இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் தமிழர்களின் முக்கிய அரசியல் தலைவருமான இரா சம்பந்தன் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் தனது 91வது வயதில் மரணத்தை தழுவியுள்ளார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் என தன் நீண்ட அரசியல் பயணத்தைத் தொடர்ந்த இரா சம்பந்தன் இலங்கை அரசியலிலோ தமிழ் அரசியலிலோ ஒரு ஆளுமையாக உருவாகவில்லை. அ அமிர்தலிங்கத்தின் மரணமும் வி ஆனந்தசங்கரிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாடும் அவரைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பன்முக அரசியல் தன்மையைக் காட்ட வெளிப்படுத்திய முகம் தான் இரா சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரானது. எஸ் ஜெ வி செல்வநாயகம், அ அமிர்தலிங்கம் வரிசையில் அடுத்து வந்த இரா சம்பந்தன் தமிழ் அரசியல் வரலாற்றில் போராடாத தோற்றுப் போன ஒரு தலைவராகவே பார்க்கப்படுவார். அவருடைய மரணத்துடன் குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் தமிழரசுக் கட்சியும் மரணத்தைத் தழுவும் வாய்ப்பே நிறைய உள்ளது.
Democracy
இவரை அந்தக்காலத்திலிருந்து “ஒரு கேரள நம்பூத்திரி” என்று சந்தேகப்பட்டிருக்கிறேன்..
ஏதாவது கூடுதல் தகவல்கள்?? நன்றாகத் தண்ணி அடிப்பார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்..!