காவற்துறையின் தலையீட்டை அடுத்து கிருஸ்ணா அம்பலவாணரின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்?

swiss_01.jpgவன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடி மருத்துவ உதவி தேவையென அறிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் உண்ணாநிலைப் போராட்ட இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் அவரைப் பலாத்காரமாக அகற்றினர்.

13.04.2009 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து 15.04.2009 இரவு 8 மணிவரை தொடர்ந்தது.

Show More
Leave a Reply to sintha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • மாயா
    மாயா

    அம்பலவாணரை போலீஸ் மண்டை சரியில்லாத ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் போட்டுட்டாம்.

    Reply
  • thamilen
    thamilen

    இந்நாட்டு அரசியல்களில் எவ்வித தெளிவுமற்றவர்களின் போராட்டங்கள் இவ்வகையில் முறியடுக்கப்படும்.அந்தந்த நாட்டு அரசியல் பாரம்பரிய வடிவங்களிலே போராட்டங்கள் முன்னெடுக்கபடல் வேண்டும்.புலத்தில் உள்ள புலிகள் அந்தந்த நாட்டில் நடைபெற்ற போராட்டங்களில் பங்பகுகொள்ளாதவர்களும் அவைபற்றி அறியாத கத்துக்குட்டிகளாகவே இருந்து வந்துள்ளனர். சர்வதேசத்தினை எமது போராட்டங்களிற்கு ஆதரவாக அணிதிரட்டல் உடன் சாத்தியப்படாது.மாறாக எமக்கு ஆதரவான அரசியல் கட்சிகளை தெரிவு செய்து அவர்களுடன் இணைந்து வேலைசெய்தல் வேண்டும். புலத்து புலிகள் செய்தது எல்லாம் தமிழ் மக்களுக்கு திருவிழாக்கள் காட்டியது மட்டுமே.

    தமிழன்

    Reply
  • palli
    palli

    இப்படியான அர்த்தமற்ற போராட்டம் தொடருமாயின் சுவுஸ்ல் மட்டுமல்ல பல நாடுகளில் மாயாவின் ஆசை நிறைவேற்ற வாய்ப்புக்கள் அதிகம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //சர்வதேசத்தினை எமது போராட்டங்களுக்கு ஆதரவாக அணிதிரட்டுதல் உடன் சாத்தியப்படாது // tamilen
    உடன் அல்ல என்றுமே சாத்தியம் இல்லை. ஒரு இனவிடுதலைக்கான போராட்டத்தை கடிச்சு குதறி ஒரு தனிமனிதனின் சாகஸவீரதீர செயலாகி புலம்பெயர்மக்களின் சக்திவளங்கள் செல்வங்கள் அனைத்தையும் தமிழ்மக்களுக்கு கஞ்சிக்கும் உதவாமல் குங்குலிய கலையநாயனார் மாதிரி அனைத்தையும் வெடிமருந்துக்கும் ஆயுதத்திற்கும் செலவிட்டு சர்வதேச மட்டத்திலும் பயங்கரவாதமாக்கிய பெருமை புலித்தலைமையே சாரும்.
    தமிழ்மக்களுக்கும் புலிகளுக்கும் இனவிடுதலைக்கும் போராட்டத்திற்கும் உள்ள இடைவெளியையை கண்டுகொள்ளாத வரை புலித்தலைமைக்கு கணக்கு தீராதவரை இன்று அல்ல என்றுமே சர்வ தேசத்தின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்க்கப் போவதில்லை.

    Reply
  • Thamilan
    Thamilan

    I am not involved in above subject.

    Reply
  • sintha
    sintha

    We can see that from the spelling of the names.

    Reply