இலங்கை தூதரக உறவை துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் சோனியா காந்தி அறிவிக்காவிட்டால், 23-ந் தேதி முதல் தொடர் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர்.
ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக போரை நிறுத்த முடியும். அதனால் திரையுலகின் பல சங்கங்கள் இணைந்து ஒரு கோரிக்கையை சோனியா காந்திக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். அவர் முயற்சித்தால் இலங்கையில் செத்து மடியும் உயிர்களை காப்பாற்ற முடியும். திரையுலக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் மற்றும் தமிழ் இன உணர்வுள்ள பல்வேறு அமைப்புகள் எங்கள் இயக்கத்தில் அங்கம் வகிப்பார்கள்.
சோனியா காந்தி, தமிழ்நாட்டுக்கு வாருங்கள், வாருங்கள் என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம். எங்கள் சொந்தங்கள் இன்னலில் இருந்து விடுபட, உயிர்கள் காப்பாற்றப்பட உத்தரவிட்டுவிட்டு வாருங்கள். இல்லை என்றால் உங்களை எதிர்த்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.
எவ்வளவோ போராடி விட்டோம், நெருக்கடி நேரத்தில் தான் விடிவு பிறக்கும் என்பதால் தான் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இனி மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் இனத்தால் ஒன்றுபடுவான், சாதிப்பான் என்பதை புரிந்து கொள்ளும் விதத்தில் எங்கள் போராட்டம் இருக்கும். வரப்போகிற மத்திய அரசு தமிழன் சொன்னால் செவி சாய்க்கும். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.
MUKILVANNAN
MR BHARATHIRAJAH IF YOU THINK PRACTICALY YOU CAN DO BEST FOR US,BRING OUR STRUGLE MY MAKING A GREAT FILMS SO THAT WORLD COME TO KNOW WHAT OUR PROBLEMS ARE,
STATMENTS WONT WORK.
YOU CAN DO WHAT YOU CAN DO.
மாயா
MUKILVANNAN
இன்னும் நீங்கள் அம்புலிமாமா வாசிக்கிறீங்க எண்டு நினைக்கிறன். Am I right? அதுதான் இப்படி கதைக்கிறீங்க?
அம்மா வந்தா இவங்களை உள்ள போடுவா? ஏன்? வன்னிக்கு போய் வந்து மெளனவிரதம் இருந்துட்டு, கலைஞர் வந்ததும் விரதம் கலைச்சு படம் காட்டினவை. தலைவரும் பாரதிராசா கையை புடிச்சு படம் எடுக்க கேட்டுத்தான் இருக்கிறார். புலிகள் தமிழ் சினிமாக்களை போய்கோட் செய்றாங்க. பாரதிராசாக்கள் உங்களுக்காக போராட்டம் நடத்தினம். என்ன கொடுமை?
நீங்கள் என்னமோ இங்கிலீசில்தான் எழுதுறீங்க. ஆனால் தமிழிலதான் சிந்திக்கிறீங்க. தமிழனுக்கு எங்கட பிரச்சனை நல்லா தெரியும். தமிழில படம் எடுத்து இனி வேலையில்ல. இங்கிலீசில எடுங்கோ? see you.
palli
பாரதிராஜா அவர்களே இந்த கிராமது வாசகனின் தேசத்து வணக்கம். ஜயா இது என்ன பதினாறு வயதினிலே சினிமவா?? அரைநிர்வானமாக நாடு பூராய் ஓட விட. இங்கு பல சட்டசிக்கல். இறையாமை. சர்வதேச ஒழுங்கு முறை இப்படி பல இருப்பதால் சோனியாவால் உடன் தங்கள் இயக்கத்துக்கு நடிக்க முடியாது. ஆகவே தங்கள் கமராவை வேறு திசையில் திருப்பி பச்சை பசுமைகளையும், திருப்பாச்சி அருவாள்களையும், மீசையின் அளவுகளையும், தெற்கத்து பெண்ணுகளின் வில்லதனத்தையும் படம் பிடித்து பணமாக்குவதுதான் சிறந்தது என பல்லிக்கு தோன்றுவதில் தங்களுக்கு வருத்தமில்லையே.