பூமியை விட இரு மடங்கு பெரிதான புதிய கோள் ஒன்றை எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக சிலி விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது.
“கிளியஸ் 581′ நட்சத்திர சுற்றுவட்டப்பாதையில் அமைந்துள்ள இக்கோளானது பூமியை விட சுமார் இரு மடங்கு பெரிதாகும். சிலியின் லா சில்லாவிலுள்ள 3.6 மீற்றர் நீளமான தொலைநோக்கி மூலமே இந்தக் கோள் அவதானிக்கப்பட்டுள்ளது.
சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் சிறிய கோள் இதுவென சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா விண்வெளி அவதான நிலையத்தைச் சேர்ந்த மைக்கல் மேயர் தெரிவித்துள்ளார்.