மெல்ல வெளிவரும் நிஜங்கள் – வெளியேறி வருவோரின் வாக்கு மூலங்கள் : த ஜெயபாலன்

Wanni_War_Bombed_Safe-Zone1.
யுத்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் வெளியே வர அங்கு என்ன நடந்தது என்ற உண்மையும் வெளிவரத் தொடங்கி உள்ளது. சர்வதேச ஊடகங்கள் அனைத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள முல்லைத் தீவு யுத்தமுனையின் மனித அவலத்தை விபரிக்க வார்த்தைகள் இன்றித் தவிக்கின்றனர் செய்தியாளர்கள். சில காட்சிகளைக் காட்டுவதைத் தவிர்க்க இயலாததால் அது பற்றிய எச்சரிக்கையை வழங்கியே அவற்றைக் காட்சிப்படுத்துகின்றனர். இந்தப் பெரும் அவலத்திற்குக் இவர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டிட முடியாத அளவிற்கு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரசும் எல்ரிரிஈ யும் அப்பகுதியில் வகைதொகையின்றி மனிதக் கொடுமைகளைப் புரிந்திருப்பதை வெளியேறி வருகின்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.

புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்கள் யுத்தப் பகுதியில் இருந்து வெளியெறி வரும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவோ அவர்களுடைய துயர் துடைப்பதாகவோ இல்லை. அவர்களின் பெயரில் ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்படுகிறது. அதில் அம்மக்கள் பகடைக்காய்களாக்கப்பட்டு உள்ளனர். வன்னி மண் பூர்வீக மண் அம்மக்கள் அங்கிருக்கவே விரும்புகின்றனர் என்று கூறி அம்மக்களை யுத்தப் பகுதிக்குள் வாழ நிர்ப்பந்தித்த புலத்து உறவுகள் இலங்கை இராணுவத்தினதும் புலிகளினதும் தாக்குதலுக்கு அம்மக்களை இலக்காக்கி உள்ளனர். (இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்)

இன்று ஆயிரம் ஆயிரமாக யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்தகொண்டிருக்கும் மக்களை நோக்கி புலத்து உறவுகள் தங்கள் உதவிக் கரங்களை நீட்ட எத்தனிக்கவில்லை. தென்பகுதியில் உள்ள மக்களே சமைத்த உணவுகளை வழங்குகின்றனர். வீட்டில் ஒரு ஆபத்து என்றால் பக்கத்து வீட்டில் உள்ளவன் தான் உதவி செய்வான். பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் தொப்புள்கொடி உறவால் ஆபத்திற்கு தண்ணீர் கூடக் கொடுக்க முடியாது. மேலும் காயப்பட்ட மக்களை காப்பாற்றுபவர்கள் அனைவரும் தமிழ் மருத்துபவர்களும் அல்ல. இது இந்த யுத்த்தில் மட்டும் நிகழவில்லை. சுனாமிக் காலகட்டத்திலும் இதுதான் நிகழ்ந்தது.

அரசையும் மக்களையும் பிரத்துப் பார்க்க முடியாத தமிழ் தலைமைகள் செய்த அரசியலும் அதனைத் தொடர்ந்து வந்த இராணுவ மயமாகிப் போன தமிழ் அரசியலும் தமிழ் மக்களை பல பத்து ஆண்டுகளுக்கு பின்கொண்டு சென்றுள்ளது என்பது வேதனையான உண்மை. இப்போராட்டத்தை புரட்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள இருந்த அத்தனை சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு அல்லது அதனிலும் பின்னே வந்து நிற்கின்றோம்.

யுஎன் செயலாளர் நாயகம் பான்கிமூன் ராயட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு “”I intend to immediately dispatch a U.N. humanitarian team to the no-fire zone. The purpose of this humanitarian team would be to first of all monitor the situation and support humanitarian assistance and try to do whatever we can to protect the civilian population who are caught in the fire zone. –  நான் உடனடியாக மனிதாபிமானக் குழு ஒன்றை தாக்குதல் தவிர்ப்புப் பகுதிக்கு அனுப்பி வைக்க விரும்புகிறேன். அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுவதும் தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாகக்க எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் தான் அந்த மனிதாபிமானக் குழுவின் நோக்கம்” என்று தெரிவித்து இருக்கிறார். இலங்கை அரசாங்கம் இக்குழுவை கட்டாயமாகவும் அவசரமாகவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பான்கீ மூன் தெரிவித்து உள்ளார். http://www.alertnet.org/thenews/newsdesk/LN183462.htm

இதற்கு முன்னர் எல்ரிரிஈ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டு உள்ளது. நேற்று இரவு (ஏப்ரல் 22) இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பின்னரே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குளோடி ஹெல்லர் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாட்டு உறுப்பினர்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எல்ரிரிஈ மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருப்பதாகவும் எல்ரிரிஈ யுஎன் அணுசரனையுடன் மக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்ரிரிஈ பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்குப் பின்னர் இன்று ஐநா செயலாளர் நாயகமும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதே கருத்தை பிரித்தானியா – பிரெஞ் வெளியுறவுச் செயலர்கள் வெளியிட்டிருந்த கூட்டறிக்கையிலும் தெரிவித்து இருந்தனர். ஏற்கனவே பெப்ரவரி நடுப்பகுதியில் இணைத் தலைமை நாடுகள் மற்றும் இந்தியாவும் இக்கோரிக்கையை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. (”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்)

தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்பது பற்றி இந்திய உளவுத்துறையின் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்க பொறுப்பாக இருந்த ரோ சந்திரன் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் எண்பதுக்களின் நடுப்பகுதியில் உரையாடிய போது பிரபா அதனை மறுத்துவிட்டார். இக்கோரிக்கைகாக தன்னுடன் போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்து விட்டபின் நான் தமிழீழத்தை கைவிடமுடியாது என்று தெரிவித்து உள்ளார். இன்று கால்நூற்றாண்டுக்குப் பின் எத்தனையாயிரம் இழப்புகள். தமிழீழக் கோரிக்கை என்றைக்கோ அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. இன்றைக்கு பிரபாகரன் இந்த யுத்தப் பகுதியில் இருக்கின்றாரோ இல்லையோ அல்லது இலங்கையை விட்டுவெளியேறி இருந்தாலுமே அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். (Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்)

பிரபாவின் எதிர்காலம் மட்டுமல்ல அவர் வலிந்து தலைமை தாங்கிய தமிழ் மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது. (தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன்)

IDP_Camp_Injured_Man2.
ஏப்ரல் 20 முதல் சிகிச்சைக்கு வருபவர்கள் மூன்றில் நான்கு பங்கினர் நிலக்கண்ணி வெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் ஏனையவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வருவதாகவும் வவுனியா வைத்திய சாலையில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவர் போல் மக்மாஸ்ரர் தெரிவிக்கிறார். அவர் மேலும் தெரிவிக்கையில் 450 படுக்கைகள் உள்ள வவுனியா வைத்தியசாலையில் 1700 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக கூறுகிறார். அங்குள்ள நிலைமைகள் பற்றிய அவருடைய குறிப்பு வன்னி மக்களின் நிலையை ஓரளவுக்க மனக் கண்முன் கொண்டு வருகிறது.

”நாங்கள் அங்கங்களை நீக்கும் சத்திர சிகிச்சைகளை நிறையச் செய்ய வேண்டி இருக்கிறது. பலருக்கு கீழ்கால் மற்றும் பாதங்களில் கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளது. பலருக்கு அவை வெடித்துச் சிதறி உள்ளது. அதனால் நாங்கள் அவசரமாக அங்கங்களை நீக்கும் சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். பல நோயாளிகளின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது. வயிற்றில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை, குடலில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை (உணவின்மையால்) நெஞ்சும் சுவாசப்பைகளும் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாள வேண்டி உள்ளது. தலைக்காயங்களையும் நாங்கள் கையாள்கின்றோம். தலையில் காயம்பட்டவர்கள் பலர் எங்களை வந்தடைவதில்லை. பஸ்களில் காயப்பட்டவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். மக்கள் பஸ்களிலேயே இறக்கிறார்கள். சிலசமயம் பஸ்களில் இருந்து உயிரற்ற உடல்களே இறக்கப்படுகின்றது.”
போல் மக்மாஸ்ரர் – எல்லைகளற்ற மருத்தவர்கள் அமைப்பு

We are doing a lot of amputations. Many of the lower limbs are severely, severely injured and blown off. So we’re doing emergency amputations and a lot of these patients we’re doing abdominal expirations, or damage to internal organs and the bowel, we’re dealing with chest injuries, draining damaged chests and lungs, and we’re dealing with some head injuries as well, but the majority of the severe head injuries don’t make it to us. Buses that bring these people down, people are dying on those buses, and bodies are being taken off the buses sometimes as well.
Paul McMaster – Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF)

http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3551&cat=field-news&ref=home-center

Wanni_War_Boat_Refugees3.
ஏப்ரல் 20ல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரான இளம்தாய் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய வாக்குமூலம்.

”என்ரை பெயர் வினோ. நாங்கள் மாத்தளன் ஹொஸ்பிட்டலுக்குப் பக்கத்தில் இருந்த நாங்கள். 20ம் திகதி இரவு ஒரு மணியில இருந்து ஒரே சண்டை நடந்தது. சரியான செல்லடி. நாங்கள் வாறத்துக்காகத்தான் முயற்சி செய்து கொண்டே இருந்த நாங்கள். அதுக்குள்ள பதுங்குகழிக்குள்ள இருந்த நாங்கள் நினைக்கவே இல்லை உயிரோட வருவம் என்று. விடிய ஆறு மணிபோல ஓடி வந்த நாங்கள் வரும் போதும் சரியான செல் அடி. காயப்பட்டுத்தான் வந்த நாங்கள். கனபேர் செத்திட்டாங்கள். நாங்கள் காயங்களோட ஓடி வந்தநாங்கள்.

எனக்கு காலிலையும் கையிலையும் காயம் எனது கணவனுக்கு நாலைந்து இடத்தில காயம். கால்லில கையில உடம்பில தலையில எல்லாம் காயம். இன்னும் செல் துண்டுகள் உடம்பில இருக்குது.

நாங்கள் இங்கால வாறத்துக்காகத்தான் ஒரு மாசமா முயற்சி செய்து கொண்டு இருந்தம். ரெண்டு மூன்று தரம் நாங்கள் வரும்போது சரியான தடையாப் போச்சு. எங்களைத் துரத்தினாங்கள். பிடிச்சுடுவாங்கள். சரியான கரைச்சல்பட்டுத்தான் ரோட்டுக் கரையா ஒரு பதுங்குழிக்குள் இருந்தனாங்கள். அன்றைக்கு சரியான செல் அடி ஆறு மணி வரைக்கும் பங்கருக்கு உள்ளேயே இருந்த நாங்கள். பக்கத்தில எல்லாம் செல் வீழுந்து வெடிச்சது. விடிய எழும்பிப் பார்க்கேக்க எல்லாச் சனமும் ஒடினாங்கள். செல்லும் ரவுண்ஸ்ம் வந்துகொண்டிருக்க நாங்களும் எழும்பி ஓடினம். ஆஸ்பத்திரிக்கு முன்னால ஓடி வந்தநாங்கள். தண்ணிக்குள்ள விழுந்தடிச்சு ஓடி வந்தநாங்கள். அப்பிடி வரேக்க தான் காயப்பட்ட நாங்கள். நிறையப் பேர் செத்தவை. நிறையப் பேர் காயப்பட்டவை.

தங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருந்து அங்காள போக வேண்டாம் என்று சொல்லி விடுதலைப் புலிகள் தடுத்தாங்கள். அம்மா சகோதரங்கள் எல்லாம் அங்கால. ஒருதருமே இங்கால வரேல்ல. நானும் என்ர மனுசனும் பிள்ளையும் தான் வந்திருக்கிறம் அவையின்ர நிலமை என்ன என்று ஒன்றுமே தெரியாது.

நாளாந்தம் செல்லடி. நாளாந்தம் ஆட்கள் சாகிறான்கள். நாளாந்தம் ஆட்கள் காயப்படுறான்கள். யார் உயிரோட இருப்பினம் யார் சாவினம் என்று தெரியாது. இப்படியான நிலைமையில எந்த நேரமுமே பதங்குழிக்குள் தான்.

இங்க வரேக்க ரெண்டு மூன்று சோதணைச்சாவடி வைச்சு செக் பண்ணி அனுப்பினவை. ரெண்டு பாக் கொண்டுவந்தனாங்கள். சோதிச்சவை. கொண்டுவந்த நகை காசு எவ்வளவு என்று பதிஞ்சுதான் விட்டவை. மற்றும்படி பிரச்சினையில்லை. நேற்று (21 ஏப்ரல்) ஒழுங்கான சாப்பாடு இல்லை. இன்றைக்கு கொஞ்சச் சாப்பாடு தான் வந்தது. எங்களுக்கு கிடைக்கேல்லை. மதியச்சாப்பாடு பின்நேரம் தந்தவங்க. அதுவும் ஒரு ஆளுக்குக் காணக் கூடியது தான் வந்தது. சரியா கஸ்டப்படுறம். ரெண்டு மூன்றுநாள் குழிப்பிலை வந்து அப்படியே சேறு சகதிகளோடு இருக்கிறம். உடுப்புகளும் நனைந்து அப்படி அப்படியே இருக்கிறம். மருந்து கூட ஒருக்கட்டினபடி அப்படியே இருக்கு. நேற்றுப் பின்நேரம் (ஏப்ரல் 21) தான் புதுமாத்தளனில இருந்து வவுனியாவுக்கு கொண்டு வந்தவை.

மாத்தளனில இருந்து இராணுவத்தின்ர காம்புக்கு ஓடி வந்தநாங்கள.; அந்த இடம் சாலை என்று சொல்றவை. அங்க இருந்து இன்னொரு இடத்திற்குப் போய் அங்கயும் சாப்பாடில்லாமல காஞ்சு கிடந்து ஓமந்தைக்கு கொண்டு போனவையள். பிறகு வவுனியாவுக்கு கொண்டு வந்திரக்கினம்;.

அங்க இயக்கம் பண்ட அடிச்சிருக்கு. பண்டுக்கு இங்கால கணினமான அளவு தண்ணி. அதைத்தாண்டி இங்கால வர பெரிய கடல்துண்டு மாதிரி. அதுக்குள்ளயும் இடுப்பு அளவுக்குத் தண்ணி. அதுக்ள்ளயும் பிள்ளைகள் தாண்டு ஓடேலாம. சரியா கஸ்ரப்பட்டிட்டம். அந்த நிலைமையை என்ன என்று சொல்வதென்றே தெரியாது.”

இவருடைய வாக்குமூலம் இரு வேறுபட்ட இராணுவங்களுக்கு மத்தியில் சிக்குண்ட மக்களின் நிலையைத் தெளிவுபடுத்துகிறது.

David_Chater_Aljazeera_Journalist4.
யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருகின்ற மக்கள் பலரைச் சந்தித்த அல்ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் டேவிட் சாட்டருடைய வாக்கு மூலமும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”பெருமளவிலான அகதிகளுடன் கதைத்ததில் அவர்கள் தமிழ் புலிகளின் தலைமை தங்களை நடத்தியது தொடர்பாக மிகவும் வெறுப்புடன் உள்ளனர். புலிகளின் தலைமை தொடர்பாக தமிழ் பொது மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைமை, தமிழ் மக்களுக்கான தாயகத்தை உருவாக்குவதற்காக போராடுபவர்கள், அவர்களை சுரண்டுகிறார்கள், அவர்கள் யுத்தத்தில் இருந்து தப்பியோடும் போது சுடுகின்றார்கள், யுஎன் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் களவாடுகின்றனர்.”

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுத்தத் தவிர்ப்புப் பகுதியில் பொருட்களின் விலை உச்சமாக இருப்பதாக ஐபிசி வானொலிச் செய்திகள் தெரிவித்து இருந்தது. கடந்த பல மாதங்களாக ஐசிஆர்சி ஊடாக யுஎன் உலக உணவுத்திட்டம் அனுப்புகின்ற உதவிகளைத் தவிர எவ்வித விநியோகமும் இருக்கவில்லை. இந்த விலைக்கு விற்கப்பட்ட உணவுகள் என்பது உணவுத் திட்டத்தின் கீழ் அனுப்பப்ட்ட உணவுப் பொருட்களே. தற்போது வெளியேறும் மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்கும் விபரங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன. யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த தந்தையொருவர் அல்ஜசீரா தொலைக் காட்சியில் தாங்கள் அங்கு சாப்பாட்டுக்கு மிகவும் கஸ்ரப்பட்டதாகவும் யுஎன் அனுப்பிய உணவுகளை வாங்கவும் தங்களிடம் காசு இருக்கவில்லை என்றும் அவை உச்ச விலைக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கை இனவாத அரசு தமிழ் மக்கள் மீது பொருளாதாரத்தடையை விதித்து உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு இராணுவத் தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடாத்த தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய புலிகள், அந்த இனவாத அரசு சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள அனுப்பிய குறைந்தபட்ச உணவையும் மக்களிடம் சேரவிடாமல் தடுத்து வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தங்களது பாதுகாப்பிற்காகத் தடுத்து வைக்கப்பட்ட மக்களுக்குக் கூட அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உணவைக் கூட புலிகள் அம்மக்களுக்க வழங்கவில்லை. குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பம் உணவில்லாமல் பட்டினியால் பட்ட அவஸ்தையையை அத்தந்தை தொலைக்காட்சியில் விபரித்தார்.

IDP_Camp_Barbed_Wire 5.
கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முன் டிசம்பர் 6ல் வவுனியாவிற்கு வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய தொலைபேசிப் பேட்டியில் குறிப்பிட்ட கருத்துக்களை இங்கு மீளப் பதிவு செய்கிறேன்.

சந்திரன் தனது மகளுடன் வவுனியாவுக்கு வந்திருந்தார். குடும்பமாக யாரும் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிப்பதில்லை. அதனால் குடும்பத்தின் ஒரு உறுப்பினரே வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார். அதனால் இளம் குடும்பஸ்தரான சந்திரன் தனது மனைவியை பிணையாக விட்டு வவுனியாவுக்கு வந்துள்ளார். அவரது மகள் அவருக்கு பாதுகாப்புக்காக வந்திருக்கிறார். ‘அப்பாவை தனிய விட்டால் பிடிச்சுக் கொண்டு போவினம் என்று தான் அப்பாவோடு வந்தனான்’ என்று மழழை மாறாத குரலில் அச்சிறுமி கூறுகிறார். ‘அம்மாவுக்கு பாஸ் கொடுக்கினம் இல்லை’ என்றும் அச்சிறுமி கூறினார்.

சந்திரன் தினம் தினம் வேலை செய்து சம்பாதிப்பவர். அன்றாட வேலை கிடைத்தால் தான் அவரது வீட்டில் அடுப்பு எரியும். இருந்தும் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது குடும்பம் தங்களாலான உதவிகளைச் செய்கிறார்கள். மாவீரர் தின நிகழ்வுகளுக்கும் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளோடு நின்று தோள் கொடுத்தவர்.

‘என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை’ என்கிறார். ‘வெற்றியோ தோல்வியோ இந்தச் சண்டை இத்தோடு முடிந்துவிட வேண்டும்’ என்று விரக்தியுடன் கூறிய அவர் ‘எப்படியாவது திரும்பியும் கிளிநொச்சிக்குச் சென்று தனது மனைiவியை அழைத்து வர வேண்டும்’ என்கிறார். ‘பண வசதி உள்ளவர்கள் வீட்டையும் வளவுகளையும் காசையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு குடும்பமாக வெளியேறுகிறார்கள். குறைந்தது 50, 60 இலட்சம் பெறுமதிக்கு அவர்களுக்கு கொடுத்தால் பாஸ் கிடைக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். ‘ஆனால் அன்றாடம் காட்சிகளான தங்களுக்கு கொடுக்க எதுவும் இல்லை. வருவதை கண்டு கொள்ளத்தான் முடியும்’ என்கிறார்.

‘வாராவாரம் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கணக்குப் பார்த்து நிவாரண உணவு வழங்கப்படுகிறது’ என்று கூறிய சந்திரன் ரிஆர்ஓ விடம் இருந்து தங்களுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை எனத் தெரிவித்தார். அவர்களுடைய உதவி குறிப்பிட்ட கொஞ்சப் பேருக்கே வழங்கப்படுகிறது’ என்று கூறினார். சந்திரன் மேலும் கூறுகையில் ‘குடில்கள் அமைக்க வழங்கப்பட்ட பொருட்களிலும் பெருமளவிலான பொருட்கள் கள்ளச் சந்தையிலேயே விற்கப்படுகிறது’ என்றார். ‘கஸ்டப்பட்டவர்களின் நிலைதான் மோசமாக உள்ளது’ என்றார். (தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன்)

சந்திரனுடைய மனைவி இன்னமும் யுத்தப் பகுதியிலேயே உள்ளார். இரு வாரங்களுக்கு முன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அதன் பின் அவருடன் எவ்வித தொடர்பும் இல்லை.

இங்கு வணங்கா மண் என்றும் ரீஆர்ஓ என்றும் வெண்புறா என்றும் கண்ணீர் வெள்ளம் என்றும் இரத்த வெள்ளம் என்றும் சேர்த்த நிதியில் அந்த மக்களுக்கு எதுவும் சுவறவில்லை. கடைசியில் இனவாத அரசு தனது முகத்தைக் காப்பாற்ற அனுப்பியதையும் விலைக்கு வித்துள்ளார்கள். ஆனால் புலம்பெயர் தேசத்தில் உள்ள வானொலிகளும் தொலைக்காட்சிகளும் ரிஆர்ஓ அங்கு வெட்டிக் கிழப்பதாக கதைசொல்கின்றன.

Wanni_War_Welfare_Camp6.
தப்பி வந்த மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குவதற்கு அரசு தன்னைத் தயார்படுத்தி இருக்கவில்லை. உலகிலேயே மிகப்பெரும் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறும் இலங்கை அரசு அந்த மக்கள் எவ்வாறான சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதை அறியாதவர்கள் அல்ல. அனைத்து சர்வதேச உதவி அமைப்புகளையும் யுத்தப் பகுதிகளுக்குள் செல்லத் தடைவிதித்து தங்கால் அனைத்தும் முடியும் என்றவர்கள் அதற்கு ஏற்ப தங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இராணுவ முன்னேற்றத்தில் காட்டும் தீவிரத்தை மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசு காட்டவில்லை.

புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வர்ணிக்கும் அரசு அவர்களால் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி இருந்தது. பெருமளவிலான இழப்புக்கள் செல் தாக்குதல்களால் நிகழ்ந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் புலிகளை ஒழிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே அரசு தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றுள்ளது. இந்த மக்களின் உயிரிழப்புகளிற்கும் ஏற்பட்ட அவலங்களிற்கும் இலங்கை அரசும் புலிகளும் சமபொறுப்புடையவர்கள். இரு தரப்புமே மக்களுடைய நலன்களை கவனத்திற் கொள்ளவில்லை என்பதல்ல இருதரப்புமே மக்களை மண்முட்டைகளாகவே கருதி தங்கள் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டு உள்ளனர். புலிகள் மக்களை மண்மூட்டைகளாக தங்களுக்கு அரணாகப் பயன்படுத்த இராணுவமோ மக்களும் மண்ணும் என்று தமிழ் மக்கள் மீது செல்களை வாரி இறைத்துள்ளது.

இந்த அவலங்களுக்கு அரசாங்கம் ‘பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கை’ என்று நியாயம் கற்பிப்பது அயோக்கியத்தனமானது. தனது அதிகாரத்தை நிலைநாட்ட மேற்குலகை வாயடைக்கச் செய்ய அவர்கள் பயன்படுத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற அதே தந்திரோபாயத்தை இலங்கை அரசும் கையாண்டு உள்ளது. 1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது பெரும்பாலும் ஜேவிபி க்கு அதரவான சிங்கள இளைஞர் யுவதிகளை நிர்வாணமாக்கி ராயர் போட்டு கொழுத்தியும் கொன்றொழித்த அரசு இன்று அதனிலும் இலகுவாக தமிழ் மக்களை எவ்வித பாரபட்சமும் இன்றி விமான மற்றும் செல் தாக்குதல்களை நடாத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றொழித்து உள்ளது. அதனிலும் பல்லாயிரக் கணக்கானவர்களை காயப்படுத்தி உள்ளது.

இந்த அவலத்தில் புலிகள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ என்று சொல்லிய வன்னி மக்களை தங்களுக்கு மண்மூட்டையாக்கி இலஙங்கை இராணுவத்தைக் கொண்டு அவர்களை அழித்ததில் புலிகளுக்கும் சம பொறுப்பு உண்டு. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள், தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பம்மாத்து கோரிக்கைகளையும் கோசங்களையும் வைத்து நீண்ட நாளைக்கு புலிகளால் அரசியல் நடத்த முடியாது.

புலிகள் பலவீனமாவது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தும் என்பதோ புலிகள் ஆயுதங்களைப் போடும்படி கேட்பது சரணடையக் கூறுவது தவறான முன்னுதாரணமாக முடியும் என்று கூறுவதும் இவை இலங்கை அரசாங்கத்தை பலப்படுத்தும் என்பதும் யதார்த்தத்தில் வன்னி மக்களுக்கு எவ்வித நலனையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதில்லை.

வன்னி மக்கள் இரு இராணுவங்களுக்கு இடையே சிக்குண்டு தங்கள் உயிரை தினம் தினம் இழக்கின்றனர். இந்த அவர்களைப் பதம்பார்க்கும் இரு இராணுவமும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் வன்னி மக்கள் மிகவும் நிம்மதியாக தங்கள் வாழ்வை நகர்த்துவார்கள். குறைந்தபட்சம் தங்களை நோக்கி ஆயுதங்களை நீட்டும் இரு தரப்பில் ஒரு தரப்பாவது ஆயுதங்களைக் கீழே போடுமாக இருந்தால் அம்மக்கள் ஓரளவுக்காவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இன்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் மக்கள் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு மற்றைய ஒரு இராணுவத்தை எவ்விதம் கையாள வேண்டுமோ அதற்கேற்ப கையாளுவார்கள். அதனை அந்த மக்களிடமே விட்டுவிடலாம். (”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்)

தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய அவசரமான அவசியமான ஒரு நிலை முன் எப்போதையும் விட இப்போது அதிகரித்து உள்ளது. அதற்கு முன்னதாக இன்னமும் யுத்தப் பகுதிக்குள் உள்ள மக்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும். வெளியேறி வந்தவர்கள் கௌரவமாக நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வெளியேறி வந்தவர்களை நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் வருடக் கணக்கில் தடுத்த வைக்கும் திட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டும். இதற்கான போராட்டங்கள் தமிழ் மக்களால் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களையும் இணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

43 Comments

  • X and Y
    X and Y

    Thank you Mr. Jeyapalan,
    The fundamental thinking of Tamils was always about profit and lost. That is why our fundamental political rights were crushed by Srilankan governments last 25 years.

    The Tamils from Sri Lanka should shame themselves that they are living in western countries with the blood of the suffering Tamil people in Sri Lanka.

    If they want to forgive themselves, they should serve the suffering IDP people in Wanni.

    Reply
  • செல்வன்
    செல்வன்

    மனித நேயமுள்ள மக்கள் நாம் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம். வன்னியிலிருந்து ஆயிரக் கணக்காக இடம்பெயர்ந்து வவுனியாவுக்குள் வரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவும் நோக்குடன் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. உங்கள் சகோதரர்களுக்கு உதவுங்கள் ……….என ஊட கத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கேட்டுக்கொண்டுள்ளார்

    Reply
  • புன்னியாமீன்
    புன்னியாமீன்

    அரசியல் கண்ணோட்டத்தில் நோக்காது மனிதாபிமான சிந்தனையுடன் நோக்குமிடத்து ஜெயபாலனின் இக்கட்டுரை காலத்தின் தேவையுணர்ந்த ஒரு முக்கிய கட்டுரையாகவே திகழ்கின்றது.

    அரசாங்கத் தகவல்களின்படி வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் 2 இலட்சம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். ஏற்கனவே இடம்பெயர்ந்து வந்தவர்களில் நோய்வாய்ப்பட்டுள்ள பல நோயாளிகள் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் நேரடியாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டபோது இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் மனோநிலையில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதையும் மனோநிலைப் பாதிப்புக்களை சீர்செய்ய ஒரு நீண்டகாலம் தேவைப்படுமென்பதையும் உணர முடிகின்றது.

    எவ்வாறாயினும் அரசியல் கண்ணோட்டங்களை ஒரு புறம் வைத்துவிட்டு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்காக அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது அவசரமும், அவசியமுமான தேவையாகும்.

    இத்தேவை நிறைவேற்றுவது அரசியல் குரோதங்கள், இனபாகுபாடுகள் அனைத்தையும் கடந்து மனிதாபிமானம் என்ற நோக்குடன் சிந்திக்க வேண்டியது மிகமிக முக்கியமானதாகும்.

    சில தரவுகளை வெளிப்படையாக எழுதியுள்ள ஜெயபாலனுக்கு பாராட்டுக்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    புலம் பெயர் மக்கள் உதவுகிறார்களோ இல்லையோ சிறீலங்காவில் உள்ள சிங்கள மக்கள் உதவிகளை வழங்க தொடங்கி விட்டார்கள்.

    அனுராதபுரம் வைத்தியசாலையில் தாயை இழந்த ஒரு குழந்தை பசியில் பாலுக்காக அழுத போது பக்கத்தில் இருந்த ஒரு சிங்களப் பெண் ஓடிச் சென்று அந்தக் குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தன் குழந்தையோடு அணைத்து தாய்ப் பால் கொடுத்த அந்த சிங்களப் பெண்ணைப் பார்த்த போது தன்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை என கண்ணீர் மல்க ஒரு இராணுவ அதிகாரி சொன்னதை லக்பிம வேதனையோடு வன்னி மக்கள் நிலை குறித்து நடப்பதை எழுதியிருந்தது. இங்கே தமிழும் சிங்களமும் மறந்து மனிதம் தெரிகிறதே?

    சுனாமி காலத்தில் கூட உடனடி ஆதரவுக் கரம் பாமர சிங்கள மக்களிடம் இருந்தே அங்குள்ள தமிழர்களுக்கு சென்றடைந்ததை எவராலும் மறுக்க முடியாது. புலிகள் கொலை செய்வார்கள் போகாதீர்கள் என்று தடுத்ததையும் மதியாமல் ஒரு பெளத்த பிக்குவானவர் உணவு உடைகளோடு சென்று உதவியது உண்மையான நிகழ்வு.

    புலம் பெயர் பட்டாளங்களும் மக்களை காவு கொள்ளும் ஒரு போருக்காக உண்ணா விரதங்களில் இருந்து தம்மை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்களே ஒழிய உண்ணாமல் இருக்கும் அந்த மக்களுக்கு கப்பல் விட எவருமே ஒரு அழைப்பு கூட விடவில்லை. உங்களுக்கு கேடயமான அந்த மக்கள் ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை.

    இன்றைய தேவை அரசியல் தீர்வு குறித்து பேசுவதல்ல. அந்த அரசியல் தீர்வை நீங்கள் கொடுக்கப் போகும் அந்த அப்பாவி மக்களுக்கான ஆயுளை கொடுக்கும் உதவி. இறந்தவர்களுக்காக அழுவதை விட இருப்பவர்கள் அழாமல் இருக்க வழி செய்வதே இன்றைய தேவை. அதைச் செய்ய இணைந்து செய்யும் ஏதாவது முயற்சியில் இந்த அரசியல் பேதங்களை விட்டு விட்டு இறங்குவோம்.அதையும் விளம்பரமாக்கி ஆதாயம் தேடாதீர்கள்.

    Reply
  • suban
    suban

    உந்த வணங்கா மண்ணை பிரிட்டிஸ் அரசாங்காத்தினூடாக உடனடியாக அனுப்பவிவைக்கும்படி டொக்ரர் மூர்த்திய மன்றாடுகிறோம்.

    Reply
  • உடும்பு
    உடும்பு

    /புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்கள் யுத்தப் பகுதியில் இருந்து வெளியெறி வரும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவோ அவர்களுடைய துயர் துடைப்பதாகவோ இல்லை. அவர்களின் பெயரில் ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்படுகிறது. அதில் அம்மக்கள் பகடைக்காய்களாக்கப்பட்டு உள்ளனர்./
    Tamil intellectuals?? (interpreters), “NOT REPRESENTED” the “PEOPLE”- They only interpreted the tamil people according to their deep psychological source, which went very deep into the perspective of the countries,they live.They behave “SOLICITOR”, that is…they didn’t represent feelings as advocates for their clients(Tamil people), they prepared only pure legal documents according to their “SOURCE”-for profit.

    Reply
  • murugan
    murugan

    “இவர்களுடன் நேரடியாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டபோது இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் மனோநிலையில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதையும் மனோநிலைப் பாதிப்புக்களை சீர்செய்ய ஒரு நீண்டகாலம் தேவைப்படுமென்பதையும் உணர முடிகின்றது.”

    புலம் பெயர் சூழலிலும் தீபம் ரிவி ஜிரிவி புதினம் சங்கதி போன்றவற்றால் பொது மக்கள் புத்தி பேதலித்து கடும் மன அழுத்தம் தரும் உந்துதலால் உருவேற்றப்பட்டுள்ளார்கள். அது மட்டுமன்றி சின்னஞ் சிறார்களும் பெரியவர்களுக்கு இணையாக களமிறக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் இங்கு உருவாகும் இளஞ் சமுதாயம் வன்முறையாளர்களாக, இரக்கமற்றவர்களாக, சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறும் அபாயமே தென்படுகின்றது.

    புலியும் தமிழ் ஈழமும் முடிவுக்கு வரும் நிலையில் இங்கும் உளவியல் சார்ந்த சேவைகள் தமிழ் மக்களுக்கு அவசியமாகின்றது.

    Reply
  • thevi
    thevi

    உடனே ஊருக்குப் போகவேண்டும் போலவும் அந்த மக்களின் கரங்களை இறுக்ப் பற்றிக் கொள்ள வேண்டும் போலவும் உள்ளது. புலம் பெயர்ந்த எம்மை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? துரத்தியடிப்பார்களா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சுபன்னிடம் சேர்ந்து நானும் டாக்டர் மூர்த்தியிடம் மன்றாடுகிறேன். காலம் தாழ்தாது உடனடியாக அதை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கும் படி.

    Reply
  • மாயா
    மாயா

    // புலம் பெயர் சூழலிலும் தீபம் ரிவி ஜிரிவி புதினம் சங்கதி போன்றவற்றால் பொது மக்கள் புத்தி பேதலித்து கடும் மன அழுத்தம் தரும் உந்துதலால் உருவேற்றப்பட்டுள்ளார்கள். அது மட்டுமன்றி சின்னஞ் சிறார்களும் பெரியவர்களுக்கு இணையாக களமிறக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் இங்கு உருவாகும் இளஞ் சமுதாயம் வன்முறையாளர்களாக, இரக்கமற்றவர்களாக, சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறும் அபாயமே தென்படுகின்றது.- murugan //

    இவர்கள் தமிழ் வளர்க்கிறார்களே இல்லையோ? தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

    இங்குள்ள குழந்தைகள் கொழும்பில் தனியா இறங்கினால் கூட கொழும்பிலிருக்கும் தமிழரிடமே ஏமாந்து போவார்கள் என்று நினைத்ததுண்டு. இந்த நாட்டு சட்டங்களை பார்த்து பழகிய சின்னஞ் சிறுசுகள் எதையும் உண்மை என்று நம்பும் என்று நினைச்சன். 5 வருசம் கொழும்பில் இருந்த என்னிடமே…என் phoneக்கு காசு அப்லோட் பண்ணுறன் என்று அவன் phone க்கு காசை அப்லோட் பண்ணிக் கொண்டான் கொழும்பிலிருக்கும் ஒரு யாழ்பாணத் தமிழன்.

    அதுக்கு அங்க போகத் தேவையில்லை. அங்க இருந்த முக்கால் வாசிப் பேர் வெளிநாடுகளுக்கு வந்துட்டாங்கள் போல ………. இங்க நடக்கிற கூத்துகள். போராட்டம் முழுக்க பால்குடி பிள்ளைகளை முன்னால தள்ளி விட்டு தூண்டி விட்டதுகள் பின்னால இருந்து மகிழ்வாய் சிரிக்குதுகள். வெள்ளைக் காகிதத்தில கீறல் விழுந்திட்டு. கூட்டணி 1970 களில செய்தவற்றை இங்க உள்ள பெரிசுகள் பச்சைப் புள்ளைகளை வைத்து செய்யுதுகள்.

    பெற்றோரைத் தவிர யாராலும் இதைத் தடுக்க ஏலாது. இடைத் தங்கல் முகாம்களுக்கு வந்தவங்களுக்கு மன அழுத்த பரிகாரம் செய்றதுக்கு முன்ன புலம் பெயர்ந்தோருக்கு பரிகாரம் செய்ய வேணும். இல்லை இங்குள்ள குழந்தைகள் பின்லாடன் (பிரபாகரன்) குறூப்பாக கைதாகி சிறை செல்வது உறுதி.

    மேலைத் தேசங்கள் இன்று வன்னித் தமிழரோட வேதனையில் எழுந்த கொந்தளிப்பாக பொறுக்கிறார்கள். இவை தொடரும் பட்சத்தில் பொறுமையில் எல்லை தகர்ந்துவிடும். புத்தியுள்ள பெற்றோர்களே உடனடியாக மேலே உள்ள தொலைக் காட்சிகளை – வானோலிகளை – இணையதளங்களை குழந்தைகள் பாராதிருக்க பண்ணுங்கள்.

    அதுவே புலம் பெயர் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் உதவி. அவர்களாவது வாழும் நாட்டில் நிம்மதியாக வாழட்டும்.

    Reply
  • மாயா
    மாயா

    என்ன சுபன், சாப்பிட வழி பண்ணுங்கோ எண்டா? “வாயிலமண்” லண்டன் ஆயுதக் கப்பலை இறக்க வழி சொல்லுறியள்…. இப்பதான் பசியோடயாவது குண்டுச் சத்தம் இல்லாமல், நிம்மதியா நிலத்திலயாவது படுக்கிறாங்கள். வேற ஏதாவது வழி இருந்தா சொல்லுங்கோ?

    Reply
  • palli
    palli

    முருகா இதை அம்பி அக்கா என ஒருவர் தீபம் நேரடி பேட்டியில் இப்படி சொன்னார். மாவீரர் உரையில் எமது தலைவர் சொன்னார். போராட்டம் தொடரும் ஆனால் வடிவங்கள் மாறுமென. அந்த வடிவம்தான் இன்று புலம் பெயர் சிறுவர்களை போராட்டத்தில் (சதிராட்டம்) குதிக்க வைத்ததாம். ஆக அவர்களது வக்குமூலமே இது மக்களை காக்க தொடங்கிய போராட்டமல்ல என்பது. சரி தலைவரின் நேரடி பார்வையில் பல பினாமிகளின் தலமையில் (தளபதிகள்) இப்படியான போராட்டம் புலம் பெயரில் நடக்கும். இதில் சில கரும்புலி தாக்குதலும் (பட்டிணி புலி) நடக்கலாம். என்ன ஒருமாற்றம் தேசியதலை சர்வதேச தலையாக மாற உள்ளது (தப்பினால்).

    பாடசாலைக்கு போகாமல் சதிராட வாங்கோ என ஒரு ஊடகத்தில் அழைக்கிறார்கள் எனில் எம்மைவிட முட்டாள் இனம் இருக்குமா?? ஒரு சதிராட்டத்தில் கலந்து கொண்ட மாணவியிடம் கேட்டேன் அங்கு போய் எப்படி கதினியள் என (தமிழ் தெரியாது அதனால்)அவர் சொன்னார். மகிந்தாவே டவுண் டவுண். சோனியாவே டவுண். என அடுத்த எனது கேள்வி மகிந்தா யார்? அவரின் பதில் சிறிலங்கா ஜனாதிபதி. அப்ப சோனியா யார்? அவர் சிறிலங்கா பிரதமர். ஏன் அங்கு சண்டை நடக்குது? எங்கடை அப்பா ஆக்களின்ரை கன்றீக்கை (நாட்டுக்கை) மகிந்தாவும் சோனியாவும் அவையின்றை ஆமியை விடுகினமாம். இதை யார் ங்களுக்கு சொல்லியது?? அப்பாவும் அங்கு உன்னாவிரதம் இருக்கும் அண்ணாக்களும்தான். இதன் பின்னும் அந்த குழந்தயை கஸ்ற்றபட வைக்க பல்லி விரும்பவில்லை. ஆகவே இந்த போலி சதிராட்டத்தில் காலத்தை போக்காமல் அங்கு இதுவுமேயின்றி வந்திருக்கும் உறவுகளுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்போம் செயல்படுவோம் ஒன்றாய்.

    Reply
  • உடும்பு
    உடும்பு

    one of the example of “SOURCE” was the Prediction of “INTERPRETERS” through “western research documents”, about “Muslim animosity” and directly applied(adviced ltte)in Srilanka- the same card is now played by srilankan government as “war against terrorism”. I ask the people, now speaking “Humanitarian situation in Vanni” with emotional bubbles, that, “why can’t these interpreters could “PREDICT” the present “CATASTROPHE IN VANNI”, when ltte coerced the vanni people towards puthukudiyirupu like cattles- “prevention is better than cure”-did they slept?.

    Reply
  • thevi
    thevi

    இங்குள்ள குழந்தைகள் கொழும்பில் தனியா இறங்கினால் கூட கொழும்பிலிருக்கும் தமிழரிடமே ஏமாந்து போவார்கள் என்று நினைத்ததுண்டு”

    இங்குள்ள குழந்தைகள் குறித்து நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பள்ளிக்கு கொடுத்து விடும் மதிய சாப்பாட்டை திருப்பிக் கொண்டு வருவார்கள். பெற்றோரின் பேச்சுக்கு பயந்து அதை கொட்டி விட்டு வரத் தெரியாத குழந்தைகள். வீட்டுப் பாடம் செய்யவில்லை என்றால் அதை மறைக்கத் தெரியாமல் உண்மையை கூறி பெற்றோரின் கண்டித்தலை முகம் கொடுப்பவர்கள் புலம் பெயர் குழந்தைகள்.

    ஆனால் இன்றைக்கு பெற்றோரின் மீதுள்ள நம்மபிககையால் புலிக் கொடியோடு அவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்கிறார்கள். பெற்றோர் தமது குழந்தைகளுக்கு செய்யும் இந்த துரோகத்திற்கும் நிச்சயம் விளைவுகள் உண்டு.

    Reply
  • palli
    palli

    //ஆனால் இன்றைக்கு பெற்றோரின் மீதுள்ள நம்மபிககையால் புலிக் கொடியோடு அவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்கிறார்கள். பெற்றோர் தமது குழந்தைகளுக்கு செய்யும் இந்த துரோகத்திற்கும் நிச்சயம் விளைவுகள் உண்டு.//

    நிதர்சன உண்மை உண்மை உண்மை.

    Reply
  • Raj
    Raj

    தேவியின் துல்லியமான கருத்தினை முற்றாக ஆமோதிக்கும் புலனல்ல புலம்பெயர்ந்து வந்துள்ள மனிதத்தை மட்டுமே நேசிக்கும் பெற்றோரில் நானும் ஒருவன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //சுபன்னிடம் சேர்ந்து நானும் டாக்டர் மூர்த்தியிடம் மன்றாடுகிறேன். காலம் தாழ்தாது உடனடியாக அதை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கும் படி.- Chandran.raja //

    உவர்களிடம் ஏன் மன்றாட வேண்டும். கோரிக்கையாகவே முன் வையுங்கள். அதுபோல் தமிழ் போரமை விட்டுவிட்டீர்கள். அவர்களும் கண்ணீர்த் துளிகள் என்ற பெயரில் சுருட்டிய பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்தின் மூலமோ அல்லது ஐ.நாவின் மூலமோ அந்த மக்களிடம் சேர்க்கச் சொல்லுங்கள். அவர்கள் மறுத்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தாராளமாக எடுக்கலாம் அதற்காக அவர்களுக்கு நீங்கள் வங்கி மூலம் பணமனுப்பிய ரசீதுகளை கவனமாக வைத்திருங்கள். இவர்கள் GTV மற்றும் DEEPAM தொலைக்காட்சிகளினூடாக பிச்சை எடுத்ததின் சில ஒளிப்பதிவுகள் என்னிடமுள்ளன. அது போல் அந்த ஒளிப்பதிவுகள் உங்களிடமிருந்தாலும் அதனைக் கவனமாக வைத்திருங்கள். உவர்களை சும்மா விட்டு வைப்பது அந்த வன்னி மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

    Reply
  • mukilvannan
    mukilvannan

    jeyapalan just how terrified should the tamils be by these terrifying findings?well,these things are notoriously hard to measure,
    but at a rough approximation i would judge that defence,lk should be somewhere between innocent civilions and anti tamils propaganda.

    news that is bound to send shock waves around the tamil community.we knew we now have a gothyapaja the defence man campaign.

    these findings must have come as a body blow to your rajapaksa ailing campaign

    Reply
  • BC
    BC

    //மாயா-இடைத் தங்கல் முகாம்களுக்கு வந்தவங்களுக்கு மன அழுத்த பரிகாரம் செய்றதுக்கு முன்ன புலம் பெயர்ந்தோருக்கு பரிகாரம் செய்ய வேணும்.//
    மாயா சொன்னது சரியே.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பார்த்திபன்
    உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. காலம்காலமாக ருசி கண்ட பூணைகள் இலகுவில் மனம் இளகாது என்பதையும் அறிவேன்.சட்டரீதியாக இதை அணுகுவதே காலச்சிறந்தது.

    Reply
  • santhanam
    santhanam

    பல்லியின் கருத்தில் நான் உடன்பாடு ஏன்எனில் பெற்றோர் புலம்பெயர்ந்த தேசத்தில் கடந்த தசாப்தமாக சதுரங்கம் ஆடினார்கள் கடந்த வருடம் பாலப் போன விருமான்டி பறித்து இளசுகளிடம் கொடுத்து விட்டார் இப்ப அவர்களின் வாரிசுகளிற்கு மட்டும் தான் உரிமை அந்த சதுரங்கத்தில். அவர்கள் கொஞசம் வித்தியாசமான பானியை பின்பற்றுகிறார்கள். முன்னால் பிள்ளைகளைவிட்டு பின்னால் நின்று ரசிக்கிறார்கள் இதுதான் வித்தியாசம்.

    Reply
  • மாயா
    மாயா

    பார்த்திபன் மற்றும் சந்திரன் ராஜா

    அங்கு வந்துள்ள மக்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மக்களை காப்பாற்ற என்று புலம் பெயர் மக்களிடம் கோடிக் கணக்கில் வாங்கியிருக்கிறார்கள். இப்போது மோதல் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கு சிங்கள மக்களும் , வவுனியாவிலுள்ள மக்களும் உதவிகளை வழங்கி வருகின்றனர். உண்மையிலேயே புளொட் அங்கு நன்றாக பணி புரிவதாக அங்கிருந்து புளொட் சாரா நண்பர் ஒருவர் தெரிவித்தார். ஏனையவர்களும் தமது பங்கை செய்ய முன் வர வேண்டிய தருணம் இது.

    ஒரு லட்சத்துக்கு மேல் மக்கள் வந்தால் அவர்களுக்கு தேவையானதை உடனடியாக செய்வது கடினம். அவர்கள் எமது உறவுகள். அவர்களுக்காக உதவ வேண்டிய நேரம். வணங்கா மண் பெற்ற உதவிகளை பெற்று செஞ்சிலுவை சங்கம் வழி அனுப்ப முயல வேண்டிய நேரம் இது. அவர்களாக அதை செய்யாதவிடத்தில் அந்த நிகழ்வுக்கு கொஞ்சம் பிரித்தானிய அரசியல்வாதிகள் வந்தார்கள். அவர்கள் மூலம் முயலலாம். இல்லாவிட்டால் இவர்களது உண்மைகளை அவர்களைப் போன்றவர்களுக்கு சொல்வதுதானே?

    Reply
  • மாயா
    மாயா

    மோதல் பகுதிகளில் இருந்து வந்த மக்களை நோக்கி புலிகளைப் போலவே படையினரும் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். நம்பி வாழ்ந்த புலிகளும் , நம்பி வந்த படையினரும் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இறந்த அல்லது காயமடைந்த மக்கள் பாவப்பட்டவர்கள். அதற்காக வருந்த மட்டுமே முடிகிறது.

    அங்கு மீதியிருப்பவர்கள் பெரும் பாலும் இளம் வயதினாராகவே இருப்பதாக தெரிகிறது. அவர்களது உயிர்கள் தப்பி மீள வேண்டும் என்பதே எமது பிராத்தனை.

    Reply
  • Rohan
    Rohan

    சிறிது சிறிதாக கசியும் செய்திகள் இராணுவ அட்டூழியங்கள் தொடர்பான த்கவல்களைச் சொல்கின்றன.

    படையினர் தாம் போட்டு வைத்திருக்கும் முள் வேலிகளையும் ஆயுதக் காவலையும் விலக்கிக் கொள்ளும் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை பொது மக்கள் அவர்களது முகாம்களில் மிச்சமாக இருப்பர்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //வணங்கா மண் பெற்ற உதவிகளை பெற்று செஞ்சிலுவை சங்கம் வழி அனுப்ப முயல வேண்டிய நேரம் இது. அவர்களாக அதை செய்யாதவிடத்தில் அந்த நிகழ்வுக்கு கொஞ்சம் பிரித்தானிய அரசியல்வாதிகள் வந்தார்கள். அவர்கள் மூலம் முயலலாம். இல்லாவிட்டால் இவர்களது உண்மைகளை அவர்களைப் போன்றவர்களுக்கு சொல்வதுதானே? – மாயா//

    உண்மையில் இவர்களாக முன்வந்து சேர்த்த பணத்தையும், சேர்த்த பொருட்களையும் அந்தத மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினூடாகவோ அல்லது ஐ.நாவின் மூலமாகவோ உடனடியாக அனுப்ப ஆக வேண்டியன செய்ய வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதில் தப்பில்லை. இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட பிரித்தானிய அரசியல்வாதிகளிற்கு மட்டுமல்ல உலககிற்கும் இவர்களின் சுயரூபத்தைக் காட்டவும் செய்யலாம்.

    Reply
  • Rohan
    Rohan

    //மோதல் பகுதிகளில் இருந்து வந்த மக்களை நோக்கி புலிகளைப் போலவே படையினரும் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். நம்பி வாழ்ந்த புலிகளும் , நம்பி வந்த படையினரும் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இறந்த அல்லது காயமடைந்த மக்கள் பாவப்பட்டவர்கள். அதற்காக வருந்த மட்டுமே முடிகிறது.- மாயா//

    எமது புலம் பெயர் தமிழர்களின் தூதர்கள் சென்றோம் உண்டோம் ப்ட்ம பிடித்தோம் வந்தோம் என்று முடித்தார்கள். அவர்கள் இந்த இடைத் தங்கல் முகாம்கள் பற்றி சிலாகித்தும் பேசினார்கள். ஆனால் பிபிசி அம்முகாம்களின் பரிதாபம் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வரத்த்க்க எதிர்விளைவுகள் பற்றிய கரிசனை இன்றி, ஒரு தமிழர், தப்பி வரும் போது இராணுவம் சுட்டு உயிர் விட்டவர் தான் அதிகம் என்றும் சொல்லியுள்ளார்.

    மாயாவால் அதற்காக வருந்த மட்டுமே முடிகிறது. இந்த – குடை கொடி பிடிக்கும் -…….. நாவிழந்தோரையும் அவரகளுக்கு விளக்குப் பிடிக்கும் அடுத்தவர்களையும் கண்டித்து ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லையா?

    என் சகோட்கரனுக்குக் கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழையானால் சரி, அப்படித் தானே?

    Reply
  • மாயா
    மாயா

    //Rohan on April 24, 2009 10:29 pm சிறிது சிறிதாக கசியும் செய்திகள் இராணுவ அட்டூழியங்கள் தொடர்பான த்கவல்களைச் சொல்கின்றன. படையினர் தாம் போட்டு வைத்திருக்கும் முள் வேலிகளையும் ஆயுதக் காவலையும் விலக்கிக் கொள்ளும் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை பொது மக்கள் அவர்களது முகாம்களில் மிச்சமாக இருப்பர்?//

    இராணுவ அட்டூழியங்கள் அல்ல. அது எங்கும் நடக்கக் கூடியவை. அதில் மாற்றங்கள் வரும். வந்தவர்கள் சொன்ன தகவல்களின்படி வந்தவர்களில் பலர் புலி உறுப்பினர்கள். மக்களோடு வந்து சில தாக்குதல்களை நடத்த அனுப்பப்பட்டே உள்ளனர்.அதே அவர்களோடு வந்த மக்களே தெரிவித்துள்ளனர்.

    படையினர் முட்வேலைகளை போடாமல் ஒரே நேரத்தில் விட்டால் நாடு முழுவதும் இரத்த ஆறு ஓடும். அவர்களுக்கு தேவையான ஆயுதங்களைக் கொடுத்து தாக்குதல்களைக் கொடுக்க வெளிநாடுகளிலும் தென் பகுதியில் இன்னும் மறைந்து வாழும் புலிகளும் வழி செய்வார்கள்.

    25 – 30 வருடங்கள் புலிகளோடு இருந்த மன நிலை உடனடியாக மாறாது. அதற்கு சற்று காலம் வேண்டும். உலகமெல்லாம் பரந்து வாழும் படித்தவர்களாகவும் இங்கு பிறந்தவர்களாகவும் நாம் கருதிய மக்களையே பொய் பிரச்சாரங்கள் ஊடாக இந்த அளவு வீதிக்கு கொண்டு வந்து வன்முறையொன்றுக்கு தூபம் போட்டுள்ள புலிகள் அந்த அப்பாவிகளை பலியாக்க எந்த பொய்யையும் மனச் சாட்சியே இல்லாமல் செய்யக் கூடியவர்கள்.

    ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்களுக்கு ஒரேயடியாக அனைத்தையும் செய்வது இயலாத காரியம். புலிகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு புலம் பெயர் ஈழத் தமிழர்கள் இதுவரை உதவ முன்வரவே இல்லை. அதற்கான மன நிலையிலும் இல்லை. இதிலிருந்தே புலிகள் மக்களுக்காக போராடவில்லை. மக்களை வைத்துக் கொண்டு தமது எண்ணம் நிறைவேற போராடியுள்ளார்கள் என்பது தெட்டத் தெளிவு. ஒரு சர்வாததிகார கும்பலிடம் இருந்து வந்தவர்கள் மனம் விட்டுப் பேச சற்று அவகாசம் தேவை. அப்போது புலிகள் யார் என்பதை உலகுக்கு அவர்களே சொல்வார்கள். அதுவரை பொறுமை தேவை.

    Reply
  • palli
    palli

    //படையினர் தாம் போட்டு வைத்திருக்கும் முள் வேலிகளையும் ஆயுதக் காவலையும் விலக்கிக் கொள்ளும் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை பொது மக்கள் அவர்களது முகாம்களில் மிச்சமாக இருப்பர்?//

    புலிகள் போட்ட மரண வேலியையும் தாண்டி ஒரு லட்ச்சம் பேர் அரசிடம் வருவது திரும்ப புலியிடம் ஓடி விளயாடவா?? இந்த சின்ன பிள்ளைதனமான சிந்தனையால் தான் இன்றி பால்குடி குழந்தைகளையும் பாடசானை மாணவர்களையும் சதிராட்டத்தில் விட்டு தொலைக்கிறியள். செல்லங்களா பல்லி இருக்கும் நாட்டில் பாடசாலைக்கு குழந்தைகளை அனுப்பாவிட்டால் சட்டபடி குற்றம். ஆகவே இந்த சதிராட்டம் தொடருமானால் குழந்தைகளின் கல்வியை (புலம்பெயர்) காப்பாற்ற சிலர் மீது சட்டபடி நடவெடிக்கை எடுக்க வேண்டி வரலாம். அதுக்காக பல்லி சில விடயங்களை ஆதாரமாக வைத்துள்ளேன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ரோகன் நீங்கள் வந்துசேர்ந்த இடம் பிழையான விலாசம் என நினைக்கிறேன். இந்த நேரம் முட்டை மட்டைகளுடன் தெருவில் அல்லவா? நிற்கவேண்டும். உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அண்ணை அப்படித்தானே சொன்னார். இல்லாவிட்டால் தமிழ்மக்களின் பெயரில் உலகம் முழுக்க பரவியுள்ள வேலுப்பிள்ளை பிரபாகரனின் சாம்ராஜ்யித்தை பாதுகாக்காமல் போகலாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //சிறிது சிறிதாக கசியும் செய்திகள் இராணுவ அட்டூழியங்கள் தொடர்பான த்கவல்களைச் சொல்கின்றன. – Rohan //

    ஒப்புக்கு கருத்தெழுதும் நீங்களே புலிப்பாசிச மனப்பாண்மையில் கருத்தெழுதும் போது, வருடக்கணக்கில் மூளைச்சலவை செய்யப்பட்ட அடிமட்ட போராளிப்புலிகள் எந்த மனப்பாண்மையில் இருப்பார்கள். தப்பி வந்தவர்கள் சொன்ன கருத்துக்களின்படி; தாங்கள் தப்பி வரும்போது புலிகள் சுடுகின்றார்கள். அதிலும் தப்பி வந்தவர்கள் மீது தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள். தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததும் இராணுவமும் சரமாரியாக சுடுகின்றார்கள். இந்நிலையிலும் தன் மக்களையே அழிக்க நினைக்கும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்கள் பேசாமல் ………புலிகளிற்கு விசுவாசத்தைக் காட்டலாமே….

    Reply
  • மாயா
    மாயா

    //Rohan on April 25, 2009 12:32 am – மாயாவால் அதற்காக வருந்த மட்டுமே முடிகிறது. இந்த – குடை கொடி பிடிக்கும் -…….. நாவிழந்தோரையும் அவர்களுக்கு விளக்குப் பிடிக்கும் அடுத்தவர்களையும் கண்டித்து ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லையா? என் சகோட்கரனுக்குக் கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழையானால் சரி, அப்படித் தானே?//

    நீங்கள் கண்டித்து , தற்கொலைத் தாக்குதல் நடத்தி , தீக்குளித்து , போராடி , உலகமெல்லாம் பேரணி – கவனயீர்ப்பு நடத்தி 5 சதுர கிலோமீட்டரில் இப்போது நிற்கிறீர்கள். வேறு எதைக் கண்டீர்கள்?

    நீங்கள் நடு ரோட்டெல்லாம் கத்தினீர்கள் யாரும் உங்களை ஏன் என்று கேட்கவில்லை? தூதரங்களை தாக்கினீர்கள் ஏன் என்று கேட்கவில்லை? தீக்குளித்தீர்கள் ஏன் என்று கேட்கவில்லை? ஒருவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறான். அவனை தேடி யாராவது வருகிறார்கள். அவன் உயிரைக் காப்பாற்ற அவனை தூக்கிச் சென்று மனநோயாளர் விடுதியில் சேர்த்து வைத்தியம் செய்கிறார்கள். அவன் எங்கே கண்டித்தான்? எங்கே கத்தினான்? அவன் வருந்துகிறான். தன்னை வருத்திக் கொள்கிறான். அவர்கள் வந்து ஆறுதலாவது சொல்கிறார்கள்.

    நீங்கள் கத்துகிறீர்கள்.உடைத்து நொறுக்குகிறீர்கள்? வன்முறையில் அவர்களது யதார்த்த வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்துகிறீர்கள்? உங்களை பைத்தியகாரர்கள் என்கிறார்கள்.போலீஸை விட்டு அடிக்கிறார்கள். கைது செய்கிறார்கள்.

    நான் கண்டித்து ஒன்றும் ஆகாது. என் வருத்தம் அந்த மக்களுக்கு நல்லது செய்யும். நான் கண்டிக்கிறேன் செய்வீர்களா?

    வெளிநாடுகளில் 18 வயது வரை குழந்தைகள் அரசியல் செய்வதே இல்லை. பெற்றோர் கூட வயது வந்த திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. இரவு 10 மணிக்குப் பிறகே தொலைக் காட்சிகளில் பாலான அல்லது பயங்கரமான படங்களை போடுகிறார்கள்.

    நீங்கள் ஒன்றுமறியா பச்சிளம் பாலன் கைகளில் புலிக் கொடியை கொடுத்து புலத்திலும் கோஸம் போட வைக்கிறீர்களே? அதே குழந்தைகளுக்கு அங்கே என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இருக்கும் போது கிளிப்பிள்ளைகளைப் போல் உங்கள் வன்முறை எண்ணங்களை கத்துவதற்கு எழுதி அல்லது சொல்லிக் கொடுக்கிறீர்களே? அவர்கள் வயதுக்கே வராத நிலையில் அவர்களது கல்விகளை தடுத்து போராட்டங்களில் ஈடுபடுத்துகிறீர்களளே? அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குழந்தைகள் தொலைக் காட்சி பார்க்கும் நேரத்திலும் எமது தொலைக் காட்சிகள் சகிக்க முடியாத படங்களை காட்டி சைகோ ஆக்குகிறதே? அதைக் கண்டிக்கிறோம். வன்னியில் பள்ளிகளுக்கு சென்று அரசியல் வகுப்பு நடத்தி குழந்தைகள் மனதை மாற்றி ஆயுதம் கொடுத்தார்களே? அதைக் கண்டிக்கிறோம். இன்றும் ஓடிவந்த 13 முதல் 17 வயதுவரை குழந்தைகளை பறித்து இழுத்துக் கொண்டு போன புலிகளைக் கண்டிக்கிறோம்.

    பலதை உங்களால் செய்ய முடியாது. அது தெரியும். ஆனால் புலத்து போராட்டங்களில் 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளை திருப்பி அனுப்ப ஆவன செய்வீர்களா? இது எம்மால் பார்க்க வருத்தமாக இருக்கிறது. அந்தக் குழந்தைகளை திருப்பி அனுப்புவீர்களா?

    Reply
  • Rohan
    Rohan

    மிக்க நல்லது கருத்துக் கருவூலங்களே.

    இவன் கேட்டதெல்லாம் ஒரு சாதாரண கேள்வி. முள்வேலியைத் திறந்து விட்டால் எத்தனை பேர் மிச்சமாக இருப்ப என்பதே. எனது கருத்தெல்லாம் புலிகளும் அடைத்தார்கள் அரசும் அடைத்திருக்கிறது – திறந்து விட்டால் மக்கள் பறந்தோடி விடுவர் என்பதே.

    கேள்வியை ஒரு புறம் விட்டு விட்டு எழுதியவனைக் குத்துவதிலேயே எல்லோரும் முனைப்புக் காட்டியிருக்கிறார்கள்.

    ஒப்புக்குக் கருத்து எழுதுகிறான் என்று ஒரு கருத்து சொல்கிறது. ஏதோ தாமெல்லம் கருத்து எழுதுவது மற்ற அறிவிலிகளை நெறிப்படுத்தவே என்பது போலவும் அறிவிலிகள் வாசிக்க மட்டுமே உரித்துடையவர் என்றும் முனைகிற பண்ணையார் தோரணை அது.

    ஏதோ புலிகள் மக்களோடு மக்களாக வந்திருப்பதாகவும் அதற்காக் எல்லா மக்களும் தடை முகாம்களில் அடைபட்டிருப்பது முழுநியாயம் தான் என்று கூரை மேல் நின்று முழங்குகிறது இன்னொரு குரல். சின்னம் சிறுசுகளிலிருந்து கிழடுகள் வரையும் புலிகள் தான் என்று பேசும் கோத்தபாயக்களுக்கும் பொன்சேகாகளுக்கும் இந்தக் குரல்களுக்கும் என்ன வேறுபாடு?

    “நீங்கள் கண்டித்து , தற்கொலைத் தாக்குதல் நடத்தி , தீக்குளித்து , போராடி , உலகமெல்லாம் பேரணி – கவனயீர்ப்பு நடத்தி 5 சதுர கிலோமீட்டரில் இப்போது நிற்கிறீர்கள். வேறு எதைக் கண்டீர்கள்?” என்பார் இன்னொருவர். யாரப்பா கேட்டார்கள் இதெல்லாம்?

    “அதிலும் தப்பி வந்தவர்கள் மீது தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள். தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததும் இராணுவமும் சரமாரியாக சுடுகின்றார்கள்.” என்று இராணுவம் செய்வதை நியாயப் படுத்தும் கருத்தாளர்கள் தான் ‘ஒப்புக்கு இல்லாமல்’ கொமிற்மென்ற்றுடன் கருத்து எழுதுகிறார்களா? வள்ளிபுனத்துச் சின்னம் சிறிசுகள் மீது இலங்கை அரசு கொலைத் தாக்குதல் நடாத்திய போது புலி பிடித்து வந்து பயிற்சி தந்த சிறுவர்களே அவர்கள் என்று நியாயப் படுத்திய அரச பேச்சாளர் தோற்றார் போங்கள்!

    “ரோகன் நீங்கள் வந்துசேர்ந்த இடம் பிழையான விலாசம் என நினைக்கிறேன். இந்த நேரம் முட்டை மட்டைகளுடன் தெருவில் அல்லவா?” என்பது இன்னொருவர் வெளிப்பாடு. கேட்ட கேள்விக்கும் சொல்லப்பட்ட பதிலுக்கும் என்ன தொடர்பு என்று முடியை பிய்த்துக் கொள்கிறேன்.

    சில ஆண்டுகளுக்கு முன்னால் புலி ஆதரவு நண்பர்கள் சிலரை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தேன். முடிந்த்ளவு சாத்தி வைத்திருந்த என் திருவாயைத் திறக்க நேர்ந்த்தது. “புலி இவ்வாறு செய்வதை தவிர்த்திருக்கலாம்” என்று இரண்டு விடயங்கள் சொன்னேன். நான் போன பின்னர் அவர்கள் எனக்கு புளொட் லேபல் போட்டதாக பின்னர் கேள்விப்பட்டேன். நம்மைப் போன்ற நடுநிலையாளர்களுக்குத் தான் சிக்கல். ஜோர்ஜ் புஷ் அணமையில் சொன்ன, “நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எதிரியுடன இருக்கிறீர்கள்” என்ற வாதத்தைத்தான் புலி இயக்கநண்பர்களும் “மாற்றுக் கருத்து” அறிவாளர்களும் காலா காலமாகப் பின்பற்றிவருகிறார்கள்.

    பின்னூட்டக் கருத்தாளர்கள் கீ போட்டுக்கு முந்த முன்னர் சற்று மேல்வீட்டையும் உசாவுவது நலம் என்பது இச்சிறியோனின் கருத்து.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //Rohan சில ஆண்டுகளுக்கு முன்னால் புலி ஆதரவு நண்பர்கள் சிலரை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தேன். முடிந்த்ளவு சாத்தி வைத்திருந்த என் திருவாயைத் திறக்க நேர்ந்த்தது. “புலி இவ்வாறு செய்வதை தவிர்த்திருக்கலாம்” என்று இரண்டு விடயங்கள் சொன்னேன். நான் போன பின்னர் அவர்கள் எனக்கு புளொட் லேபல் போட்டதாக பின்னர் கேள்விப்பட்டேன். நம்மைப் போன்ற நடுநிலையாளர்களுக்குத் தான் சிக்கல். ஜோர்ஜ் புஷ் அணமையில் சொன்ன, “நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எதிரியுடன இருக்கிறீர்கள்” என்ற வாதத்தைத்தான் புலி இயக்கநண்பர்களும் “மாற்றுக் கருத்து” அறிவாளர்களும் காலா காலமாகப் பின்பற்றிவருகிறார்கள்.//

    நீங்கள் கேள்வி கேட்டதால் உங்களுக்கு புளொட் லேபல் கொடுத்தார்கள். இங்கே சிலர் எழுதுவதால் //பின்னூட்டக் கருத்தாளர்கள் கீ போட்டுக்கு முந்த முன்னர் சற்று மேல்வீட்டையும் உசாவுவது நலம் என்பது இச்சிறியோனின் கருத்து.// என்கிறீர்கள். கேள்வி கேட்டவர்களிடம் நீங்களும் குறை காணாமல் உங்கள் கருத்தையும் வையுங்கள். அப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பின்னூட்டக் கருத்தாளர்கள் கீ போட்டுக்கு முந்த முன்னர் சற்று மேல்வீட்டையும் உசாவுவது நலம் என்பது இச்சிறியோனின் கருத்து.- Rohan //

    எங்கள் மேல்வீடுகள் ஒழுங்காக இருப்பதால்த் தான் கருத்துகளால் போராடுகின்றோம். இல்லையேல் உம்மைப் போல் பிறந்த நாட்டையும் சீரழித்து, வந்திருக்கும் நாட்டையும் சீரழித்துக் கொண்டிருப்போம்.

    புலிகளின் அதர்மப் பிடியையே உடைத்துவிட்டு வரும் மக்களுக்கு உந்த இராணுவம் போட்டிருக்கும் கம்பி வேலி வெறும் தூசு. ஆனால் இராணுவம் போட்ட வேலி உள்ளிருக்கும் மக்களுக்கல்ல. அந்த மக்களை மீண்டும் நரமாமிசப் புலிகள் காவு கொண்டு விடக் கூடாதென்பதற்காக.

    Reply
  • ராஜன்
    ராஜன்

    திரு ஜெயபாலன் எழுதிய மனிதாமின கட்டுரைக்கு மட்டுமே பின்னூட்டமிடுங்கள். இந்தக்கட்டுரையின் நோக்கத்தை மாற்றி அரசியலுக்கு கொண்டு சென்றுவிடாதீர்கள். .இந்தக்கட்டுரையை வைத்து நீங்கள் ஒரு அரசியல் சதுரங்கத்தை நடாத்திவிடாதீர்கள். வெந்த புண்ணில் வேல் பாச்சாதீர்கள்.
    ஈழப்பிரச்சனை ஏன் தொடங்கியது என்றே பின்னூட்டமிடுபவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நிறைய புத்தகங்கள் உள்ளது. முதலில் அதனை படித்து விட்டு அப்பிரச்சனைகள் தொடர்பாக கருத்து கூறுங்கள். அரசியல்வாதிகள் போல் நுனிப்புல் மேய்ந்து கருத்து தெரிவிக்காதீர்கள்.

    Reply
  • palli
    palli

    //இந்தக்கட்டுரையின் நோக்கத்தை மாற்றி அரசியலுக்கு கொண்டு சென்றுவிடாதீர்கள்//
    புரியவில்லையே. நாட்டைபற்றி பேசும்போது அரசியல் பேசாமல் ஆத்தங்கரை பற்றியா பேச முடியும். அல்லது இப்படியான அரசியலை(பனைமரத்திலை வவ்வாலா. தலைவனுக்கே சவாலா) நாமும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறியளா??

    // வெந்த புண்ணில் வேல் பாச்சாதீர்கள்.//
    இது மக்களா?? அல்லது புலிகளா?? இல்லாவிடில் புலம் பெயர் புலிகளா? முதல் அதை புரியவையுங்கள்.

    //ஈழப்பிரச்சனை ஏன் தொடங்கியது என்றே பின்னூட்டமிடுபவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.:://
    ஜயோ ஜயோ இலங்கை ஒரு வல்லரசாக வர வேண்டும். அமெரிக்காவுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். இந்தியாவை தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரஸியா ஒரு தமிழன் இருக்கும் வரை கமினிஸ்ட்டாக இருக்கபடாது. சினா பிச்சைகார நாடாக வளர வேண்டும். ஜேர்மன் விமானங்களை ஆகாயத்தில் பறக்க விட கூடாது என பல கோரிக்கைகளை வைத்துதானே ஈழ போராட்டமோ சதிராட்டமோ தொடங்கியது. இதுகூடவா தெரியாது எமக்கு.

    //நிறைய புத்தகங்கள் உள்ளது. முதலில் அதனை படித்து விட்டு அப்பிரச்சனைகள் தொடர்பாக கருத்து கூறுங்கள்//
    பல்லிக்கு படிக்க வராது. புத்தகங்களை வாசிப்பவர்கள் இதை கவனத்தில் எடுப்பர் என நினைக்கிறேன். அது சரி புத்தக வரிசையில் பரபரப்பு. ஒரு பேப்பர். “பிரபாவின் சிந்தனையில்” “பாலாவின் பவிதவிப்பு” தயா மாஸ்ரரின் “நமக்கு இது தேவையா” நடேசரின் “புலிக்காக கைகொடுங்கள்” கோபாலசாமியின் “ஈழத்து தறுதலை” இவையெல்லாம் இருக்குதானே. வரலாறு (தமிழர்) அனைத்தும் புலியாறாக மாறி 25 வருடத்துக்கு மேலாகிவிட்ட நிலையில் இப்படி பனைமரத்து வவ்வால் கதை நல்லாவா இருக்கு.
    // நுனிப்புல் மேய்ந்து கருத்து தெரிவிக்காதீர்கள்.//
    ஏதோ கருத்து தெரிவிப்பதாக தாங்களே வாக்கு மூலம் கொடுத்ததுக்கு நன்றி.அதுக்கக தாங்கள் இப்படி கடுப்பு தெரிவிக்கலாமா?? அது தகுமா???

    Reply
  • மாயா
    மாயா

    //ராஜன் on April 26, 2009 1:26 am திரு ஜெயபாலன் எழுதிய மனிதாமின கட்டுரைக்கு மட்டுமே பின்னூட்டமிடுங்கள். இந்தக்கட்டுரையின் நோக்கத்தை மாற்றி அரசியலுக்கு கொண்டு சென்றுவிடாதீர்கள். .இந்தக்கட்டுரையை வைத்து நீங்கள் ஒரு அரசியல் சதுரங்கத்தை நடாத்திவிடாதீர்கள். வெந்த புண்ணில் வேல் பாச்சாதீர்கள். ஈழப்பிரச்சனை ஏன் தொடங்கியது என்றே பின்னூட்டமிடுபவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நிறைய புத்தகங்கள் உள்ளது. முதலில் அதனை படித்து விட்டு அப்பிரச்சனைகள் தொடர்பாக கருத்து கூறுங்கள். அரசியல்வாதிகள் போல் நுனிப்புல் மேய்ந்து கருத்து தெரிவிக்காதீர்கள்.//

    நீங்கள் அனுதாபத்திலும் , செத்த பிணங்களின் மேலும் , ஊனமாக்கப்பட்ட அப்பாவிகள் மீதும் அரசியல் நடத்தியவர்கள். இன்றும் அதையே செய்கிறீர்கள். ஒன்று படைகள் கொல்லாது போனால் நீங்களாவது கொன்று போட்டு படைகள் என்று கூறி பிழைப்பவர்கள். வந்தவர்கள் இப்போது அங்கு நடந்தவற்றை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் செத்தால்தான் தமிழீழம் கிடைக்கும் என்பதே உங்கள் அரசியல்.

    மக்கள் இப்படி நடுத்தெருவில் நிற்பதற்கு காரணங்களைத் தேடி , அவர்களை வாழ வைக்க முயல்வதே எமது அரசியல்.

    பிரபாகரன் தொடங்கியது ஈழப்பிரச்சனை என இளம் பராயத்தினர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தந்தை செல்வாவை தெரியுமா? தங்கத்துரை தெரியுமா? குட்டி மணியைத் தெரியுமா? எல்லாத்தையும் மறைத்து , தலைவர்தான் தலைவர்தான் என்று தலைவிதியையே மாற்றிவிட்டீர்கள். நீங்கள் நடத்தும் பள்ளிகளிலும் புலி புராணம்தானே? , அடைக்கலம் தேடி வந்த குழந்தைகள் கூட புலி மாமா பாட்டுத்தான் பாடுகிறார்கள். சிங்களவன் அதை புரிந்து கொள்ளும் அறிவோடு இருக்கிறான். அதனால் அதை பெரிதுபடுத்தாது அவர்கள் மேல் கருணையோடு உணவாவது கொடுக்கிறான் இருக்கிறான். புலிகளுக்கு எதிராக புலத்திலேயே பேச முடியாத ஒரு காலம் இருந்தது. வன்னியில் யோசிக்கவே வேண்டியதில்லை?

    இதை மற்றவர்களுக்கு சொல்லி விடுவார்களோ என்று ராஜன் எங்களுக்கு நுனிப்புல் மேய வேண்டாம் என்கிறார். நாங்கள் என்ன ஆனந்த விகடன் , குமுதம் படித்துவிட்டு போராட வந்தோம் என்று பிரபாகரன் போல சொல்ல சொல்கிறீர்களா?- சென்னையில் இப்படித்தான் பிரபாகரன் பேட்டி கொடுத்தார்.

    இப்போது புலி இணையங்கள் செல் அடிச்சு முடமானது மாதிரி இருக்கு. அதுதான் மற்றவர்கள் இணையத்தில் செய்தி தேடுகிறீர்கள். அப்படி வருவோருக்கு இப்படி ஏதாவது கொடுத்தால்தான் கடலை சாப்பிட்ட மாதிரி அடுத்தவர்களையும் புரியும்.

    தேசத்தை ஒருவருக்கு அறிமுகம் செய்தேன். அவர் சொன்னார் இங்கே எழுதுவோரிடம் விசயம் இருக்கிறது. புலிகளின் தளங்களில் ஒப்பாரியையும் அடுத்தவனை துரோகி….போட்டுத் தள்ளவேணும்….போன்ற மோசமான வார்த்தைகளையும்தான் பார்க்க முடிகிறது என்றார்.

    பாவம் புட்போள் மெட்ச் மாதிரி கோல் போட்டு தமிழீழம் கிடைக்கும் என்று நினைத்து , தண்ணியடிச்சவங்கள் மாதிரி சாவுகளை ரசித்து சந்தோசப்பட்டவங்கள் புலிகள். இப்போது வந்தது மாதிரி சிங்களவர்கள் வன்னிக்கு போயிருந்தால் , ஒரு சிங்களவனையாவது கொண்டால்தான் மன ஆறுதல் கிடைக்கும் என்று மனதை மாற்றிய நீங்கள் வந்த அனைவரையும் கொண்டுதான் போட்டிருப்பீர்கள்? இப்போதுகூட புலத்தில் உள்ள இளைஞர்கள் இந்திய தூதரகத்தில் உள்ளவர்களை கொழுத்த வேணும் என்று எழுதுகிறீர்களே? உங்களுக்கு ……………… வேறென்ன?

    அங்கே இந்திய தமிழன் ஈழத் தமிழனுக்காக தீக்குளிக்கிறான். இங்குள்ள ஈழத் தமிழன் இந்திய தமிழனை தீக்கிரையாக்கத் துடிக்கிறான். தமிழின் அனுதாபத்தால் அவர்கள் உணர்வுகள் துடிக்கிறதே அதையும் இல்லாமல் பண்ணி கோவணமும் இல்லாமல் மிஞ்சிய தமிழனை நிர்வாணமாக்கி விடாதீர்கள்?

    Reply
  • damilan
    damilan

    திரு. ஜெயபாலன் அவர்களின் கருத்துக்ககளும் எண்ணங்களும் நியாயமானது புரிந்து கொள்ளக் கூடியது. இங்கு வாழக் கூடிய எமக்கு இந்த சூழல் புதுமையானதாகவோ கடினமானதாகவோ தெரியவில்லை. நீண்ட கால பழக்கத்தாலோ என்னவோ எல்லாம் பழகி விட்டது. இஙகு ஏற்கனவே உள்ள சில நடைமுறைகள்
    1. மதவாச்சிப் பாதையால் தனியார் வாகனமோ சிரிபி பஸ்சோ செல்ல முடியாது.
    2. கொழும்பு செல்ல மதவாச்சி ஊடாக யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. (சரியான காரணம் இருந்தால் மட்டும் அனுமதி. உ+ம் வெளிநாடு செல்ல டிக்கட் புக் பண்ணுவதற்கு கொழும்பு செல்லமுடியாது. டிக்கட் கையில் இருந்தால் மட்டும் அனுமதி)
    3. கணனி கட்டிட பொருட்கள் மின் உபகரணங்களுக்கு பாஸ் நடைமுறை.
    4.மன்னாரில் வழங்கப்பட்ட கைத்தொலை பேசி சிடிஎம்ஏ இணைப்பு எல்லாம் துண்டிப்பு.
    5.அண்மையில் ஒரு வக்கீல் கூறியிருந்தார் எமது பகுதி ஒரு திறந்த வெளி சிறைச்சாலை என்று.

    ஒரு பிரச்சினைக்கான தீர்வை இரு வழிகளில் எடுக்கலாம் 1. உணர்வு பூர்வமாக 2. அறிவு பூர்வமாக புலிகள் தமது பிரச்சினைகளை உணர்வு பூர்வமாக முன்வைப்பதாலேயே அது தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகவும் உற்சாகமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அரசானது தமது தீர்வுகளை உணர்வு பூர்வமாக எடுக்காது அறிவு பூர்வமாகவே தமது விடயங்களை கையாள்கிறது. கடந்த 19 வருடங்களுக்கு மேலாக ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் எமக்கே பல கட்டுப்படுகளும் கெடுபிடிகளும் தொடர்ந்து இருக்கிறது என்றால் நேற்று புலிகளின் பிடியில் 30 வருடங்களுக்கு மேலாக இருந்து விட்டு வரும் மக்களை எவ்வாறு ராணுவம் சிந்திக்கும் நடத்தும் என்பது புரிந்து கொள்ள கடினமாக இருக்காது என நினைக்கிறேன்.

    ஏனெனில் இங்கு நடப்பது ராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சியே. இது ஜெனிவாவோ லண்டனோ இல்லை.சண்டையில் முதலில் சாவது உண்மையே. வன்னி மக்களுக்கும் சரி வட கிழக்கு மக்களுக்கும் சரி ஒவ்வெருவரிடத்திலும் பல கதைகள் உள்ளன. பல கதைகளிலும் பல சோகங்கள் அழுகை இறப்பு பிரிவு வேதனை வஞ்சம் துரோகம் எல்லா உணர்வுகளும் இருக்கின்றது.

    இதற்கெல்லாம் முடிவு யுத்தம் இன்னும் 10 வருடத்திற்கு நடந்தால் சரியா அல்லது இத்துடன் முடிந்தால் சரியா? தமிழ் மக்களின் துரதிஸ்டம் இரண்டு
    1. புலிகள்
    2. ராணுவம்
    புலிகளை உருவாக்கியது ராணுவமா? மக்களா?
    ராணுவத்தை வரவழைத்தது புலிகளா? மக்களா? அரசா?

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    இத்தனை பெரிய இந்தியா தமிழ் நாட்டில் இலங்கை அகதிகளுக்கு வழங்கிய வசதிகளை விட நூறு மடங்கு மேலான வசதிகளை இலங்கை அரசு இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறது.

    ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்களை ஒரு இரவில் காசு நகை எல்லாம் பறித்து அநாதவராக அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து பிரபாகரன் கலைத்த போது ஒரு தமிழ் பேசும் இந்துக்களோ அன்றி கிறிஸ்தவரோ ஒரு வார்த்தை பிரபாகரனின் இன சுத்திகரிப்புக்கு எதிராக சொல்லவில்லை.

    ஆனால் இன்று அகதிகளான தமிழ் பேசும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் உதவி செய்கிறார்கள்.

    பிரபாகரனின் தமிழ் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஆமா போட மட்டும் வாயை திறந்தவர்கள் மக்கள். எங்கு போவது என்றாலும் பிணைவைத்து பாஸ்எடுத்து தான் நடமாட முடிந்த சுதந்திரத்தைதான் பிரபாகரன் கொடுத்திருந்தார்.

    இத்தகைய பிரபாகரனை காப்பாத்த புலன் பெயர்ந்த தமிழர் வீ வோன்ட் தமிழ் ஈழம் அவர் லீடர் பிரபாகரன் என்று தெரு தெருவாக ஊளை இட்டு திரிகிறார்கள்.– அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்-

    Reply
  • மாயா
    மாயா

    //அகிலன் துரைராஜா on April 27, 2009 6:50 pm .
    ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்களை ஒரு இரவில் காசு நகை எல்லாம் பறித்து அநாதவராக அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து பிரபாகரன் கலைத்த போது ஒரு தமிழ் பேசும் இந்துக்களோ அன்றி கிறிஸ்தவரோ ஒரு வார்த்தை பிரபாகரனின் இன சுத்திகரிப்புக்கு எதிராக சொல்லவில்லை.//

    பிரபாகரன் கத்தோலிக்கராம். இதைக் கேளுங்கோ பாதர் கஸ்பபார் சொல்லுறார்.
    http://www.zshare.net/audio/5923314012e2fecd/

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சற்று முன்னர் DAN தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் மற்றும் புலிகளின் மொழி பெயரப்பாளர் ஜோர்ஜ் ஆகியோரின் செவ்விகள் இடம்பெற்றன. இருவரும் பிரபாகரனின் அட்டூழியங்களை தெளிவாகவே சொன்னார்கள். இனி புலிவால்கள் உண்மைகளை உணர்ந்து கொள்வதற்குப் பதிலாக புலிகளின் இணையத்தளங்களில் இவர்களை தூற்றத் தொடங்கி விடுவார்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    //தயா மாஸ்டர் மற்றும் புலிகளின் மொழி பெயரப்பாளர் ஜோர்ஜ் ஆகியோரின் செவ்விகள் இடம்பெற்றன.//
    http://www.youtube.com/watch?v=qioJyiq9Rt0

    Reply
  • Raj
    Raj

    மூன்று மொழிகளிலும் சரளமாக விளையாடும் திரு.ஜோர்ஜ் அவர்களது துணிச்சலான பேட்டிக்குப் பாராட்டுக்கள்.இவ்வளவு காலமும் இந்தக் கருத்துக்களை அடக்கிக்கொண்டு வாழ்ந்துள்ள இப்புத்தி ஜீவியைப்போன்று இன்னும் எத்தனை பேர் மெளனவிரதம் கலைக்காமலேயே எம்முள் ஒதுங்கியுள்ளனர் என்பது மட்டும் வெள்ளிடைமலை.

    Reply