தேசிய நல்லிணக்க, ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும்கட்சி சார்பில் கணேசமூர்த்தி, குணம் (களுதாவளை) , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமன், ரமேஷ் ஆகியோர் தமிழர்கள் தரப்பில் போட்டியிட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம்கள் சார்பில் ஆளும் தரப்பில் அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா ஆகியோர் போட்டியிடவுள்ளதாகவும், இன்னுமொரு தமிழ் வேட்பாளன் பெயர் இன்று சிபார்சு செய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பொதுத்தேர்தலின் பின்னர் சகல கட்சிகளு க்கும் அழைப்பு விடுக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘இந்து’ பத்திரிகைக்கு விசேட பேட்டியொன்றை வழங்கிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் சகல கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துப் பேச்சு நடத்துவேன். தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கு கொள்வார்கள். தமிழ், முஸ்லிம் தலைவர்களை அழைத்துப் பேசுவதற்கு கூடுமானவரை முயற்சி செய்திருக்கிறேன். பிரபாகரன் இருக்கும் வரை அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களில் ஆர்வம் காட்டவில்லை.
இப்போது காலம் கனிந்திருக்கிறது. நான் ஜனாதிபதி என்ற வகையில் அவ ர்கள் என்னோடு பேசவேண்டும். என்னோடு அவர்களுக்கு பேச முடியாது விட்டால், புதிய தலைவர்களுடன் நான் பேசுவேன்.
13 வது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அது ஏற்கனவே அமுல்படுத்தப்பட் டுள்ளது. இதன்படி பொலிஸ் அதிகாரங்களைத் தவிர அனைத்தும் அமுலிலுள்ளது.
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன். இப்போது நிவாரணக் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் பேரே இருக்கின்றனரென்றார்.
ஐ.தே.கவுக்கும், ஜே.வி.பிக்கும் இடை யிலான கருத்து முரண்பாடுகள் உக்கிர மடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இரு சாராரும் இப்போது நேரடி மோத லில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தால் ஜே.வி.பிக்குத் தேசியப் பட்டியலில் மூன்று இடங்களை ஒதுக்கித்தர முடியும் என ஐ.தே.க தெரிவித்துள்ளதால் அந் தக் கட்சி மீது ஜே.வி.பி. கொதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“பொதுத் தேர்தலில் யானைச்சின்னத் திலேயே ஐ.தே.க போட்டியிடும். ஜே.வி.பி. விரும்பினால் யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடலாம். இல்லையேல் எமக்கு ஆதரவளித்தால் அவர்களுக்கு தேசிய ப்பட்டியலில் மூன்று ஆசனங்களை வழங்க முடியுமென்று ஐ.தே.க.வின் காலி மாவ ட்ட அமைப்பாளர் வஜிர அபேவர்தன கூறி யிருக்கின்றார். இதனையடுத்து ஜே.வி.பி. அதன் அனைத்துக் கூட்டங்களிலும் ஐ.தே.க.வை கடுமையாகச் சாடி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
“வேறு கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்ற த்துக்குச் செல்லும் அவசியம் கிடையாது. ஒவ்வொரு கட்சியினதும் தேசிய பட்டியலில் செல்ல வேண்டிய தேவையும் எமக்கு இல்லை” என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பகிரங்கமாகவே ஐ.தே.க.வை விமர்சித்து வருகிறார்.
தொடர்ந்து நடைபெறும் மீள்குடியேற்றத்தின் ஒரு கட்டமாக நேற்றைய தினம் ஆனந்தபுரம் தெற்கும் வடக்கிலும், நாளை மறுநாள் தொண்டைமாநகர் பிரதேசத்திலும் மீள்குடியேற்றங்கள் நடைபெறகின்றன. மீள்குடியேறும் மக்களுக்கு UN உதவிப் பொருட்களும் சில அன்றாட உதவிப் பொருட்கள் அரசினாலும் கொடுக்கப்படுகின்றது. அரச இராணுவத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் அவரவர்களின் சொந்த இடங்கள் சென்று பார்வையிட அனுமதித்தும் பின்னர் அவர்களை தமது சொந்த இடங்களில் குடியேறவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்படியாக குடியேறியவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபோது தாம் தமது வீட்டுக்கு வந்து சேர்ந்தது தமக்கு மகிழ்ச்சியாக உள்ளபோதும் தமது பிள்ளைகளை புலிகள் பலவந்தமாக இழுத்துப்போய் பலிகொடுத்ததை தம்மால் மறக்க மடியாமல் இருப்பதாகவும் கூறினார். தமது அயலில் உள்ள தாய் தனது வீட்டுக்கு வந்ததும் பலிகொடுத்த தன் குழந்தையை நினைத்து அழுததாகவும் அவர் கூறினார்..
இராணுவத்தினர் வசம் உள்ள யுத்தகாலங்களில் விட்டுப்போன வாகனங்கள் இராணுவத்தினரால் பொது மக்களுக்கு விற்கப்படுவதாகவும் மீள்குடியேறியவர்கள் தெரிவித்தனர்.
இலங் கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47. நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், ‘மிமிக்ரி’, மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்த ஸ்ரீதர் பிச்சையப்பா.
1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்தவர்
இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்து கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி பாராளுமன்ற சபாநாயகராக செயற்பட்ட வி.ஜெ.மு.லொக்குபண்டார அவர்கள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டார். பண்டாரவளை நகரில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆறாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான லொக்கு பண்டார இந்த முடிவை எடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் போட்டியிடவுள்ளதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தார். தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட நாடியிருந்ததாகவும், இறுதிநேரத்தில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது விடயமாக தேசம்நெற் தங்கேஸ்வரியுடன் தொடர்புகொண்டு வினவியபோது தான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதாக உறுதிப்படுத்தினார். இன்று இது விடயமாக ஜனாதிபதியை சந்தித்து நேரடியாகக் கதைத்ததாகவும் தெரிய வருகின்றது.
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் தினம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையில் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களோ அல்லது பேரணிகளையோ நடத்தக் கூடாது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வது தொடர்பிலும் சில விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டுமென பிரதிக் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது குறித்த வேட்பாளரும், அவரது உதவியாளரும் மட்டுமே பிரசன்னமாக முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற முரண்பாடுகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே நாடாளுமன்றத் தேர்தலையும் அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் நபர்கள் குறித்து புலனாய்வூப் பிரிவினரும் தகவல்களைத் திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயிற்றப் படாத, சகல ஆசிரியர்களுக்கும் விஷேட பயிற்சி அளித்து அவர்களின் சேவையை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 42 மத்திய நிலையங்களில் இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
நாட்டிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் கடமையாற்றும்; பட்டதாரியல்லாத பயிற்றப்படாத, சகல ஆசிரியர்களையூம் பயிற்றுவிக்கும் இந்த விஷேட திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவும் தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவன அபிவிருத்திப் பிரிவும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
வார இறுதி நாட்களில் இப்பயிற்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் மொழி மூலம் 18 மத்திய நிலையங்களும் சிங்கள மொழி மூலம் 17 மத்திய நிலையங்களும் ஆங்கில மொழி மூலம் 7 மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இவற்றில் கடமைபுரிய பகுதி நேர அடிப்படையில் வருகை தரும் விரவுரையாளர்களாக சுமார் 200 பேர் வரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்தப் படவுள்ளனர்.
இப்பாடநெறி இரு வருடங்களைக் கொண்டது. முதலாம் வருடம் அளவீடும் மதிப்பீடும், கல்வி உளவியல், வகுப்பறை முகாமைத்துவம் முதலான பாடப் பரப்புகளைக் கொண்டிருக்கும்
எதிர்வரும் பொதுத் தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் அரசாங்க உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த உத்தேசிப்பதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கின்றுது.
இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றவர்களின் விபரங்களை தேர்தல் தலைமை செயலகத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்கா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளைக் கேட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது 2 இலட்சத்து 50 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டனர்.
தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அபேட்சகர்களின் விருப்பு வாக்குகள் முதலில் எண்ணப்படும் என்றும் ஏனைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் பின்னர் எண்ணப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.