தமிழ் பெண் ஒருவர் வீஸா அனுமதியின்றி லண்டன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
40 வயதான அங்கயற்கண்ணி கிருஸ்ணபிள்ளை என்ற பெண்ணே இவ்வாறு வீஸா இன்றி லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானம் மூலமாக குறித்த பெண் லண்டன் சென்றுள்ளதாகவும், அவருக்கு உரிய வீஸா அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த பெண்ணுக்கு எந்த அடிப்படையில் வீஸா வழங்கப்பட்டதென்பது தமக்கு தெரியாது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல்களை திரட்டியதன் பின்னர் விளக்கமளிக்க உள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹேஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் வீஸா அனுமதிக்காலம் காலாவதியாகியுள்ள நிலையில், வீஸா இன்றியே குறித்த பெண் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
நேற்று பன்றிக் காய்ச்சலுக்கு புனேவில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது.
பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் நேற்றுவரை 99 பேர் உயிரிழந்துள்ளனர்.
புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையான சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில் இஷார் என்ற 20 வயது வாலிபர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். இவரையும் சேர்த்து புனேவில் இதுவரை 27 பேர் இறந்துள்ளனர். தேசிய அளவில் 99 பேராக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்டவர்களது புனர்வாழ்வுக்காக சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பினூடாக 150 கோடி ரூபா முதல் 200 கோடி ரூபா வரையிலான நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சும் சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பும் இவ்வாரமளவில் கொழும்பில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளன.
புலி பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளுக்கு இதுபோன்று பல்வேறு வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தினடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிதியை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பா நாடுகளும் ஜப்பான், இந்தியா ஆகிய ஆசிய நாடுகளும் இணக்கம் தெரிவித்திருப்பதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எல். ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த அல்லது மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்ட குழுவினருக்கு புனர்வாழ்வு அளிக்குமுகமாக கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றி கற்பித்தல், தளபாடம் தயாரித்தல், தச்சுத் தொழில் செய்தல், ஆடை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
மக்காவுக்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் பயணம் போன்றது நாட்டின் சமாதானப் பயணம். அதனைப் போன்று அமைச்சர் அதாவுல்லா இக்கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-
அமைச்சர் அதாவுல்லா பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் பேசிவருபவர். இலங்கைத் தீவில் அனைத்து மக்களினதும் அபிமானத்தை பெற்றவர். கடந்த யாழ் மாநாகர சபைத் தேர்தலில் அவர் அங்கு வந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை நாம் குறிப்பிட வேண்டும். அத்தகைய ஒருவரை நீங்கள் தலைவராகக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
வரலாறுகள் இரத்தத்தினால் எழுதப்பட்டவை. அந்த யுகம் முடிந்தது. நமக்கு இன்று ஒரு வரலாற்றுக் கடமையுள்ளது. நாம் ஒன்று திரண்டு இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
சகல இன, மத மக்களும் சரிசமமாக வாழும் சூழல் நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு சிறந்த அரசியல் தீர்வொன்று அவசியம்.கிழக்கில் இன்று சிறந்த மாகாண சபை உருவாக்கப்பட்டு ஐக்கியம் நிலவுகிறது. இங்கிருந்து தொடங்கித்தான் நாம் எமது பயணத்தை நகர்த்த வேண்டும்.
எமது எண்ணங்களை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் கட்டியெழுப்பப்படுகிறது.
புலிகளின் தலைமை பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை நன்கு உணர்ந்தவர் நமது ஜனாதிபதி. புலிகளின் யுகம் முடிந்து விட்டது. ஜனாதிபதியின் கரத்தை நாம் அனைவரும் பலப்படுத்த வேண்டும். சகல தலைவர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கென 93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த சிந்தனையின் கீழ் வடக்கின் வசந்தம் வேலைத்திட்ட செயலணி தலைவர் பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில் அமைச்சர் ரிசாத் பதியிதீன், அக்கிராம மக்களுடன் கலந்தாலோசித்து முன்வைத்த வேலைத் திட்டங்களுக்கே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 119 வேலைத் திட்டங்களுக்கு இந்த நிதி பெறப்பட்டுள்ளதுடன், இத்திட்டம் 57 கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை 11.5 மில்லியன் ரூபா செலவில் நானாட்டான் அச்சங்கேணி கிராமத் திற்கான மின்விநியோகத் திட்டமும், அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் அண்மை யில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீண்டகாலமாக இப்பிரதேச மக்களின் தேவையாக இருந்து வந்த கலாசார மண் டபத்தின் முதலாவது கட்ட பணிகளுக்கென அமைச்சர் ரிசாத் பதியுதீன் 50 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்ததுடன், அதற்கான பணிகளையும் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக கடற்படையை முன்னேற்றவும் கடற்படையை மேலும் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று முன்தினம் தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 91 அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறினர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கடற்படை தளபதி மேற்கண்டவாறு கூறினார்.
கடற்படை தளபதி மேலும் கூறியதாவது :-வினைத்திறனும், ஒழுக்கமும் நிறைந்தவர்களாக கடற்படை வீரர்களை மாற்றுவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கடற்படை ஏனைய படைப் பிரிவுகளைவிட மாறுபட்டதாகும். ஏனைய படைப் பிரிவுகள் உள்நாட்டுக்குள்ளேயே இயங்குகின்ற போதும் கடற்படையினர் கடல் எல்லை தாண்டி வெளிநாடுகளிலும் செயற்படுகின்றனர். கடற்படையினர் இலங்கை தூதுவர்களாகவே செயற்படுகின்றனர்.
யுத்த காலத்தில் போலவே தற்பொழுதும் கடற்படையினருக்கு தொடர்ந்து கூடுதலான பயிற்சிகள் வழங்க உள்ளோம். அவர்களுக்கு துறைசார் பயிற்சி வழங்கவும் ஆங்கில அறிவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிகழ்வில் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியல் எட்மிரல் எஸ். எம். பி. வீரசிங்க இராணுவத்தின் 22 ஆவது படைப் பிரிவு கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். கண்கவரும் விதத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வாத்திய அணி வகுப்பு, நடனம், கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததன் காரணமாக கைதாகி தமிழ் நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தெவிநுவரவுக்கு திரும்பி வந்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று கூறியது.
கடந்த ஏப்ரல் மாதம் தெவிநுவர மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் இருந்து இவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு நடுக்கடலில் வைத்து விபத்துக்குள்ளானதால் இவர்கள் 22 நாட்கள் கடலில் தத்தளித்துள்ளதோடு பங்களாதேஷ் கடற்படையினர் இவர்களை மீட்டுள்ளனர்.
இலங்கை மீனவர்களின் படகு பங்களாதேஷில் வைத்து திருத்தப்பட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தியக் கடலுக்குள் நுழைந்தபோது இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மீன்பிடித் திணைக்களத்தின் தலையீட்டையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 96 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
கடந்த 26ஆம் தேதி தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழந்த நிலையில், நியூசிலாந்து அணியை 234 ரன்களுக்கு முதன் இன்னிங்சில் சுருட்டியது.
தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை ஆடிய இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.
494 ஓட்ட வெற்றி இலக்குடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 397 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
SRI LANKA 416 and
311-5 dec
NEW ZEALAND
First Innings 234
NEW ZEALAND
Second innings
overnight 182-6)
T. McIntosh b Prasad 7
M. Guptill c P. Jayawardene b Herath 28
D. Flynn lbw Herath 50
R. Taylor C M Jayawardene b Herath 27
J. Ryder lbw Herath 38
B. McCullum b Muralitharan 13
J. Oram c Sangakkara b Dilshan 56
D. Vettori c Herath b Muralitharan 140
J. Patel c Kapugedera b Muralitharan 12
I. O’Brien c P. Jayawardene b Herath 12
C. Martin not out 0
EXTRAS: (13-lb, 1-nb) 14
TOTAL: (all out, 123.5 overs) 397
FALL OF WICKETS: 1-36, 2-41, 3-97, 4-131, 5-158, 6-176, 7-300, 8-318, 9-387, 10-397
BOWLING: Paranavitana 1-0-2-0, Thushara 23.3-1-78-0 (1-nb),
Prasad 15-1-56-1, Herath 48-9-139-5, Muralitharan 28.2-2-85-3,
Dilshan 6-0-15-1, Kapugedera 2-0-9-0
Result: Sri Lanka won by 96 runs to seal a 2-0 series
victory.
இலங்கையிலுள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களை வழங்கவென பயன்படுத்தப்படும் சுமார் 25 மில்லியன் பொலித்தீன் உறைகளும் கழிவுப் பொருட்களாக வருடாந்தம் சுற்றாடலில் சேர்வதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கழிவுப் பொருட்களாக சுற்றாடலில் சேரும் பொலித்தீன் உறைகள் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கும் பாரிய பங்களிப்பு செய்து வருவதும் அந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.
இதனை அடிப்படையாக வைத்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மருந்துப் பொருட்களை வழங்கவென பொலித்தீன் உறைகளைப் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கடதாசி உறைகளைப் பயன்படுத்துமாறும் தனியார் மருந்தக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
நாட்டில் சுமார் 6000 தனியார் மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் நுகர்வோருக்கு மருந்துப் பொருட்களை வழங்கவென வருடத்திற்கு சுமார் 25 மில்லியன் பொலித்தீன் உறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கழிவுப் பொருளாக சுற்றாடலில் சேருகின்றன. இது டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்குப் பாரிய பங்களிப்பு செல்வதுடன், சுற்றாடலுக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களை நுகர்வோருக்கு வழங்கவென பொலித்தீன் உறைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக சுற்றாடல் அமைச்சரிடம் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காணத் திட்டமிட்டிருக்கின்றேன் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்துவது, சந்தைப்படுத்துவது தொடர்பான ஒழுங்குமுறைகள் குறித்து கொழும்பிலுள்ள 1500 தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வின் போதே அமைச்சர் மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட் மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்க வியாபாரி ஒருவரிடம் இருந்து பணம் நிரப்பப்பட்ட அஞ்சல் உறைகளை பெற்றது, பிரயாண செலவுகளை அதிகமாக கணக்கு காண்பித்து இஸ்ரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய அட்டர்னி ஜெனரல் எகுத் ஒல்மர்ட் மீது பதிவு செய்துள்ளார்.
ஜெருசலேத்தின் மேயராக இருந்த போதும், பின்னர் காபினட் அமைச்சராக இருந்த போதும் இவர் இந்த தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தான் எவ்வித தவறையும் செய்யவில்லை என எகுத் ஒல்மர்ட் கூறி வருகின்றார்.