எல்ரிரிஈ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டு உள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பின்னரே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குளோடி ஹெல்லர் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாட்டு உறுப்பினர்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எல்ரிரிஈ மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருப்பதாகவும் எல்ரிரிஈ யுஎன் அணுசரனையுடன் மக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்ரிரிஈ பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாயா
சொன்னதும் கேட்டுட்டாங்களாம்?
Azhar
புலிகள் என்றால் அவ்வளவு புத்திசாலிகள் என்று இன்னும் ஐ.நா. நம்புகிறார்களா? பாவம் அவர்கள். அவ்வளவு புத்திசாலிகளாக இருந்திருந்தால் மாவிலாரு அணைக்கட்டை அவர்கள் மூடியபோது சர்வதேசம் சொன்னதைக் கேட்டு.. இப்போது பெரும் பலத்துடன் இருந்திருப்பரே… புலிகளுக்கும் அவர்களின் புலம்பெயர் ஆதரவாளர்களுக்கும் (அன்டன் பாலசி்ங்கம் பாசையில் சொன்னால்) மேல் மாடியில் ஒன்றும் இல்லை.
BC
ஐநா புலம்பெயர் தமிழர்களிடம் நல்லா வாக்கிகட்ட போகுது.
பார்த்திபன்
ஐ.நா என்ன ஆண்டவனே வந்து சொன்னாலும் புலிகளுக்கும், புலத்தில் புலிவால் பிடிப்பவர்களுக்கும் புத்தியில் ஏற வேண்டுமே…
chandran.raja
சாண்டோ சின்னபாதேவர் எடுத்த படத்தை பார்த்துப்பார்த்து ரசித்தவர்களுக்கு கே.பாலச்சந்தர் எடுத்த படத்தை ரசிப்பது என்பது மிகவும் கஷ்ரமான விஷயமே. நான் சொல்லவாற விஷயம் என்னவென்றால் ரசிகத்தன்மை மாறவேண்டும். அல்லது அரசியல் அறிவை பெற்றாக வேண்டும். இல்லாதவரை புலத்துபுலிகளிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க முடியாது. இல்லையேல் புலத்துநாட்டில் பொருளாதார மாற்றங்கள் இன்னும் மோசமாக ஏற்படவேண்டும்.
அகிலன் துரைராஜா
நயவஞ்சக பீலா விட்டு பிலிம் காட்டி சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்று இனவாத வீரவசனம் பேசி இருபத்தையாயிரம் பிள்ளைகளை மாவீரர் என்று புதைத்தும் இருபதினாயிரம் தமிழரை துரோகிகள் என்று மண்டையில் போட்டும் நாலாயிரம் மாற்று இயக்க விடுதலை போராளிகளை கொன்று குவித்தும் லட்சக்கணக்கான முஸ்லீம்களை அவர்களின் சொத்துக்களை பறித்து அவர்களின் பூர்வீக பூமியிலிருந்து அகதிகளாக கலைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தவர் ஆமாபோட மறுத்து வித்தியாசமாக கதைத்தால் மண்டையில் போட்டும் எங்கேயாவது போவது என்றால் பிணைக்கு ஒரு ஆளை வைத்து பாஸ் எடுத்து போகவேண்டிய சுதந்திரம் அத்தனையும் பறிபோன நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு தமிழருக்கு வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை கொண்டு வந்து உதவ வந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படைகளை கொன்றும், உதவ வந்த ராஜீவ் காந்தியையும் ஆயுதமாகவும் பணமாகவும் அள்ளிக்கொடுத்து உதவிய பிறேமதாசாவையும் கொன்றும் இன்று தமிழ் மக்களை பிள்ளைகளையும் சொத்து சுகங்களையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகி விட்டு முப்பது வருசமாக இவர்கள் நடாத்திய பொய் பீலாக்கள் பிசுபிசுத்து புஸ் வானமாகி முழு புலுடாவாக ஆகி விட்டது.
தமிழருக்கு பிரபாகரன் நல்லாய் கேம் குடுத்திட்டார்-கேம் ஓவர்
அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்
Kusumpan
இவ்வளவு உயிர்களைக் குடித்து உயிர்களைக் கொடுத்த புலிகள் இவர்கள் சொன்னவுடன் ஆயுதங்களைப் போட்டுவிட்டு போய்விடுவார்களாக்கும். சும்மா விடுங்கப்பா. யுஎன் உம் தானும் இருக்கிறன் என்று காட்ட இப்படி ஏதாவது சொல்லத்தானே வேண்டும்
Kusumpan
தகவலுக்கு நன்றி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். எனது பங்களிப்பையும் தருகிறேன்
accu
புலியின் 90வீத ஆயுதம் பறிபோய்விட்டது. மிகுதியாய் உள்ள ஆயுதங்கள் தப்பியோட முயலும் மக்களை கொல்வதற்க்குதான் பாவிக்கிறார்கள். அதுவும் விரைவில் களையப்படும். அதன் பின் எவருக்கும் புலிகளை ஆயுதங்களை போடும்படி கேட்கும் தேவை இருக்காது.
ramesh
கொடுப்பதும் நாமே பறிப்பதும் யாமே.
மாயா
//chandran.raja on April 23, 2009 8:13 pm சாண்டோ சின்னபாதேவர் எடுத்த படத்தை பார்த்துப்பார்த்து ரசித்தவர்களுக்கு கே.பாலச்சந்தர் எடுத்த படத்தை ரசிப்பது என்பது மிகவும் கஷ்ரமான விஷயமே. //
சோகத்திலயும் சிரிக்க வச்சிட்டியள்.