பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நாடி வருவோரைத் தங்கை வைக்க மேலதிகமாக 5 நலன்புரி முகாம்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வவுனியா மாவட்டத்திலுள்ள தான்டிக்குளம் வித்தியாலயம், விபுலானந்த வித்தியாலயம், முள்ளியகுளம் வித்தியாலயம், வீரபுரம் வித்தியாலயம், ஆண்டிக்குளம் வித்தியாலயம் மற்றும் கட்டடப்பம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே இந்த நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்து.
இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வருகின்ற 15 நலன்புரி நிலையங்களுக்கு மேலதிகமாகவே இந்த 5 நலன்புரி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.