அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை வெளிநாடு பயணமானார்.

mrs-veluppillai.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை வெளிநாட்டுக் நேற்று பயணமானார். பனாகொடை இராணுவ முகாமில் அவரது கணவனுடன் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கணவர் வேலுப்பிள்ளை மரணமானதை அடுத்து அவர் இறுதிக்கிரியைகளுக்காக வல்வெட்டித்துறைக்க வந்திருந்தார். சுகவீனமுற்றிருந்த பார்வதி அம்மையார் சிறிது காலம் அங்கு தங்கி யிருந்தார். யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தால் அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். சிவாஜிலிங்கம் செய்த பயண ஒழுங்குகளை அடுத்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டுச் சென்றார்.

உங்கள் வாக்கு சிங்களவருக்கே

sinhalavoting.jpgகட்சி நிறம் எதுவானாலும் உங்கள் வாக்கு சிங்களவருக்கே என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் இந்த வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அம்பாறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கண்டியில் தேசிய மகளிர் தினவிழா

இலங்கை சமுர்த்தி அதிகார சபை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ந் திகதி ஏற்பாடு செய்துள்ள தேசிய மகளிர் தின விழா கண்டி நகரில் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

தேசிய மகளிர் தின விழாவில் நாடு பூராகவுமுள்ள பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து இரு பெண்கள் வீதம் கலந்து கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்திய இசை மேதை ரவிசங்கர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேச்சு

ravi-pra.jpgஇலங் கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள உலகப் பிரசித்திபெற்ற இந்திய இசை மேதை ரவி சங்கர் சர்மா ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் நடந்தது.

ரவி சங்கர் சர்மாவின் இலங்கை விஜயம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவரை வாழ்த்தி ஞாபகச் சின்னமொன்றையும் பரிசளித்தார். இந்நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றதுடன் கலாசார மரபுரி மைகள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் பிறந்த ரவிசங்கர் சர்மா ஆசியாவில் மட்டுமன்றி முழு உலகிலுமுள்ள இசை ரசிகர்களின் அபிமானத்தையும் கெளரவத்தையும் பெற்றுக்கொண்டவர். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். தமது இசைப்பணிக்காக “பிலிம் பெயார்” விருது உட்பட பல்வேறு விருதுகளைச் சுவீகரித்துக் கொண் டவர்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை நடாத்தியுள்ள இவரது ‘கீத் மாதுரி 2010’ இசை நிகழ்ச்சி நாளை 7ம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்ந்தவர்களுக்கான வட்டி நிவாரனம்

வட்டி வீதம் குறைக்கப்பட்டதனால் அங்கீகாpக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் சேமிப்பில் பணம் வைத்துள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிவாரனமாக போனஸ் வட்டி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற ரீதியில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். அதன்படி குறிப்பிட்ட சேமிப்பாளா;களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 8 மதல் 10 வீதமான வட்டி வீதத்தக்கு மேலதிகமாக 20 வீத வட்டி போனஸாக வழங்கப்படவூள்ளது. அதிகூடிய தொகையாக நபர் ஒருவருக்கு மாதத்துக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வருடத்துக்கு 120000 ரூபா வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்கு அரசாங்கம் 120 கோடி ரூபாவை ஒதுக்கவுள்ளது.

இடம்பெயர்ந்த வாக்காளர்களுள் கூடுதலானோர் வாக்களிக்க விண்ணப்பம் – ஜனாதிபதி தேர்தலைவிட விண்ணப்பித்தோர் எண்ணிக்கை இருமடங்கு

election_cast_ballots.jpgஇடம் பெயர்ந்த வாக்காளர்கள், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கென கூடுதலானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலைவிட பொதுத் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை இரு மடங்காகுமென்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்.

வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பு, களுத்துறை, புத்தளம், அனுராதபுரம் முதலான பிரதேசங்களில் வாழும் மக்களே இவ்வாறு விண்ணப்பித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க சுமார் 26 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். ஆனால், பொதுத் தேர்தலில் வாக்களிக்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக மேலதிக ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை அமைப்பதற்குத் தேர்தல்கள் ஆணையாளர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். வேட்பாளர் ஒருவர் மாவட்டமொன்றில் ஒரு மத்திய அலுவலகத்தையும் ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஓர் அலுவலகம் வீதமும் அமைத்துச் செயற்பட முடியும். எனினும், இந்த அலுவலகங்களை தேர்தல் நடைபெறும் தினமான ஏப்ரல் எட்டாந் திகதி நள்ளிரவு வரையே நடத்த முடியும். அதன்பின் மூடிவிட வேண்டும். கிளை அலுவலகங்கள் ஆறாந் திகதி நள்ளிரவு வரையே நடத்தப்பட முடியும். எனினும், வேட்பாளர் தனது இல்லத்தில் ஓர் அலுவலகத்தை ஆறாந் திகதி நள்ளிரவுக்கும் எட்டாந் திகதி நள்ளிரவுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் எந்தவொரு தேர்தல் பிரசார அலுவலகத்தையும் அமைக்கக் கூடாது என்பது சட்டமாகும். தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபதி சூரியாராச்சியின் மனைவி ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு – ஐ. ம. சு. முவை ஆதரிக்க முன்வருகை

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் மனைவியுமான தில்ருக்ஷி ஸ்ரீபதி சூரியாராச்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் இச்சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைமைத்துவம் மற்றும் அதன் செயற்திட்டங்கள் குறித்து திருமதி தில்ருக்ஷி தமது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையின் நிலைப்பாடற்ற தன்மை மற்றும் தூர நோக்கற்ற திட்டங்கள் குறித்து தமது அதிருப்தியைத் தெரிவித்த அவர்; தற்போது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் பலமான வேலைத்திட்டங்களுக்கு சுயாதீனமாக தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீபதி சூரியாராச்சி கட்டியெழுப்பிய அமைப்பு வியூகத்தினைப் பயன்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பலப்படுத்துவதற்கு உழைப்பதாக அவர் மேலும் தெரிவிததார்.

தில்ருக்ஷி சூரியாராச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு கம்பஹா மாவட்டத் தலைவியாகவும் ஐ. தே. க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமாகவுள்ளார். மேற்படி நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சுகாதார மேம்பாட்டு தேசியக் கொள்கை!

nimall.jpgசுகாதார நடவடிக்கைகளின் மேம்பாட்டுக்கான  தேசியக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு அமைச்சரவை முடிவு  செய்துள்ளது.

சுகாதாரம் மற்றும் போஷாக்குத் தறை அமைச்சா; நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமாபித்திருந்தாh;.

சுகாதாரத் துறையின் அனைத்து விடயங்களையம் உள்ளடக்கியதாக இந்தக் கொள்கைத் திட்டம் வகுக்கப்படவுள்ளது.

பிரிட்டனின் செயற்பாடு இலங்கையின் இறைமை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்

gl_1.jpgஇலங் கையின் உள்விவகாரங்களில் தலையிட பிரிட்டனுக்கோ அல்லது வெறெந்த நாட்டுக்கோ தார்மீக உரிமை கிடையாது. புலிகளுக்குச் சார்பான உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றியதன் மூலம் அந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும். பிரிட்டனின் செயற்பாட்டின் மூலம் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ஜீ. எல். பீரிஸ் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

இலங்கைக்கு வெளியில் புலிகள் இயக்கத்தை நிறுவ வேண்டுமென்று கூறிவரும் உலகத் தமிழ் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் பங்கேற்றது மிகவும் தவறாகும். பிரிட்டனில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அந்நாட்டு அமைச்சருக்கு உரிமை உள்ளது. ஆனால், இலங்கையின் உள்விவகாரம் குறித்து பேசுவதற்கு அவருக்கு எதுவித உரிமையும் கிடையாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் தெளிவான தீர்வு வழங்கியுள்ளனர். இந்த நாட்டுக்கு எத்தகைய தீர்வு தேவை என்பதை இந்த நாட்டு மக்கள் முடிவு செய்வர். ஒரு நாட்டின் விடயம் தொடர்பில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட நோக்கம் இருக்கலாம். ஆனால், அந்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிட அனுமதிக்க முடியாது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின் செயற்பாட்டையும் உரையையும் நாம் கண்டிக்கிறோம். இதேவேளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளை கொள்வனவு செய்யாது பகிஷ்கரிக்குமாறு மேற்படி அமைப்பு அங்குள்ள தமிழ் மக்களை கேட்டுள்ளது. இதனூடாக எமது நாட்டு பொருளாதாரத்தை அழிக்க சதி செய்யப்பட்டு வருகிறது என்றார்.

பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு: சாட்சிகளின் தொகுப்பு ஓரிருதினங்களில் இராணுவ நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

sarath_fonseka-02.jpgஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளின் தொகுப்புக்கள் இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சாட்சிகளின் தொகுப்பு தயார்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவு பெறவுள்ளதுடன் அடுத்த வார முற்பகுதியில் இது இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரை 31 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தற்பொழுது தொழில் நுட்ப சான்றுகள் தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். சரத் பொன்சேகாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 31 சாட்சியங்களில் சிவிலியன்கள் மற்றும் படையினரும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ நீதிமன்றில் சாட்சியங்களின் தொகுப்புக்கள் சமர்ப்பிக்க முன்னர் தொழில் நுட்ப சான்றுகள் தயார்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள தாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.