விடுதலைப் புலிகள் ஒருபோதும் சரணடையப் போவதில்லை: புலித்தேவன் அறிவிப்பு

puli_thevan0.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.

அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், “நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்” எனவும் கோரியிருக்கின்றார்.

“நாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” எனத் தெரிவித்த புலித்தேவன், முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தம்முடனேயே இருப்பதாகவும் குறிப்பிட்ட புலித்தேவன், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய புலித்தேவன், “நேரம் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. இரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் தலையிட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Karan
    Karan

    இவ்வாண்டின் மிகச் சிறந்த ‘ஸ்ராண்டப் கொமடியன்’ விருது புலித்தேவனுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் பிரேரிக்கிறேன்.

    யாராவது ஆமோதியுங்களப்பா!

    Reply
  • murugan
    murugan

    தயா மாஸ்டரும் தமிழ் செல்வனுக்கு மொழி பெயர்ப்பாளராய் இருந்தவரும் இன்னும் சிலரும் சரணடைந்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

    Reply
  • murugan
    murugan

    ஆமோதிக்கிறேன் கரன்.

    பக்கத்தில் ஆமிநின்று கூப்பிடுகின்றது. இவர் என்னவென்றால்?

    Reply
  • BC
    BC

    கரனின் பிரேரணையை நான் வழிமொழிகிறேன்.

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழரின் விடுதலைக்காக புலிகள் போராடியிருந்தால் தற்போதய நிலையில் சரணடைந்திருப்பார்கள். பிரபாகரனின் தலைமையில் போராடியவர்கள் பயங்கரவாரதப் புலிகள்.

    பயங்கரவாதப்புலிகளின் வாழ்வே ஈழத்தமிழரின் அழிவிலும்,சாவிலுமேதான்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இலட்சக் கணக்கில் மக்கள் வெளியேறிய பின்னரும் புலித்தேவனால் எப்படி புத்தி பேதலித்தவர் போல பேச முடிகின்றது. …..

    Reply