செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்பு

srilanka_parliament_02.jpgஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று (16) முதல் ஏற்கப்படுவதாக தேர்தல் திணைக் களம் தெரிவித்தது. 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கே இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள் ளதாகவும் திணைக்களம் கூறியது.

இம்முறை தேர்தலில் கூடுதலான அரசாங்க ஊழியர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்த தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது. இதன்படி 2008 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு சகல அரச நிறுவனங்க ளிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்க 22ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவிருந்த பௌத்த தேரர்களின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கண்டியில் நாளை நடைபெறவிருந்த பௌத்த தேரர்களின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கால வரையறையின்றி குறித்த சங்க சம்மேளன கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக கண்டி மல்வத்த, அஸ்கிரிய மற்றும் ராமன்ய பீடாதிபதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த கண்டி மஹா மலுவலவில் இந்த கூட்டத் தொடர் நடத்தப்படவிருந்தது.நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும், பௌத்த பிக்குகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையின் கௌரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாநாயக்கத் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

லங்கா பத்திரிகை ஆசிரியர் விடுதலை!

chandana_sirimalwatta.jpgகைது செய்யப்பட்டிருந்த லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த இன்று விடுதலை செய்யப்பட்டாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

கங்கொடவில நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபின்னர்  விடுதலையானார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி  சந்தன சிறிமல்வத்த கைதுசெய்யப்பட்டார். இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்;படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவைக் கேட்டிருந்தார்.

கோடன் வைஸின் கூற்று ஐ.நா.வின் கருத்தைப் பிரதிபலிக்காது – ஐ.நா.அறிவிப்பு

gordon_weis.jpgஇலங்கையில் பயங்கரவாதத்திற்கெதிரான கடைசிகட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிர் இழப்புகள் தொடர்பாக முன்னால் ஐ.நா. பேச்சாளர் கோடன் வைஸ் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஐ நா வின் உத்தியோகபூர்வ கருத்தை பிரதிபலிக்காது என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மிகக்கூடுதலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கோடன் வைஸ் தெரிவித்திருக்கும் கூற்று அவரது தனிப்பட்ட கருத்தாகும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

முன்னால் ஐ.நா. பேச்சாளர் கோடன் வைஸ் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமூகங்களுக்கிடையே சமாதானத்தைக் கட்டியெழுப்பவும் ஒரு சமாதானமான தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஐ.நா. தொடர்ந்தும் உதவி அளிக்கும் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐ.நா. பேச்சாளரது கூற்றுக்களை முற்றாக மறுத்துள்ள இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வைஸின் கூற்று போலியானதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும் என்பதால் அதுபற்றி யாரும் கரிசனைக் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வைஸ் புதிதாக முன்வைத்திருக்கும் இக்குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பிழையானதாகும். இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. அவர் அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிக்கின்றார் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.

கடைசிகட்ட போரில் சிவிலியன்கள் உயிரிழப்பு தொடர்பாக திடீரென கருத்துத் தெரிவித்திக்கும் அவரது கூற்றுக்குப் பின்னால் உள்நோக்கங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கும் ஹலுகல்ல இத்தகையதொரு கூற்றை தெரிவிக்க ஏன் எட்டு மாதங்கள் எடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” :பொதுநலவாய நாடுகளின் குழு

kamale-shsharma.jpgகடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான மைல்கல்லாக இல்லை.” என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில், தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” எனத் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.இவை குறித்து உடனடியாக கவனம்செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்ததாகவும் கமலேஷ் கான் தெரிவித்துள்ளார்.

சிறிகோத்தா சத்தியாக்கிரக போராட்டத்தில் அனோமா

anoma.jpgஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி சிறிகோத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் அனோமா பொன்சேகாவும் கலந்துகொண்டுள்ளார். தனது கணவர் விடுவிக்கப்படும் வரை அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்

ஊடகவியலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமுன்னர் ஜனாதிபதிக்கு அறிவிக்க உத்தரவு

he_the_president.jpgஊடகவிய லாளர் ஒருவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமுன்னர் அதுபற்றி தனக்கு அறிவிக்குமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராவய செய்திப் பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்

இடைத்தங்கல் முகாம் சிறுவர்களுக்கு புதிய பாடசாலை! வவுனியாவில் இன்று ஆரம்பம்

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பத்தவர்களின் பிள்ளைகளுக்கென புதிய பாடசாலையொன்று இன்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா காமினி வித்தியாலயத்தில் இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு அவர் உரையாற்றுகையில், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக கல்வியை இழந்த வடபகுதி சிறுவர்களுக்கு தெற்கில் வாழும் சிறுவர்களைப்போன்று சுதந்திர கல்வியை வழங்கும் ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமைய இப்புதிய பாடசாலை இன்று திறந்து வைக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றக் கிரமங்களில் இவ்வாறான பல பாடசாலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சும் பிராந்திய கல்விக் காரியமும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குகின்றன.

வவுனியா காமினி வித்தியாலயத்தில் மேலும் 2600 மாணவர்களுக்கு கல்வி போதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள்,  விளையாட்டு உபகரணங்கள். பாடசாலைத் தளபாடங்கள் என்பனவற்றை வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படடுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

உல்லாசப் பயணிகள் வருகை; 31.9 சதவீதத்தால் அதிகரிப்பு!

Tilko_Hotelஇலங் கைக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை இவ்வருடத்தில் 31.9 சதவீதத்தால் அதிகரித்தள்ளதாக உல்லாசப் பயணிகள் சபை அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு 38468 உல்லாசப் பிரயாணிகள் வருகை தந்தனர். இவ்வருடம் அதாவது  2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இத்தொகை 50757 ஆக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்தே இம்முறை பெருந்தொகையான உல்லாசப் பிரயாணிகள் வந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவி;க்கின்றன.

கடந்த வருடத்தைவிட இவ்வருடம் பிரித்தானியாவிலிருந்து வந்துள்ள உல்லாசப் பயணிகளின் தொகை 24.6 வீதத்தினாலும் பிரான்சிலிருந்து வந்தோர் தொகை 25.9 வீதத்தினாலும் ஜெர்மனியிலிருந்து வந்தோர் தொகை 54.1 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக உல்லாசப் பயணிகள் சபை மேலும் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதியை அதிகரிக்கத் திட்டம்! பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்

gaminisamaranayake.jpgபல்கலைக் கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமிணி சமரநாயக்க தெரிவிக்கின்றார்.

அதன்படி வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களிலும் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்