இந்தியா வின் பிரபல பாடகி சொர்ணலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா (37) சிகிச்சைப் பலனின்றி சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா 25 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார்.
இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும். 1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் “மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய ‘எவனோ ஒருவன்”, பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய ‘உசிலம் பட்டி பெண்குட்டி’ காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கருத்தம்மா’ படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி….’ எனும் பாடாலை பாடியதற்காக சொர்ணலதா தேசிய விருதும் பெற்றார். இவர் ஏறத்தாழ 7500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
‘தளபதி’ பாடத்தில் ‘ராக்கம்மா கையைத் தட்டு…’, ‘சத்திரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘போவோமா ஊர்கோலம்’, ‘நீ எங்கே…’, ‘என் ராசவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…’, ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா…’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘எவனோ ஒருவன்…’, ‘பம்பாய்’ படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா…’, ‘இந்தியன்’ படத்தில் ‘மாயா மச்சிந்ரா…’ போன்றன. இவர் பாடிய பாடல்களுள் பிரபலமானவை.