பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் திடசங்கற்பம் மிக்க சேவைக்காக அவர்களுக்கு தேசத்தின் கெளரவம் உரித்தாகட்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி வன்னி இராணுவத் தலைமையகத்திற்கு சென்று படை வீரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது இராணுவ வீரர்கள் உலகின் எந்தவொரு நாட்டிற்கும் முன்மாதிரியானவர்கள். இன, மத, ஜாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் அச்சமின்றியும் சந்தேகமின்றியும் சுதந்திரமாக வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடனும் ஒழுக்கத்துடனும் இவர்கள் பாடுபடுகின்றனர் எனவும் ஜனாதிபதி கூறினார்.
உலகில் மிகவும் கொடிய பயங்கரவாதப் புலிகளை இன்று அழித்து ஒழிப்பதற்கு எமது இராணுவ வீரர்களால் முடிந்துள்ளது.
இராணுவ வீரர்கள் வெற்றிபெறுவதற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சரியான தலைமைத்துவத்துக்கும் பாராட்டுக்கள் உரித்தாகும். அதே போல் இராணுவ வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் அதிகூடிய கவனம் செலுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை பெற்றுக் கொடுத்தல், அவர்களது குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். விசேடமாக கிளிநொச்சியில் இன்று நான் காலடி வைக்க முடிந்தமை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். இப்பிரதேசத்திற்கு இன்று நான் விஜயம் செய்வதற்குரிய காரணம் பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் அனைத்து இராணுவ வீரர்களினதும் வரையறையற்ற அர்ப்பணிப்பான சேவையினாலாகும். கிளிநொச்சிக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்ட ஜனாதிபதிக்கு படை வீரர்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
மாயா
எமது இராணுவ வீரர்கள் உலகின் எந்தவொரு நாட்டிற்கும் முன்மாதிரியானவர்கள். இன, மத, ஜாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் அச்சமின்றியும் சந்தேகமின்றியும் சுதந்திரமாக வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடனும் ஒழுக்கத்துடனும் இவர்கள் பாடுபடுகின்றனர் எனவும் ஜனாதிபதி கூறினார்.
இதைச் சரியா செய்தா மகிந்ததான் சரித்திர நாயகன்.
palli
இப்போதும் அவர் ஒரு தரித்திர நாயகன்தான். கிட்லர். புஸ். சதாம். இடியமீன். இப்படி பல சரித்திர (தரித்திர) நாயகர்களை பற்றி படித்தோமே. அதன் படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல் உள்ளது.
chandran.raja
இந்த றூற்றாண்டில் பிரிவினையைத் தேடுபவர்கள் மனிதநாரீகத்தின் வளர்ச்சியை அறியாதவர்கள் மனிதநேயத் தன்மைக்கு மதிப்பளிக்காதவர்கள்.
இவர்களின் எதிர்காலம் இருள் கவ்விக் கொள்வதுமல்லாமல் தமது பயணத்தை சறுக்கு வண்டியில் பயணம் செய்து இறுதியில் குப்பை தொட்டியில் தமது பயணத்தை முடித்துக் கொள்பவர்களே!
தமது மூலதனமாக தமது இனத்தின் பெருமையும் மதத்தின் புனிதத்தையும் அடிக்கடி வியாக்கியாணம் செய்துகொண்டே இருப்பர். இவர்களால் சமூகத்தில் அன்றாடம் துன்பப்படும் மக்களுக்கு எந்த சுகத்தையும் தேடிக்கொடுக்க முடியாதவர்கள் மாறாக வெறிபிடித்த கோஷமான “செய் அல்லது செத்துமடி”விளம்பர படுத்துபவர்.
இனஒழிப்பு அரசாகயிருந்தால் எப்படி 53 வீதமான தமிழ்மக்கள் மேல் மாகாணத்தில் எப்படி வாழ்வு நடத்தமுடியும்?.தலைவன் எப்படியோ தொண்டனும் அப்படியே! இராணுவத்தை சரியான பாதையில் வழிநடத்திய இராணுதளபதிகளும் பெருமைக்குரியவர்களே இலங்கையர் என்ற வகையில் நேர்மையுள்ள தமிழன் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம். சமூகத்தில்லுள்ள பிணியை அகற்ற எவன் மற்றவர்களின் அச்சுறுத்தலுக்கும் பணியாமல் துணிகரமாக செயல் படுகிறானோ அவனோ நாளைய வரலாற்றுநாயகன் ஆகிறான். இந்த இடத்தில் மகிந்த ராஜபக்சாவுக்கும் ஓர் இடம் உண்டு.
பார்த்திபன்
தன்னைத் தானே தட்டிக் கொடுப்பது போல் பேசவதை விட தமது செய்கைகள் மூலம் மற்றவர்களைப் பேச வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மஹிந்த மேற்கொண்டு, தமிழர்களையும் இந்த நாட்டின் சம உரிமையுள்ள மக்களாக ஏற்றுக் கொண்டு, அதற்கான தீரவுகளையும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன் வைப்பாரேயானால், நிச்சயம் உலகமே பாராட்டும்.