இந்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேசுவதற்காக நான்கு எம்.பிக்கள் அடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் நேற்று டில்லிக்கு சென்றனர்.
இலங்கையில் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக் களிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. பெரும்பாலான எம்.பிக்கள் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரினர்.
இருப்பினும் சில எம்.பிக்கள் பேசிப் பார்க்கலாம் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சேனாதிராஜா, பிரேமசந்திரன், அடைகலநாதன், இரா. சம்பந்தன் ஆகிய நான்கு எம்.பிக்கள் நேற்று டில்லிக்கு சென்றனர். அவர்கள் நான்கு பேரும் வெளியுறவுத் துறைச் செய லாளர் சிவசங்கர மேனனை இன்று சந்தித்துப் பேசுவார்கள்
thurai
தலைவரின் பிரச்சினை, புலிகளின் பிரச்சினை, புலத்துப்புலிகளின் பிரச்சினை, ஈழத்தமிழரின் பிரச்சினை. இந்த நாலு பிரச்சினைகளில் முதல் மூன்றும் தமிழரை அழிப்பது. அதற்காகவே புலத்தில் 40ஆயிரத்திற்குமேல் ஆர்ப்பாட்டம்.
இந்த நால்வரால் மட்டுமே தமிழரைக் காக்கமுடியுமா?
துரை
palli
புலியால் தெரிவு செய்யபட்டு மக்களால் தெரிவு செய்யபட்ட தமிழ் மக்கள் பிரதினிதியென புலியும் புலிசார்ந்தோரும் தம்பட்டம் அடித்தார்கள். ஆனால் டெல்லி தனது அரசியல் சாணக்கியதனத்தால் புலியின் பினாமிகளான கூத்தமைப்பையே புலிக்கெதிரான களத்தில் இறக்க முயற்ச்சிக்கிறது. எப்படியோ மக்கள் காப்பாற்றபட வேண்டும்.