ராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி என்று, பிரியங்கா கூறினார். அமேதி தொகுதியில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்காக அவரது தங்கை பிரியங்கா, பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் 18 கூட்டங்களில் பேசி இருக்கிறார். அயோத்யா நகரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால், மன்மோகன்சிங் தான் பிரதமர். இதில் மாற்றம் இல்லை. அவரது பெயரை காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. ராகுல் காந்தி சிறந்த உழைப்பாளி. அவருக்கு சிறப்பான திறமை உண்டு. பிரதமராக அவருக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது. எதிர் காலத்தில் ஒருநாள் ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி.
நான் அரசியலில் ஈடுபடுவேனா? என்ற கேள்விக்கு, எதிர்மறை பதிலை கொடுக்க விரும்பவில்லை. இல்லை என்பது நான் விரும்பாத வார்த்தை. ஆனால் இப்போது நான் அதுபற்றி சிந்திக்க வில்லை. எனது அண்ணன் மற்றும் தாயார் தொகுதிகளில் தேர்தல் நிர்வாகியாக மட்டும் செயல்படுகிறேன். சிறிய பொதுக்கூட்டங்களில் பேசுகிறேன். எனக்கும் வயதாகிக்கொண்டே போகிறது. எனவே அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு பிரியங்கா கூறினார்.
பல்லி
ஆக கட்ச்சி தலமை அக்கா பிரியங்கா பொறுப்பெடுப்பார் என நம்பலாமா??
பார்த்திபன்
அம்மா மன்மோகன்சிங் தான் பிரதமர் என்கிறார். அக்கா தம்பி தான் பிரதமர் என்கிறார். மொத்தத்தில் மக்களைக் குளப்புகின்றார்கள். இதனால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் ஆப்பு வைக்கும் இவர்கள் வாதம்.