கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பிக் பிரதர் நிகழ்ச்சி என மோசடி – துருக்கியில் 9 இளம் பெண்கள் மீட்பு

11-big-brother-girls.jpgபிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல நடத்துவதாக கூறி 9 இளம் பெண்களை மோசடியாக வரவழைத்து ஒரு வீட்டில் தங்க வைத்து அவர்களை கேமரா மூலம் ரகசியமாக ஆபாச படம் பிடித்து வந்துள்ளது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 மாத வீட்டுச் சிறைக்குப் பின்னர் அந்தப் பெண்களை போலீஸார் மீட்டுள்ளனர்.

இஸ்தான்புல் அருகே உள்ள ஒரு வீட்டில்தான் இந்தப் பெண்களை அடைத்து வைத்திருந்தனர். பிக் பிரதர் நிகழ்ச்சி போல என்று கூறி இவர்களை வரவழைத்து வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டனர். பின்னர் ரகசியக் கேமரா ஒன்றின் மூலம் இவர்களது செயல்பாடுகளை ரகசியமாக படம்  பிடித்து அவற்றை இன்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பாக காட்டி பணம் பார்த்துள்ளனர். இதில் அவர்களது பாத்ரூம் ஆபாச காட்சிகளும் படுக்கை காட்சிகளும் அடக்கம். அதை இன்டர்நெட்டில் வி்ற்றுள்ளது அந்தக் கும்பல்.

முதலில் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்கள் தேவை என்று இந்த கும்பல் விளம்பரம் கொடுத்துள்ளது. அதைப் பார்த்து நிறையப் பெண்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு குரல் தேர்வு, முக அழகுத் தேர்வு என நிறைய நடத்தி பின்னர் 9 பேரை தேர்வு செய்து வீட்டுக்குள் அனுப்பி விட்டனர். இந்த நிலையில், இந்தப் பெண்களின் பெற்றோர்கள், தங்களது பெண்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் பெரும் குழப்பமடைந்து போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸ்  விசாரணையில், பிக் பிரதர் நிகழ்ச்சி என்ற பெயரில் 9 பெண்களும் சிக்கிய விவரம் தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று அடைபட்டிருந்த 9 பெண்களையும் மீட்டனர்.

இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

110909rahul_gandhi.jpgஅகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்தியாவின் தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதென்பது ஆபத்தான யோசனை என்றார்.

அத்தகைய திட்டங்களின் பாரதூர விளைவுகள் பற்றி சிந்திக்கப்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்ற அவர் இயற்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடவேண்டும் என்றும் அதனுடன் விளையாடுவது பேரழிவினை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதி நதிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக அனைத்து நதிகளையும் இணைக்கலாம் என்கிறாரே என்று கேட்டபோது, அத்தகைய இணைப்பு ஆபத்தானது என்பது தனது சொந்தக் கருத்து என்றும், மேலும் மாநிலங்கள் நதி நீர் பங்கீடு குறித்த பிரச்சினைகளை வேறு வழிகளிலே தீர்த்துக்கொள்ள முயலலாம் என்றும் ராகுல் காந்தி பதிலளித்தார்.

ஸ்வைன்: இந்தியாவில் 154 பலி

swine.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் 5, கர்நாடகாவில் 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சுமார் 176 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 32, மகாராஷ்டிராவில் 26, தமிழகத்தில் 19 மற்றும் ஹரியானாவில் 14 பேருக்கு பரவியுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,611 ஆக அதிகரித்துள்ளது.

கேமராமேனை அடிக்கவில்லை: ஹர்பஜன் சிங் விளக்கம்

கேமராமேனை நான் அடிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறினார். ஹர்பஜன் சிங், புதன்கிழமை பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்தபோது கேமராமேனை அடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது: நான் கேரமாமேனை அடிக்கவில்லை. விமானநிலையத்துக்கு நான் வந்து காரிலிருந்து இறங்கியபோது எனது தலையில் வேகமாக ஏதோ பட்டது. அது கேமரா என்று அறியாமலேயே அதை நான் தள்ளிவிட்டேன். நான் அவரை அடிக்கவில்லை என்றார் அவர்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ‘முன்டாசர்’ திங்கள் விடுதலை

1099images.jpgகடந்த ஆண்டு டிசம்பரில் பாக்தாதில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது பாதணிகளை வீசி பிரபலமடைந்த இராக் நாட்டு பத்திரிகை நிருபர் முன்டாசர் அல் ஜெய்திக்கு கார், வீடு,  பணம் என பல்வேறு பரிசுப் பொருள்களை தரத் தயார் என்று ஏராளமானவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

புஷ் மீது பாதணி வீசிய குற்றத்துக்காக அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இராக் நீதிமன்றம் ஒன்று 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.  ஜனாதிபதி; பொதுமன்னிப்பு வழங்கியதால் அவர் அடுத்த திங்கள்கிழமை விடுதலை ஆகிறார். அவர் விடுதலை ஆகப்போகும் செய்தி எட்டவே ஏராளமானோர் அவருக்கு வெகுமதி தருவதற்காக காத்திருக்கின்றனர்.  இதற்காக பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.  இந்த தகவலை தி கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நிருபர் இதற்கு முன்பு வேலை செய்த நிறுவனத்தின் அதிபர் 4  படுக்கை அறை வசதி கொண்ட வீட்டை கட்டிமுடித்து அவருக்கு அதை இனாமாக வழங்க தயாராக உள்ளாராம். இதுதவிர கார் போன்றவையும் அவருக்கு கொடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மேலும் அவர் வேலைசெய்த பத்திரிகை அலுவலகத்துக்கு நிறைய பேர் தொடர்பு கொண்டு பணம் தருகிறேன்,  அவரது உடல்நலம் பேண மருத்துவ செலவை ஏற்கிறேன் என்றெல்லாம் தெரிவித்துள்ளனர்.

மொராக்கோவில் வசித்துவந்த இராக்கியர் ஒருவர் முன்டாசர் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக இருக்க தனது மகளையே தருகிறேன் என்று தெரிவித்துள்ளாராம். சவூதியிலிருந்து தொடர்பு கொண்ட மற்றொரு நபர் முன்டாசரின் ஷ_க்களுக்காக 1 கோடி டாலர் பணம் தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளாராம்.

ஆனால் இதையெல்லாம் நம்பிவிடமுடியாது.  புஷ் மீது ஷ_ வீசப்பட்ட உடன் எத்தனையோ பேர் தொடர்புகொண்டு இது தருகிறேன் அது தருகிறேன் என வாய் நிறைய பேசினார்கள். சொன்னதோடு சரி. இப்போதும் இந்த வார்த்தைகளை நம்பிவிட முடியாது.  என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார் பத்திரிகை ஆசிரியர் அப்துல் ஹமீத்

சிறையிலிருந்து விடுதலையாக உள்ள முன்டாசர் இனி பத்திரிகையாளர் வேலைக்குப் போகத் தயாராக இல்லை என்பது மட்டும் தெரிகிறது. அவர் அநாதைகள் இல்லம் ஆரம்பிக்கப் போகிறாராம். இந்த தகவலை தமது இரு சகோதரர்களிடம் முன்டாசரே தெரிவித்துள்ளார

மைக்கல் ஜக்சன் ‘கையுறை அதிக விலைக்கு ஏலம்

michel_jaksonss.jpgபாப் உலகில் முடிசுடா மன்னனாக திகழ்ந்த மறைந்த மைக்கல் ஜக்சனின் வெள்ளை நிற கையுறை, அவுஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது. அவரது அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவரால் 10 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த உறை விலையுயர்ந்த கற்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டதாகும்.  இது ஏலத்தில் விடப்பட்ட போது போட்டியிட்ட ஐந்து போட்டியாளர்களை தோற்கடித்து வார்விக் ஸ்டோன் என்பவர் 57 ஆயிரத்து 600 அவுஸ்திரேலியன் டொலருக்கு வாங்கினார்.  இந்த “கையுறை’  ஏற்கனவே 30 ஆயிரம் டாலர் மதிப்பிடப்பட்டு இருந்தது.

எனினும் இரு மடங்கு விலையில் ஏலம் போய் உள்ளது. ஜக்சனின் மறைவுக்கு பின் ஏலத்தில் விடப்பட்ட அவரது முதல் பொருள் இந்த கையுறையாகும்;. 

‘ஊடகச் செய்திகளால் இந்தியா – சீனா உறவு பாதிக்கக்கூடாது’

100909media-teaching.jpgபத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்க அனுமதிக்க வேண்டாம் என்று இந்தியாவை சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் லடாக் பகுதிக்குள் சீன துருப்புகள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பாறை ஒன்றில் சிவப்பு பெயின்டினால் சீன எழுத்துக்களை எழுதிவிட்டு சென்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக செய்தி வெளியாயின.

ஆனால் சீனாவும், இந்தியாவும் இதனை மறுத்திருந்தன.

இந்நிலையில் பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன அயலுறவுத்துறை அமைச்சக பேச்சாளர் ஜியங் யு – விடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இரு நாடுகளிடையேயான உறவை பாதிக்க இந்தியா அனுமதிக்கக்கூடாது என்றார்.

மேலும் இந்திய – சீன சிறப்பு பிரதிநிதிகளிடையே அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பயனுள்ள எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுவதை பற்றி கேட்டபோது, இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு நியாயமான, நேர்மையான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை காண்பதற்கான பணிகளில் இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறினார்

பள்ளி நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலி – 5 மாணவிகள் பலி

புதுடெல்லியில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 5 மாணவிகள் பலியாகியுள்ளனர்.  மேலும் முப்பது பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் சிலரின் நிலை கவலைக்குறியதாக உள்ளது.

மழையால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பள்ளிக் கட்டிடத்தில் மின்சாரம் பாய்வதாக வதந்தி பரவியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்த பள்ளிக்கு வெளியே கோபம் கொண்ட பெற்றோர்கள் கூடியதும் அந்தப் பகுதியில் இருந்தோரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இந்திய அரசு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்திரவிட்டுள்ளது.

ஆடம்பர ஹோட்டல்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் – அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கை

உல்லாசப் பயணிகளைக் கவரும் ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்கள், அரசியல் தலைவர்களை தாக்குவது கடினமா கவுள்ளதால் பயங்கரவாதிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 2001 ம் ஆண்டு தாக்கப்பட்ட பின் பயங்கரவாதத்துக் கெதிரான இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டன.

பாதுகாப்புகளும் கடுமையாக்கப்பட்டன.  இதனால் பயங்கரவாதிகளின் இராணுவ, அரசியல் இலக்குகள் தோல்வியடைகின்றன. சில தாக்குதல்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்கவும் வெளிநாட்டுப் பயணிகளைக் கடத்தவும் பயங்கரவாதிகள் தீர்மானித்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் ஹோட்டல்களும், நலன்களுமே தாக்குதலுக் குள்ளாகலாமென அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் வெள்ளத்தால் பலியானோர் தொகை 31

110909turky.jpgதுருக்கி யில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் தொகை 31ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினமிரவு துருக்கியில் பாரிய மழை பெய்தமையால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகினர். பலர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்காகப் போராடியுள்ளனர். ஐம்பது வருடங்களின் பின்னர் துருக்கியில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென அறிவிக்கப்பட்டது. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மக்கள் கூரைகளிலும் வாகனங்களிலும் ஏறி காப்பாற்றும்படி அவலக்குரல் எழுப்பினர். சிலர் உயர்ந்த வாகனங்களுக்கு மேல் ஏறி நின்றனர். ஆனால் காட்டு வெள்ளம் போல் பாய்ந்து வந்த வெள்ளம் வாகனங்களையும் அடித்துச் சென்றது. தொள்ளாயிரம் தீயணைப்புப் படையினர் ஆறு இராணுவ ஹெலிகொப்டர்கள், முப்பது பாரம் தூக்கி இயந்திரங்கள் என்பன மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் 18 பேரின் சடலங்களை மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்தனர். கட்டட இடிபாடுகளுக்குள்ளிருந்து 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் பல பெண்களும் இறந்து கிடந்தனர். உள்துறை அமைச்சர் மக்களை அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் மேலும் மழை பெய்யலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

துருக்கிய பிரதமர் தையிப் எடார்கன் தலைநகர் ஸ்தான்புலுக்கு விரைந்து நிலைமைகளை பார்வையிட்டார். இதுவரை ஆயிரம் பேர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு உதவ கிரேக்கம் முன்வந்துள்ளது.

கூடாரங்கள், உணவுப் பொருட்கள், உடுதுணிகள் ஆகியவற்றை எகிப்தின் செம் பிறைச் சங்கம் வழங்கி வருகின்றது. வெள்ளம் காரணமாக உள்ளூரில் இடம்பெயர்ந்தோரின் புள்ளி விபரங்களை மதிப்பீடு செய்ய துருக்கி உள்நாட்டமைச்சு உத்தரவிட்டுள்ளது. 150 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் வெள்ளத்தில் நஷ்டமடைந்துள்ளன.