மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான்: ராமதாஸ்

jayalalitha.jpgஅதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக பொதுக்குழுவின் முடிவிற்கேற்ப என்னுடைய அருமைச் சகோதரி அவர்களை, அவருடைய இல்லத்திலே சந்தித்து, எங்களின் பொதுக்குழுவினுடைய முடிவிற்கு ஏற்ப இந்த கூட்டணில் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் பேசினோம்.

வெளியிலே வந்து ஊடக நண்பர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் (ஜெயலலிதா) பேட்டியளித்தார்கள். என்னிடம் அந்த மைக்கை கொடுத்து, நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் அப்போது சொன்னேன். 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னேன். இன்றைக்கும் சொல்லுகிறேன் மே 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுகிறது.

அதற்கு காரணம் மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான் என்பதால்தான் நான் சொல்லுகின்றேன். அந்த வகையிலே தமிழகம் முழுவதும் சென்று வருகின்ற இந்த கூட்டணி தலைவர்கள், மக்களுடைய நாடி துடிப்பை பார்த்து சொல்லுகின்றோம். இன்று எங்கு பார்த்தாலும், எங்கு சென்றாலும், மக்கள் சக்தி அன்பு சகோதரி பக்கமே என்பதை உணர முடிகிறது. திமுகவுக்கு எதிரான அலை இப்போது வீச தொடங்கியுள்ளது என்றார்.

Show More
Leave a Reply to s.s.ganendran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • palli
    palli

    ஜயா இந்த சம்பவம் எந்த தொடரில் வருகுதென சொல்ல முடியுமா?? அல்லது சினிமாவிலா??

    Reply
  • mini
    mini

    பல்லி
    உங்கள் நகைச்சுவை உணர்வைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    Reply
  • s.s.ganendran
    s.s.ganendran

    பல்லி உங்களின் கருத்து சற்று தவறாகவே இருப்பதாய் உண்ர்கிண்றேன் காரணம் இண்று தமிழகத்தில் இலங்கை வாழ் தமிழர்களில் அண்று 83களில் இருந்த்த உணர்வலைகள் மீண்டும் வீசத்தொடங்கியுள்ளன (தவறான பாதையில்) எனவே இம்முறை தமிழ்நாட்டு மக்கள் உண்மை நிலவரங்களை மறந்து அதிமுகா சேர்ந்த்துள்ள கூட்டமைப்பு (கூத்தமைப்பு ) தான் வாக்களிக்கப் போகிண்றார்கள்

    பொறுத்திருந்த்து பாருங்கள் மே 17 உங்களுக்கும் புரியும்.
    ஆனாலும் பாவம் அந்த அப்பாவி வன்னி மக்கள்

    Reply
  • palli
    palli

    நன்றி மினி. ஆனால் பல்லி எழுதுவது யதார்த்தம். ஆனால் இன்று யதார்த்தமே தமிழர் வாழ்வில் நகைசுவையாய் போய்விட்டது.

    Reply
  • palli
    palli

    //கூட்டமைப்பு (கூத்தமைப்பு) தான் வாக்களிக்கப் போகிண்றார்கள்.//
    இருக்கலாம். ஆனால் அதை சரி செய்ய எமது கூத்தமைப்பு தற்ப்போது டெல்லியில்.

    Reply