இந்திய மத்திய அரசிடம் கூட்டமைப்பு 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு

tna_.jpgஇந்திய மத்திய அரசிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்திய அரசின் அழைப்பையேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவினர், டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் உரையாடினர்.

இலங்கையில் தொடரும் நெருக்கடிகள் தொடர்பில் பேச்சு நடத்தும் பொருட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்திய மத்திய வெளியுறவுத்துறைச் செயலர் எஸ்.எஸ். மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரைச் சந்தித்து நிலைமையை விளக்கியதுடன், இந்திய மத்திய அரசு உடனடியாக இலங்கை விவகாரத்தில் தலையிட்டு போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் மாலை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மத்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்துப் பேசிய பின்னர் கூட்டமைப்பு சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் தகவல் தருகையில், மூன்று கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுடன் நடந்த சந்திப்பின்போது மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

முதலாவதாக இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் இராணுவ தாக்குதல்களை நிறுத்துமாறு இலங்கையை இந்தியா உடனடியாக வலியுறுத்த வேண்டும்.

இரண்டாவதாக போர் நடைபெறாத பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்றாவதாக போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள 2 இலட்சம் தமிழர்களை பாதுகாக்க, அந்த பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

 இந்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். இதேவேளை, இன்று 17ஆம் திகதி இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் இலங்கையில் நிலவும் உண்மையான நிலைவரம் குறித்து அவர்களிடம் விளக்கமாக பேட்டி அளிக்க உள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • chandran.raja
    chandran.raja

    புலித்தையிலம் விற்பனையில் இம்முறை அக்கறை காட்டாதது நல்லதொரு அறிகுறி. இப்படியே போனால் ஈழமக்களுடைய வெறுப்பையாவது தேடிக்கொள்வது குறைவாக இருக்கும்.

    Reply
  • palli
    palli

    இந்த மூன்றயும் தான் கேக்க வேண்டுமென்று சந்திப்புக்கு முன்பே சம்பந்தரிடம் இந்திய தரப்பில் சொல்லபட்டது. அதை அவர்கள் ஏற்று கொண்டுதான் பேசவே போனார்கள். புலியைவிட்டு கூட்டமைப்பு தனிவழி புறப்பட்டு விட்டதோ. நல்ல காலம் பிறந்திருக்கு கூதமைப்புக்கு. ஆனால் இவர்களும் துரோகிகள் பட்டியலில் இடம் பிடித்து விட்டனர் என பல புலிகள் முனு முனுக்கின்றனர்.

    Reply