ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்ப கடவுச்சீட்டு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்புவதற்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மூவரும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ் நாட்டு அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

தமிழ் நாட்டு சட்டத்தரணி புகழேந்தி தொலைப்பேசி ஊடாக ஆதவனின் செய்திப் பிரிவுக்கு இதனை தெரிவித்திருந்தார்

 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணைக்குட்படுத்தப்படம்டு 30 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் சாந்தன் முருகன் நளினி ரொபர்ட் பயஸ் ஜெயக்குமார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் 2022ஆம் ஆண்டு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

 

விடுவிக்கப்பட்டவர்களில்; நளினியின் கணவர் முருகன் உட்பட சாந்தன் ஜெயக்குமார் ரொபர்ட் பயஸ் ஆகிய நால்வர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் குறித்த நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இதன்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சாந்தன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

 

குறித்த வழக்குசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது முருகன் ஜெயக்குமார் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு செல்வதற்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *