ஐ.நாவினால் விடுக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த அவகாம் அதிகரிப்பது தொடர்பிலான கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது என இலங்கை பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக போர் நிறுத்த அவகாசத்தை அதிகரிக்குமாறும், மோதல் தவிர்ப்பை மேலும் அதிகரிப்பதன் ஊடாக, பொது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்து, அவர்களைப் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வரவழைக்கலாம் என ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான விஜய் நம்பியார்யாருடன் அரச அதிகாரிகளின் சந்திப்பை அடுத்து இத்தீர்மானம் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி தெரிவித்துள்ளது.
மேலும் ஐ. நா செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான விஜய் நம்பியார்யாருடன் சந்திப்பின் போது “தற்காலிக போர் நிறுத்தத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித மாற்றங்களும் இல்லை என தான் தெளிவாக ஐ.நா பிரதிநிதியிடம் தெரிவித்ததாகவும் முன்னார் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தினால் எவ்வித பயனும் ஏற்படவில்லை எனவும் ,சிலியன்களை விடுவிக்குமாறும் சர்வதேசம் விடுதலைப்புலிகளுக்கு விடுத்த கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை எனவும்” இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பி.பி.சி செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்
msri
அப்ப இனி புலம்பெயர் நிகழ்வுகள் (உண்ணாவிரதம்+ஊர்வலம்) தேவையோ? தேவை இல்லையோ?
பார்த்திபன்
அரசின் முடிவு சரியானதே. ஐ.நாவும் அமெரிக்காவும் புலிகளைக் காப்பாற்றவே முயற்சிக்கின்றனர். இதனாலேயே அரசு ஐ.நாவின் கோரிக்கையை நிராகரிக்கின்றது.
thurai
தனிநாடு கேட்ட தலைவரிற்கு இருக்க ஈழத்தில் வீடேயில்லை.
வன்னியில் பறந்த புலிகொடியால் இப்போ ………………… முடியாத நிலை. இதனை இன்னமும் அறியாத புலத்துப்புலிகள், செயயும் ஆர்பாட்டம்.
புலி புரிவது போரா? போக்கிலித்தனமா? மக்களை அழித்து தங்களைக் காக்கும் புலிகளே தமிழரின் முதல் எதிரிகள்.
துரை
palli
துரை ஜந்தும் இரண்டும் ஏழு
அதை தெரியாதவன் தமிழனா என்பது போல் உள்ளது இன்றய ஆர்பாட்டம்.
MUKILVANNAN
SRILANKAN GOVERMENT VIOLATING THE TAMILS WRIGHTS AND FREEDOM.
MAHINDA STOP WHAT YOU ARE DOING,MOVE YOUR FORCES BACK TO BARRET.
WHOLE WORD KEEPING QUIET WE DONT YET TO KNOW WHY?
POINTING THE MATTER WHERE EVER INNCENT AFFECTED WORLD STEP IN BUT IN TAMILS ISSUES WHY THEY TURND BLIND EYE,IS THAT REGIONAL POWER IS THE RESON.
WE WANT WORLD ACT NOW SAVE THE INNOCENT CIVILIONS