இலங்கைக்கு 160 மில்லியன் டொலர்களை கடன் உதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. யுத்த முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மின்சாரத்தினை வழங்குவதற்கும், மின்சார வசதிகளை மேலும் மேம்படுத்தவும் இந்த நிதியை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.