அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

A-9 வீதியினூடாக யாழ்ப்பாணத்துக்கு பொருட்கள் – 9ஆம் திகதி முதல் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்

a9-road.jpg
யாழ்ப்பாணத்துக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஏ- 9 பிரதான வீதியினூடாக கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்களுக்கு அவசியமான அனைத்து உணவுப் பொருட்களையும் தரைமார்க்கமாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இது தொடர்பான அவசரக் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, சமூக சேவைகள் மற்றும் சமூக நல அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்துக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடல் மார்க்கமாகவே எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதையடுத்து கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் லொறிகள் மூலம் தரைமார்க்கமாக கொண்டு செல்ல கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

படையினரின் போக்குவரத்துக்காகவும் விநியோக நடவடிக்கைக்காகவும் யாழ்ப்பாணம் -கண்டி ஏ-9 வீதி நேற்று (2) காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 24 வருடங்களின் பின் திறக்கப்பட்ட மேற்படி பாதையினூடாக விடுமுறைக்காக வீடு செல்லும் படையினர் 20 பஸ் வண்டிகளில் ஆனையிறவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணமானார்கள். சுபவேளையான காலை 9.02 மணிக்கு இந்த முதலாவது குழு தமது பயணத்தை ஆரம்பித்தது.

இதே வேளை மற்றொரு படை வீரர்கள் குழு 24 பஸ்களில் அனுராதபுரத்தில் இருந்து ஆனையிறவுக்கு பயணமானது. படையினரின் போக்குவரத்துக்காக ஏ-9 வீதியை திறக்கும் உத்தியோகபூர்வ வைபவம் யாழ். பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்கவின் தலைமையில் ஆனையிறவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். பிரிகேட் தளபதி பிரிகேடியர் ருக்மல் டயஸ் இராணுவத்தின் 55 ஆம் படைப் பிரிவு கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா, இராணுவத்தின் 51 ஆவது படைப் பிரிவு தளபதி பிரியங்க ஜெயசுந்தர இராணுவத்தின் 7வது விசேட படைப் பிரிவு தளபதி கேர்ணல் ரொஷான் சென விரத்ன உட்பட பல உயரதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ஏ-9 வீதி திறக்கப்படுவதையொட்டி ஆனையிறவில் இராணுவ நகர்வு கட்டுப்பாட்டு நிலையமொன்றும் நிறுவப்பட்டுள்ளது. வீதியின் இரு மருங்கிலும் தேசிய கொடிகள் மற்றும் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளினதும் கொடிகள் என்பன பறக்கவிடப்பட்டிரு ந்தன. ஏ-9 வீதியும் விழா நடைபெறும் பகுதியும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விடுமுறையில் தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் 500 படை வீரர்கள் 20 பஸ்களில் காலை 9.02 மணிக்கு தெற்கு நோக்கி பயணமானார்கள். பாதையின் இருமருங்கிலும் வரிசையாக நின்றிருந்த படையினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்வு தொடர்பான செய்தி திரட்டுவதற்காக பெருமளவு ஊடகவியலாளர்கள் ஆனையிறவுக்கு வருகை தந்திருந்தனர்.

இவ்வளவு காலமும் படையினரின் போக்கு வரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகள் ஆகாய மார்க்க மாகவும் கடல் மார்க்கமாகவுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

உலகில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழப்பு

2009 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் உலகம் முழுவதிலும் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சமாகும். அதாவது, ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழந்துள்ளனர்.

சில நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாளர்களை வேலையைவிட்டு நிறுத்துவது மற்றும் பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் தானாக முன்வந்து ஓய்வுபெற்றால் சலுகை அளிப்பது போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன.

சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்கள் தங்களது செலவைக்குறைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பணியிடங்களை சர்வதேச நிறுவனங்கள் குறைத்துள்ளன.

ஒவ்வொரு ரூபாவைவும் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தற்போதைய நெருக்கடிக்கு உடனடி நிவாரணம் ஏதும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டின் ஜனவரி 26 ஆம் திகதி ஒருநாள் மட்டும் 80,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன. பெப்ரவரியில் அதைவிடக் குறைவான அளவிலேயே வேலை இழப்பு ஏற்பட்டது.

பெப்ரவரியில் சுரங்கத்துறையில் பெரும் நிறுவனமான ஆங்லோ அமெரிக்கன் 19,000 பணியாளர்களைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தது. ஜப்பானின் பனாசோனிக் நிறுவனம் 15,000 பணியிடங்களைக் குறைத்தது. இதுதவிர ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 10,000 பணியாளர்களையும் நோர்ட்டல் நிறுவனம் 3,200 பணியாளர்களையும் வேலையை விட்டு நிறுத்தியது.

இதேபோன்று குட் இயர் நிறுவனம் 5,000 பணியாளர்களையும் மைக்ரான் 2,000 பணியாளர்களையும் யு.பி.எஸ். 1,600 பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பணிநீக்கம் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலையின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயன்ற புலிகளின் 10 படகுகள் படையினரால் நிர்மூலம்

முல்லைத்தீவு, சாலையின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயன்ற புலிகளின் படகுகளை இலக்கு வைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பத்து படகுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. படையினரால் நிர்மூலமாக்கப்பட்ட படகுகளில் தற்கொலை படகுகள் நான்கும் அடங்குவதாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 8.00 மணி தொடக்கம் நேற்று அதிகாலை 3.30 மணி வரை இரு தரப்பினருக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றதாக தெரிவித்த அவர் இந்த நடவடிக்கைகளுக்கு கடற்புலிகளின் தலைவர் சூசை தலைமை வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுமாத்தளன் வடக்கு பிரதேசத்தை இராணுவத்தின் 55வது படைப்பிரிவினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றினர்.  அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவும் பொருட்டு கடற்புலிகளின் சுமார் 40 படகுகள் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் வருவதை அவதானித்துள்ளனர். இதனை அடுத்து புலிகளின் படகுகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சாலை தென்பகுதியில் கரையோரத்தை நோக்கி புலிகளின் பத்துக்கும் மேற்பட்ட படகுகள் வேகமாக வந்துள்ளன. படையினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  படையினரின் இந்த தாக்குதலில் 10 படகுகள் நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. ஏனைய படகுகள் தப்பிச் சென்றுள்ளன.

இவற்றில் நான்கு தற்கொலை படகுகள் பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன என்றும் பிரிகேடியர் பிரசன்ன சில்வா தெரிவித்தார்.

பிராந்திய மட்டத்தில் “நாடுகடத்தும்’ உடன்படிக்கை குறித்து “சார்க்’ ஆராய்வு

Dr Kohonaகொழும்பில் நடைபெற்று முடிந்த பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 31 ஆவது வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளல் மற்றும் நாடு கடத்தல் தொடர்பாக பிராந்திய ரீதியில் பிரத்தியேகமான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொள்வது பற்றி பேசப்பட்டுள்ளது.

“நாம் இந்த விடயம் பற்றி கலந்துரையாடினோம். கைதிகள் பரிமாற்றம், நாடு கடத்தல் என்பது இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இருக்கின்றன. எனினும் ஒரு குழுமமாக இவ்விடயத்தில் பிராந்தியமொன்றுக்குள் முன்செல்வதையும் மேம்படுத்துவதையும் தடுப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கிறார். எனினும், இதை எழுத்து மூலம் கொண்டு வரக் கூடிய வகையில், நிச்சயமான அடிப்படைக் கொள்கைகளின் உதவியும் பல சட்ட முறைமைகளின் ஒற்றுமையும் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அத்துடன், கடந்த 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சார்க் மாநாட்டில் செய்து கொள்ளப்பட்டு நடைமுறையிலிருக்கும் பரஸ்பர உதவிகளுக்கான உடன்படிக்கையை சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சர் போகொல்லாகம, அதன் பல சரத்துக்களில் நாடுகள் ரீதியான பரிமாற்றங்களின்போது பயங்கரவாதத்துக்கு வழி வகுக்கும் குற்றச் செயல்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக குறிப்ப்பிடிருக்கிறார். இதேநேரம், இது தொடர்பான இறுதி தீர்மானமொன்றுக்கு வரும் முன்னர் பல விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண தெரிவித்திருக்கிறார்.

உலக வெப்பநிலை அதிகரிப்பு; தெற்காசியா மோசமாக பாதிக்கப்படும் அபாயம்

saarc_flagss.jpgஉலக வெப்பநிலை அதிகரிப்பானது பருவகாலம் ஆரம்பமாவதை 515 நாட்கள் வரை தாமதப்படுத்தும் என்றும் தெற்காசியாவில் மழைவீழ்ச்சியை கணிசமான அளவுக்கு குறைத்து விடும் எனவும் அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.  அடுத்த நூற்றாண்டுக்குள் இது இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. புவிவெப்பநிலை அதிகரிப்பானது பருவகால சுழற்சியை கிழக்குநோக்கி நகர்த்தும் சாத்தியம் இருப்பதாகவும் இதனால் இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் பங்களாதேஷ், மியான்மாரிலும் அதிகளவு மழை வீழ்ச்சி ஏற்படும் என்றும் ஆனால், பாகிஸ்தான் ,இந்தியா, நேபாளத்தில் மழை வீழ்ச்சி குறைவாகி இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்கு இந்தியாவின் கரையோரப்பகுதிகள் இலங்கை மியான்மாரில் மழைக்காலம் நீண்ட நாட்களுக்கு தாமதமாகுமெனவும் கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும் என்றும், மழைவீழ்ச்சியில் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயம், மனிதர்களின் சுகாதாரம் பிராந்தியத்தின் பொருளாதாரம் என்பவற்றில் பாரிய தாக்கம் ஏற்படும் என்று இந்த ஆய்வறிக்கையை தயாரித்த நொயா டிவன்யா எச்சரித்துள்ளார்.

“இந்த பருவகாலங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே உலகின் அரைவாசி மக்கள் தொகையினர் வாழ்கின்றனர். சாதாரண பருவகால முறைமையில் இலேசான மாற்றம் ஏற்பட்டாலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று பேர்டியூ பல்கலைக்கழகத்தின் காலநிலைமாற்ற ஆய்வு நிலையத்தின் இடைக்காலப்பணிப்பாளரான நொயாடிவன்யா கூறியுள்ளார்.

பருவகால மழைவீழ்ச்சி தாமதமடைவது விவசாய உற்பத்தி, நீர்கிடைப்பனவு, நீர்மின்சக்தி உற்பத்தி என்பனவற்றை கணிசமான அளவுக்கு பாதிக்கச்செய்யும். அத்துடன் மழைவீழ்ச்சி குறைவாகவுள்ள பகுதிகளில் கடும் உஷ்ணமான நிலை காணப்படும் என்று பேர்டியூ பல்கலைக்கழக மாணவன் மோதாகிம் அஷ்பாக் கூறியுள்ளார்.

ஏ9 தரைப்பாதை வழியாக அவசிய அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடல்

epdp.jpgசமூக சேவைகள் அமைச்சரும் வடமாகாண விஷேட செயலணித் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வர்த்தக நுகர்வோர் மற்றும் கூட்டுறவு விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களும் ஏ9 தரைப்பாதை வழியாக அவசிய அத்தியாவசிய உள்ளுர் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். 

கிளிநொச்சிக்குப் போட்டி போட்டுப் பயணித்த இரு மலையகத் தலைவர்களும் இன்று அம்மக்கள் குறித்து பேசத் தயாரில்லை – திகாம்பரம் குற்றச்சாட்டு

up-cun.jpgயுத்த நிறுத்த காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு கிளிநொச்சிக்குப் பயணித்த மலையகத்தின் இரு பிரதான கட்சித் தலைவர்களும் இன்று அம்மக்களுக்காக குரல் கொடுக்கத் தயாரில்லையென குற்றஞ்சாட்டிய தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், அப்பாவிமக்கள் படும் துயரங்களை அரசியல் கண்ணோட்டத்தில் தமக்கு சாதமாக்கிப் பேசுவது தவறெனவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் மற்றும் உதவி நிதிச் செயலர் உதயா ஆகியோருக்கு தலவாக்கலை நகர் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய திகாம்பரம் மேலும் கூறுகையில்;

“இந்த நாட்டில் 25 வருடகாலமாக யுத்தம் நடைபெற்று வருவதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல, 50 வருடகால , 25 வருடகால அரசியல் தலைமைகளும் மலையகத்தில் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்கள் வெற்றிபெற்ற காலத்தில் எல்லாம் யுத்தம் பற்றிப் பேசாத தலைமைகள் இன்று தமது தோல்விக்கு யுத்த சூழ்நிலையைக் காரணம் காட்ட முயல்கின்றன. அப்பாவி மக்கள் படும் துயரங்களை அரசியல் கண்ணோட்டத்தில் தமக்குச் சாதகமாக்கிப் பேசுவது தவறு . யுத்தநிறுத்த காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் கிளிநொச்சி பயணித்ததை மக்கள் மறந்துவிடவில்லை. ஆனால்,இன்று அந்த மக்களுக்காக குரல் கொடுக்க இவர்கள் தயாரில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் யுத்தத்திற்கு தனது ஆதரவையே தெரிவித்து வருகின்றது என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.

எனவே, மத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை வெவ்வேறு காரணங்களைக் கூறி சமாளிப்பதை விடுத்து மக்கள் வழங்கிய தீர்ப்பினை ஏற்று செயல்படவேண்டும். மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும். அடையாள அட்டை இன்மையால் தமக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்கின்றனர். மக்களுக்கு அடையாள அட்டை இல்லை என்பது இப்போது தான் இவர்களுக்குத் தெரிந்ததா? அடையாள அட்டை உள்ளவர்களே இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது தெரிகிறது. அடையாள அட்டை இல்லாதவர்களின் வாக்குகளைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்’ என்றார்.

வெற்றி பெற்ற மற்றைய வேட்பாளரான உதயகுமார் பேசும்போது; “இன்று பள்ளிவாசலில் எமக்கு வரவேற்பளிப்பது ஒரு முன்னுதாரண நிகழ்வாகும். நாம் கட்சி இன, மத, பேதங்களுக்கு அப்பால் எமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தோம். மலையகத்துக்கான அரசியல் மாற்றத்தைக் கோரினோம். அதற்குக் கிடைத்த வெற்றியே எமது வெற்றி. இது மக்களின் வெற்றி. இதனை திரிபுபடுத்தி அலட்சியம் செய்பவர்கள் மக்களால் எதிர்வரும் தேர்தல்களில் மேலும் புறக்கணிக்கப்படுவார்கள்.

வருமானக் குறைவும் விலைவாசி உயர்வும் வறுமையும் மலையக மக்களுக்கு எப்போதுமே பாரிய பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இம்முறை கூட்டொப்பந்தத்தையும் தாமே முன்னெடுப்பதாக பிரதான தொழிற்சங்கம் ஒன்று அறிக்கை விடுத்துள்ளது. எமக்கு யார் முன்னெடுப்பது என்பதில் பிரச்சினை இல்லை. என்ன விடயம் முன்னெடுக்கப்படுகின்றது என்பதே முக்கியம். மக்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தால் மக்களும் ஆதரிப்பர். நாமும் ஆதரிப்போம். மாறாக நியாயமற்ற சம்பளம் முன்வைக்கப்படுமானால் மக்கள் போராட்டத்தை நாமே முன்னெடுப்போம்’ என்றார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது : சம்பிக்க ரணவக்க

champika.jpgவிடு தலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்தும் ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்

ஏ 9 வழியாக இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கு…

a9-road.jpg
அநுராதபுரத்தில் இருந்து ஏ 9 வீதியூடாக முதற்தடவையாக 600 இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1984 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக இன்று 20 பஸ்களில் 600 இராணுவத்தினர் சீருடையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தமிழக அரசியல்வாதிகளுக்கும் புலிகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் அம்பலம் – பாதுகாப்பு அமைச்சு

tamil_ltte_media-01.pngபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் கைப்பற்றிய புலிகளின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிலையத்தில் தேடுதல் நடத்திய படையினர் புலிகளுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் இடையில் உள்ள நெருங்கிய உறவுகள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வன்னி பயங்கரவாத நடவடிக்கைகளில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு உள்ள நேரடித் தொடர்புகளை இந்தப் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.  திராவிட மறுமலாச்சிக் கழகத் தலைவர் வைகோ புலிகளின் சீருடையில் பிரபாகரனுடன் கைத்துப்பாக்கி  சுடும் நிலையில் படங்களில் காணப்படுகிறார்.

பழ. நெடுமாறன் உட்பட மற்றும் தமிழக அரசியல் முக்கியஸ்தர்களின் படங்களையும் படையினர் இங்கு கண்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தினால் புலிகள் தோற்கடிப்பதைதத் தடுக்க வைக்கோ பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டுவருவது தமிழ் மக்களைப் பாதுகாக்கவல்ல, வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமிழ் ஈழத்துக்கான தேசிய தொலைக் காட்சி சேவையொன்றை நடத்துவதற்கான  வீடியோ பதிவுகளையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தமது ஒளிபரப்பை மூன்று மொழிகளிலும் செய்மதியூடாக மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil_ltte_media2.png

tamil_ltte_media4.png