தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாக்கும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.பிரபாகரன் படையினரிடம் சரணடைவதனைத் தடுத்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சரணடைவதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.