கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து மன்னார், வவுனியா பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரிநிலையங்களில் ஏக்கத்துடன் வாழும் எமது உறவுகளின் உண்மையான நிலைமைகளையும், மன்னார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறுபவர்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நேரடியாக பார்வையிட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் நேற்று (17) தொடக்கம் 23.04.2009 வரை ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள எமது கட்சியின் பணிமனையில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் உறவினர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அத்துடன் யாழ் மாவட்ட பொதுமக்கள் மற்றும் யாழ்நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடவுள்ளார்
msri
டக்கிளசுவின் வடக்கின் வசந்தம் முடிய> இவரின் இளவேனிர் காலம் ஆரம்பமாகின்றது! அவர் யாழில் பழுதடைந்தவைகளுக்கு உதிரிப்பாகம் கொடுத்தார்! இவர் அவைகளை சரிபார்த்து இயங்க விடப்போகின்றார்! வன்னிநிலைமையை சரிபார்த்து எவ்வளவுபுள்ளி (100ற்றுக்கு?) போட்டு ஐனாதிபதிக்கு கொடுத்திருக்கின்றார்! ஐனநாயக நீரோட்டக்காரர்களுக்கும் எக்கச்சக்கமான வேலை செய்கின்றார்கள்!
பார்த்திபன்
நலன்புரிநிலையங்களில் ஆனந்தசங்கரி நிற்கும்வரை, அங்குள்ள மக்களுக்கு அரசு காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் ரீயும் விசுக்கோத்தும் வழங்கினால், அதைப் பார்த்தே ஆனந்தசங்கரி பூரித்துப் போய்விடுவார்.
ajeevan
பார்த்திபன் on April 18, 2009 3:05 pm நலன்புரிநிலையங்களில் ஆனந்தசங்கரி நிற்கும்வரை, அங்குள்ள மக்களுக்கு அரசு காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் ரீயும் விசுக்கோத்தும் வழங்கினால், அதைப் பார்த்தே ஆனந்தசங்கரி பூரித்துப் போய்விடுவார்.
அதே அதே…. யாழ்பாணத்து மக்களுக்கும் “காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் ரீயும் விசுக்கோத்தும் வழங்கினால் போதும்” என்று சொல்ல விஜயமோ?
துரையப்பா மாதிரி ஆக்கள் யாழ்பாணத்தை முன்னேற்றி போட்டு பேர் வாங்கிடுவாங்க எண்டு பொடிகளை உசுப்பேத்தி போட்டு தள்ளி கி..கீ…போட்ட ஆட்கள்ல இருவரும் ஒருவர்? கொஞ்சம் கோயிட்டினம். இன்னும் சிலர் இருக்கினம்?
chandran.raja
ரீ யும் விசுக்கோத்தும் புலம்பெயர்ந்தவர்களும் இலங்கை அமைச்சர்களுக்கும் ஒரு சின்ன வேண்டுகோளாகவும் விஷயமாக இருக்கலாம்.உயிரை பாதுகாக்க வந்த நலம்புரிநிலையங்களில் இருப்பவர்களுக்கு அது ஆறுதலையும் அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு வாழ்கைக்கு ஒரு தென்பை ஊட்டவல்லது. இதை நிறைவேற்றப்படும் போது அரசாங்கத்தில் மக்களுக்கு இன்னும் விசுவாசமே ஏற்படும்.
ஆனந்தசங்கரி அவர்களில் எனக்கும் நிறையவே விமர்சனம் உண்டு. இப்படி நல்ல விஷகளை “பகிடி”ஆக்கும் போது……. இதில் சிரிப்பதற்கு எதுவுமே இல்லை. சிரிப்பவர்களைப் பார்த்து சிரிப்பதாக எழுதுபவர்களைப் பார்த்தே மனிதநேயம் சிரிக்கும்.
s.s.ganendran
பார்த்தீபன் அந்த்த மனிதனை சும்மா விடுங்கோ உலகம் முழுவதும் சுத்தித்திரியும் ஆனந்த்ட்கசங்கரி யாழ்ப்பாணத்திற்கு செண்|றால் தவறாகிவிடுமா?
அங்கு செண்றும் ஒண்றும் இல்லை எங்கு செண்றும் ஒண்றும் இல்லை மிகுதி இருக்கும் காலத்தை இப்படியாவது செலவளிக்கட்டுமே
palli
அப்படியா அட அடா.அதுதான் தோழர் ஜெனிவாவுக்கு வந்து விட்டாரோ. ஜயோ இந்த அரசியல் மேதைகள் ஏந்தான் ஊர்வலம். உண்ணாநோன்பு. ஜெனிவா .யாழ் விஜயம். தெனாபிரிக்காவில் மறைவு இப்படி பல பல பல விடுங்கோ சாமி பல்லிக்கே வெக்கமாய் இருக்கு.
accu
நண்பர்களே எல்லோர் மீதும் எதற்க்காக வெறுப்பை உமிழ்கிறீர்கள். ஆனந்தசங்கரி மீது ஏன் இந்த ஆவேசம். நாமெல்லாம் ஏதேதோ காரணங்களுக்காக நாட்டை விட்டு விலத்திவிட்டோம் ஆனால் இந்த வயசிலும் ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கையில் இருந்தபடி தன்னால் இயன்றவரை இயலுமான வழிகளில் எம் மக்களின் விடிவுக்காக குரல் கொடுத்து வருவது பெருமைப்படவேண்டிய ஒரு விசயமே அன்றி தூற்றுவதற்க்கு என்ன இருக்கிறது. யுனெஸ்க்கொ மன்ஜிற்சிங் விருது[2006] கொடுத்தது அவரை மதித்துத்தான். அவர் தன் குடும்பத்தில் பலரை இந்தப் போராட்டத்தில் இழந்துள்ளார்.
பார்திபன் தேசத்தில் உங்கள் பின்னூட்டங்கள் வாசித்து உங்கள் மேல் நம்பிக்கையுடன் கூடிய மதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் இங்கே ஒரு முறை சிறிது தடக்கியுள்ளீர்கள். நலன்புரிநிலையங்களில் உள்ள மக்கள் தமது உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள் அது மிகவும் சந்தோசம் ஆனால் அவர்கள் வாழும் வாழ்வு சந்தோசப்படக்கூடியதாக இல்லை. புலம்பெயர் நாடுகளில் இருந்து கொழும்பு மாநாட்டுக்கு போய்வந்த இருவரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் கருத்துப்படி புலிகள் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் அங்கில்லை ஆனால் அவர்கள் மிகவும் அடிப்படை வசதிகளை மட்டுமே பெற்றுள்ளார்கள்.அதிலும் உணவு அடிப்படையை விட தரம் குறைவே. காலையில் பாணும் தேநீரும்,மதியம் சோறும் பருப்பும்,இரவு பாணும் பருப்பும் தினமும் அனேகமாக இதுதான். எனவே இந்நிலையில் அவர்களுக்கு மேலதிகமாக குறைந்த செலவில் மேலும் இரு முறை தேநீரும் பிஸ்கட்டும் கொடுக்கும்படி ஆனந்தசங்கரி அவர்கள் கேட்டதில் நகைப்பதற்க்கு என்ன இருக்கிறது? பசில் ராஜபக்சதான் சிரித்தார் என்றால் இங்கிருந்து போனவர்களும் வேறு வழியின்றி சிரித்தார்களாக்கும்.
அஜீவன் அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத்துக்கு நிறையவே செய்துள்ளார். அவரை துரோகியென நான் ஒருபோதும் கருதியதில்லை. கூட்டணியினர் தமது அரசியல் லாபங்களுக்காக சில தவறுகள் விட்டது மறுப்பதற்க்கில்லை. அதற்க்காக இன்று நடக்கும் அத்தனை அநியாயங்களுக்கும் ஒட்டுமொத்த பழியையும் அவர்கள்மேல் சுமத்தி அவர்கள் உயிருடன் இருப்பதே பிழை என்பதுபோல் எழுதுவது எந்தவிதத்திலும் நாகரீகமாய்ப்படவில்லை.
நண்பர்களே மிகவும் இக்கட்டான நிலையில் எமது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் உள்ளது. இங்கே நாம் ஒருவர்மீது ஒருவர் வெறுப்பை கொட்டுவதை விடுத்து அனைவரும் இணந்து செயல்பட முனைவோம். ஆயுதம் கொண்டு எம்மை நாமே அடக்க இனி இடங்கொடுக்கக்கூடாது. இன்று எம்மைத் தலமை தாங்க பலர் ஆயுத்தப்படுத்துகிறார்கள். இன்னும் பலர் உருவாகுவார்கள். அவர்களின் இறந்தகாலங்களை விடுத்து இனி என்ன செய்கிறார் என்று பார்ப்போம். நன்மை செய்தால் வரவேற்ப்போம். பிழைவிட்டால் நாகரீகமாய் இடித்துரைப்போம். கொலைக்கலாச்சாரத்தை முற்றாக மறுதலிப்போம். தேர்தல்களின் போது எமது விருப்பு வெறுப்புகளை காட்டுவோம்.நன்றி.
பி.கு: எனக்கும் ஆனந்தசங்கரி அவர்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை.
பார்த்திபன்
சந்திரன் நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனந்தசங்கரி அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகளில் எனக்கு நிறையவே உடன்பாடுண்டு. குறிப்பாக கிளிநொச்சி என்ற மாவட்டம் உருவாக உழைத்தவரே அவர் தான். அது போல அந்தச் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பொரும் பாடுபட்டவரும் அவர். ஆனால் சமீப காலமாக அவரின் அரசியற் கருத்துகளும் செயற்பாடுகளும் நகைச்சுவை ஆகவே இருக்கின்றன. காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் ரீயும் விசுக்கோத்தும் என்பது மேல்த்தட்டு மக்களின் சிந்தனை. அடித்தட்ட மக்களுக்கு அரைவயித்துக் கஞ்சி கிடைத்தாலும் நிம்மதியான வாழ்க்கையும், மானத்தை மறைக்க உடையுமே வேண்டும். வெறும் அறிக்கைகளும் கடிதங்களும் அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றி விடாது. அதற்காக உழைக்க வேண்டும்.
பார்த்திபன்
Accu, தற்போது தான் உங்கள் பின்னூட்டமும் பார்க்க முடிந்தது. உண்மையில் ஆனந்தசங்கரி அவர்கள் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. அதனால்த் தான் அவரின் சில செயற்பாடுகள் தவறு போலிருந்ததால் விமர்சித்தேன். மற்றும் படி அவரின் வயதிற்கும் அனுபவத்திற்கும் அவர் நிறையவே சாதிக்கலாம். அதைத் தான் என் போன்ற ஒவ்வொருவரும் அவரிடம் எதிர் பார்க்கின்றோம். ஏற்கனவே ஆனந்தசங்கரி அவர்கள் பற்றி எழுதிய எனது கருத்து உங்களைப் போன்றவர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். மீண்டும் சொல்கின்றேன் எனக்கு ஆனநதசங்கரி அவர்கள் மீது நிறைய மதிப்பும் மரியாதையும் உண்டு.
MUKILVANNAN
parthepan,you know what you are taking.anantha sangari will miss his part in tamil history.he made a political sucide years ago,since than he became comedian.
chandran.raja
பார்த்திபன் உங்களின் அரசியல் கருத்துகளில் எனக்கு எப்பவும் நிறையவே உடன்பாடு உண்டு அந்த பின்னோட்டம் உங்களுக்காக மட்டும் பதியப்பட்டது அல்ல கொண்சன்ரையின் கட்டுரையோடும் சம்பந்தப்பட்டது.
யார் மனத்தையும் புண்படுத்துவதோ யாரையும் ஒதிக்கிவைக்கும் நோக்கம் கொண்டவை சுயநலஎண்ணங்களையும் வறண்ட நிந்தனைகளையும் கொண்டவை அல்ல என்று தங்களுக்கு புரியாதவையல்ல.
accu
நன்றி பார்த்திபன் உங்களின் மற்றும் சந்திரன் ராஜா போன்றோரின் பின்னூட்டங்கள் மூலம்தான் என்னை நிறையவே வடிவமைத்துக் கொள்ளமுடிகிறது. ஆரோக்கியமான உங்கள் கருத்துக்களை நிறையவே எதிர்பார்க்கிறேன். மீண்டும் நன்றிகள்.
palli
புலிகளும் அவர்கள் சார்ந்தவர்களும் புலியை காக்கவும் தம்மை வளர்க்கவும் அரும்பாட்டு பட்டு உழைத்து ஊர்வலம்.பட்டிணி சாவு. ஒன்று கூடி கும்மியடித்தல். உருவ (தலை) வழிபாடு. கவலையில் சேருதலென புதிசு புதிசாய் வாழ்கின்றனர்.
சிலரோ நாம் தப்பிய பட்டில் போதும் வேறு ஏதும் நமக்கேது என வாழ்கின்றனர்.
என்னும் சிலரோ மக்களுக்கு இரு கண்ணும் போனாலும் பரவாயில்லை. புலிக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என துடிக்கின்றனர்.
ஆனால் விமர்சனம் எழுத என வந்துவிட்டால் யார் தவறு விட்டாலும் சுட்டிகாட்ட மிக நிதானமாக எழுதகூடியவர்கள் கூட தயங்குவது ஏன் என பல்லிக்கு தெரியவில்லை.
சங்கரியர் பற்றியோ அல்லது தோழர் பற்றியோ விமர்சித்தால் ஏந்தான் சிலர் கோபபடுகிறார்கள். சங்கரியரின் இன்றய நிலை பற்றி அவரது கட்ச்சிக்கு லண்டனில் பொறுப்பாக இருப்பவருக்கே உடன்பாடு இல்லை. அவர் தற்ப்போது மிக கேவலமான ஒரு சுயநலவாதி என்பதுக்கு இன்னும் சிலவாரங்களில் செய்திகள் காத்திருக்கு. அவர் செய்வதெல்லாம் சரியாயின் அவர் தோழர் பற்றி மகிந்தாவுக்கு கொடுத்த கடிதமும் சரியானதே. இதுவரை யாழ் செல்லாத இவர் தோழர் ஜெனிவாவுக்கு வந்தவுடன் அங்கு ஏன் போனார் என்பதை தோழருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கலாமே. இன்று மக்கள்(ஈழ) படும் வேதனைக்கு பிரபாவின் முட்டாள்தனம் எப்படி காரணமோ. அதே போல் சங்கரி தோழர் போன்றோரின் அறிவியலும்(நரிதனம்) காரணம்தான். சங்கரியருக்கு பரிஸில் விருது. ஒரு தமிழனாய் மகிழ்ச்சிதான்.ஆனால் ஒரு மனிதனாய் பார்த்தால் அது எப்படியான சீர்கேட்டு சம்பவம் என்பது புரியும். இதுபற்றி தேசம் அனுமதித்தால் யாருடனும் பல்லி விவாதிக்க தயார். சஙரியுடனேயே விவாதித்தேன். எம் சார்ந்தவர்களோ அல்லது எமது எதிரிக்கு எதிராக செயல்படுவதாலோ சிலரை பலர் காப்பாத்த முனைவது இன்று புலிக்காக மக்களை பலி கொடுப்பதுக்கு சமன். சங்கரியரும் எமது மக்கள் மீது சவாரி செய்ய (செய்த) ஆசைபடும் ஒரு அரசியல்வாதியே.