காலஞ் சென்ற பிரபல சினிமாக் கலைஞர் திஸ்ஸ அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை கொழும்பு, ராஜகிரியவிலுள்ள சந்திரா டி சில்வா விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.
அன்னாரின் பூதவுடல் இன்று காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை கொழும்பு தேசிய கலாபவனத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மாலை 3.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ள நடைபெற மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டு 3.30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் திஸ்ஸ அபேசேகர கடந்த 18ஆம் திகதியன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.