வன்னியில் மக்கள் பெரும் மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இந்த நிலையில் வடக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வட பகுதியில் ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கோ அல்லது மக்கள் வாக்களிப்பதற்கோ பொருத்தமான சூழல் இல்லை.என்று வினோ நோகாதரலிங்கம் த. தே. கூ. எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் கணக்கின்படி பார்த்தால் இனி அங்கு பொதுமக்கள் இல்லை என்ற கருத்தைத் தோற்றுவித்துள்ளது.
அப்படியானால் எஞ்சியிருக்கின்ற மக்கள் யார்? அவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? இதற்கு அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும். பொதுமக்களை இழந்துதான் ஒரு சமாதானம் கிடைக்குமென்றால் அவ்வாறான ஒரு முடிவு எமக்குத் தேவையில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள சகோதரர்களுடன் சந்தோசமாக வாழ நாம் தயாராக இருக்கின்றோம். எமக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
பார்த்திபன்
//பொதுமக்களை இழந்துதான் ஒரு சமாதானம் கிடைக்குமென்றால் அவ்வாறான ஒரு முடிவு எமக்குத் தேவையில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள சகோதரர்களுடன் சந்தோசமாக வாழ நாம் தயாராக இருக்கின்றோம். எமக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.- வினோ நோகாதரலிங்கம்//
ஐயா நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள். நீங்களும் குளம்பி எங்களையும் குளப்புகின்றீர்களா??
ganendran
ஆஹா வினோவுக்கு இப்பதான் சுயமாக கருத்து வெளியிடும் துணிவு வந்த்திருக்கு பாராட்டத்ட்கான் வேண்டும் அது சரி அமைச்சுப்பொறுப்பு எடுப்பது எப்போ?