப்பதிலேயே இனவாதம் இருக்கிறது என்று தான் நான் பார்க்கிறேன்- Rohan.// மறக்காம எழுதி வையுங்க.

    Reply