உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிசெய்து பாராளுமன்றத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

 

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை.

முன்னாள் அமைச்சர்களை தூக்கி வீசிய இலங்கை மக்கள்!

10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்றது.

 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் இம்முறை இடம்பெற்ற தேர்தலில் தமது ஆசனத்தை இழந்து வெளியேறியுள்ளனர்.

 

அந்த வகையில் இதுவரை ஆட்சிசெய்து தற்போது வெளியேறிய முன்னாள் எம்.பிக்களின் விபரங்கள் பின்வருமாறு…

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன – காலி

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – காலி

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர – மாத்தறை

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க – களுத்துறை மாவட்டம்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் – மாத்தளை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – மாத்தளை

சஷீந்திர ராஜபக்ஸ – மொனராகலை

நிபுன ரணவக்க – மாத்தறை

தஹாம் சிறிசேன – பொலன்னறுவை மாவட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம்.தில்ஷான் – களுத்துறை

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி ஆதிக்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய,

இலங்கை தமிழரசு கட்சி 96,975 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

மண் கவ்வியது தமிழ்தேசிய கட்சிகள் – தேசிய மக்கள் சக்தி வசமானது யாழ்ப்பாணம்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்)

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 63,327 வாக்குகள் (1 ஆசனம்)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 27,986 வாக்குகள் (1 ஆசனம்)

சுயேட்சைக் குழு 17 (IND17-10)- 27,855 வாக்குகள் (1 ஆசனம்)

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 22,513 வாக்குகள்

வன்னி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,

தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 29,711 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 21,102 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ்தேசிய கட்சிகளை ஓரங்கட்டியது தேசிய மக்கள் சக்தி!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி – 9,066 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1,612 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள்

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,371 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,349 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1,825 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,399 வாக்குகள்

வன்னி- சுயேட்சைக் குழு (IND07-11) – 639

காலி மாவட்டத்தில் தொடர்ந்தும் முன்னிலையில் தேசிய மக்கள் சக்தி!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 36,196 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,536 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,075 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,047 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 1,123 வாக்குகள்

 

 

திருகோணமலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் !!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 9,705 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,853 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1,749 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 382 வாக்குகள்

கொழும்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் !

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 28,475 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,985 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,814 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 934 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) – 728 வாக்குகள்