சோனியா காந்தியே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியின் இன்னொரு பகுதியை அந்த டிவி வெளியிட்டுள்ளது.
அதில், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்வது என்பது மாநில அரசின் கையில் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்றார்.
பின்னர், கொள்கை அடிப்படையில், அனுதாபத்தின் அடிப்படையில் நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்களா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி அவர்களே நளினியிடம் இரக்கம் காட்டியபோது, நான் காட்டாமல் இருக்க முடியுமா என்றார் கருணாநிதி.
இதற்கிடையே, சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ் காந்தி படுகொலையை நான் மன்னிக்க மாட்டேன். அதை செய்த இயக்கத்தையும் நான் மன்னிக்க மாட்டேன் என்றார் கருணாநிதி.
mukilvannan
we cant not accept what mahinda doing in his country killing innocent civilions,why our great poet not making any strong comment against srilanka goverment.
at this difficult moment we want raise your voice for us we are not want your soap drama,act in a proper manner. please kindly consider us not your political carrier.
நாஞ்சில் கி மனோகரன்
இந்த முறை இங்கு வெயில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது, ஏற்கனவே எனக்கு மூளை சூடாகியுள்ளது!, சரி…ஒரு சமரசத்திற்கு வருவோம்,.. “கலைஞர் டிவி, சன்டிவி குழுமங்களை பார்ப்பவர்கள் அனைவரும் என் நண்பர்கள்”, சரியா….”பிரபாகரன் கலைஞர் டிவி மட்டும் பார்ப்பதாக, (தமிழ் தேசிய தொலைக்காட்சியை விட்டு, விட்டதாக,..”தமிழ் தெசியம் என்றாலே… எனக்கு இ.வி.கே.சம்பத்தும், கவிஞர் கண்ணதாசனும் கனவில் வந்து பயமுறுத்துகிறார்கள்), உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது, அதனால்தான் குளறிவிட்டேன், பிறகுதான் தேரிந்தது, புலம்பெயர் புண்ணாக்குகளான, புலிவால்கள் மட்டும்தான் நம்முடைய டிவி களைப் பார்ப்பதாக”. இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே, விடுங்களப்பா….” கார்டை வாங்குகளப்பா”…யூ.கே….பவுண்ட்….டென்மார்க்….குரோனர்…”கைத்தறி..வாங்கலையோ..கைத்தறி…என்று கூவி விற்றுதானே அண்ணாவிடம் பொருளாளர் பதவி வாங்கினேன்….
மாயா
தலைப்புக்கு சம்பந்தமே இல்லாமல் என்ன நடக்குது?
Kusumpan
சோனியா செய்தால் நீங்களும் செய்வீர்கள் இல்லையா? ………..