செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மழையினால் டெங்கு மீண்டும் தீவிரமடையுமென அச்சம்

டெங்கு நோயினால் இறப்போர் தொகை கடந்த 6 வார காலத்தில் பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு கூறியது. மீண்டும் மழை ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் இதற்காக டெங்கு நோய் தடுப்பு செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

டெங்கு நோய் காரணமாக கடந்த 3 மாதத்தில் 63 பேர் இறந்ததோடு 10999 பேருக்கு நோய் தொற்றியிருந்தது. முதல் நான்கு வாரத்தில் டெங்கு நோயினால் 48 பேர் இறந்ததோடு கடைசி 6 வாரத்தில் 15 பேர் மட்டுமே இறந்துள்ளனர். டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து டெங்கு நோயினால் இறப்போர் தொகை பெரிதும் குறைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் டெங்கு நோயை தடுப்ப தற்காக சுகாதார அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, ஊடக அமைச்சு அடங்கலாக பல அமைச்சுக்கள் உள்ளடங்கிய செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக டெங்கு நோய் பரவு வதை தடுப்பது குறித்து பாடசாலை மாணவர்கள் உட்பட சகல மக்களையும் அறிவூட்டவும் டெங்கு பரவும் இடங்களை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க உள்ளது. டெங்கு அபாயம் அதிகமுள்ள 15 மாவட்டங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகள், மாகாண சபைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதோடு தமது சுற்றுச் சூழலில் டெங்கு பரவும் இடங்களை வைத்துள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை உள்ளதாகவும் அமைச்சு கூறியது. கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோண மலை ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பதிக்கப்பட்டுள்ளன.

108 பணிப்பெண்கள் நேற்று நாடு திரும்பினர்

குவைத் நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான 108 இலங்கைப் பணிப்பெண்கள் நேற்று (29) நாடு திரும்பினர். இவர்கள் பல மாதங்களாக குவைத் முகாமில் தங்கியிருந்ததாகவும் இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்தது.

நாடு திரும்பியவர்களில் மூவர் ஆண்கள் எனவும் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் கூறியது.

சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களுக்கு கடிதங்கள்

சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி ஊடகவியலாளர்களுக்கு ஊடக அமைச்சினால் கடிதங்கள்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செய்தித்தாள் நிறுவனங்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களுக்கு இது தொடர்பான கடிதங்களை ஊடக அமைச்சு அனுப்பி வைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.கனேகல தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குள் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1988ம் ஆண்டு சொத்து பொறுப்பு நிர்ணய சட்டத்தின் கீழ் , சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சகல ஊடகவியலாளர்களுக்கும் இந்த உத்தரவு குறித்த கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1975ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான சட்டம், 1988 ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.

புதுவை இரத்தினதுரையின் விடுதலை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கவிஞரின் சகோதரி சந்தித்து பேச்சு

puthuraththinathurai.jpgபுலிகளின் கவிஞர் என கூறப்படும் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரின் சகோதரி ராசலட்சுமி தனது கணவன் பத்மநாதனுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சென்று சந்தித்து உரையாடினார்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது மனைவி மற்றும் குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தார். இதன் போது புதுவை இரத்தினதுரை தவிர்ந்த அவரது மனைவியும் பிள்ளைகளும் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு திருமலையில் வசித்து வருகின்றனர்.

இத்தகவலை புதுவை இரத்தினதுரையின் சகோதரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் தெரிவித்ததோடு, தனது சகோதரனை விடுவித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரின் சகோதரியும் இவ்வாறு தம்மிடம் உதவி கேட்டு வந்ததாகவும், தாம் அதற்கான உதவிகளைச் செய்திருந்ததாகவும், அந்த நிலையில் தயா மாஸ்டர் இன்று வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் தெரிவித்தார்.

புதுவை இரத்தினதுரை குறித்த விபரங்களை கண்டறிந்து அவரது விடுதலைக்காகவும் தம்மால் மனிதபிமான அடிப்படையில் உதவ முடியும் எனவும் உறுதியளித்துள்ளதோடு, அதற்கான நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி மாணவன் கடத்திப் படுகொலை: – ஒருவர் கைது; மற்றொருவரை தேடி வலைவிரிப்பு

boy.jpgசாவகச் சேரியில் மாணவரொருவன் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய இன்னுமொரு சூத்திரதாரியை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

ஒருகோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த க.பொ.த. சாதாரணதர மாணவனான அருள்விநாயகம் கபில்நாத் என்பவரே இவ்வாறு கடத்தி கொலை செய்யப்பட்டவராவார்.

கப்பம் கோரி குறித்த மாணவன் இனந்தெரியாத குழுவினரால் இருவாரங் களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தந்தை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் இவர்கள் மீது நடத்திய தீவிர விசாரணைகளின் பயனாக அவர்களுள் ஒருவரினால் வழங்கப்பட்ட வாக்கு மூலத்துக்கமையவே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சாவகச்சேரி நீதவான் ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சங்கத்தானை டச் வீதியிலுள்ள வீடொன்றின் பின்புறமிருந்து குறித்த மாணவன் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வீட்டில் இல்லாத போதே சடலம் அங்கே புதைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். சடலம் மீட்கப்பட்டதையடுத்து தகவல் வழங்கிய மேற்படி நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு சூத்திரதாரியை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.

குவைத்தில் நிர்க்கதியான 70 இலங்கையர் இன்று நாடு திரும்புகின்றனர் நோய்வாய்ப்பட்டோருக்கு விசேட சிகிச்சை

குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த 70 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்புவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகா மையாளர் எல். கே. றுகுணுகே நேற்று தெரிவித்தார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடையும் இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் நோய்வாய்பட்டிருப்போருக்கு விசேட சிகிச்சையளிப்பதற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 66 பணிப்பெண்களும் 04 ஆண்களுமே இன்று நாடு திரும்புகின்றனர். இவர்களுள் ஒருவர் புற்றுநோயினால் பாதி க்கப்பட்டவ ரெனவும் இவரை வைத்தியசாலை யில் அனுமதித்து சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பணியகம் செய்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

100 கிலோ வெடிமருந்து மீட்பு

வன்னிப் பிரதேசத்திலிருந்து நூறு கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

80 கிலோ எடையுள்ள ஆர். டி. எக்ஸ் ரக வெடிமருந்தும், 20 கிலோ எடையுள்ள சி – 4 ரக வெடிமருந் துகளையும் மற்றும் உபகரணங்க ளையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி துரிதம் – 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம்

house.jpgமீள் குடியேற்றம் செய்யப்பட்ட பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் துரிதகதி யில் புதிய வீடுகளை நிர்மாணிப்ப தற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் தெரி வித்தார்.

பரப்பாங்கண்டல் பகுதியில் சுமார் 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பரப்பாங்கண்டல் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் கணிசமானோருக்கு மீள்குடியேற்றக் கொடுப்பனவுத் தொகை வழங்கப் பட்டிருக்கின்றது.

ஏனையோருக்கும் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

இவை தவிரவும் அப்பகுதிகளில் மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் தேவைக ளையும் மேம்படுத்தும் பொருட்டு அனுமதிபெற்ற சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக தற்காலிக வீடுகள், நிரந்தர வீடுகள் உள்ளடங்கலாக பல தேவைகளை யும் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க 33 வாக்குச் சாவடிகள்

இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கென வவுனியா மெனிக்பாம் வலயம் – 2 மற்றும் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் என்பவற்றில் 33 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இலவச போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

dis.bmpதேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆளடையாளத்துடன் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கென மெனிக்பாம் வலயம் இரண்டில் 17 வாக்குச் சாவடிகளும், இதுவரை மீளக் குடியமர்த்தப்படாத நிவாரணக் கிராமங்களில் அல்லாதவர்களுக்கென வவுனியா தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 16 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்க ப்பட்டுள்ள எட்டு ஆளடையாள அட்டை களும் இல்லாதவர்கள் உடனடியாக வவு னியா உதவித் தேர்தல் திணைக்களத் துடன் தொடர்புகொண்டு ஆளடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதற்காக இலவச பஸ் சேவையை பெற்றுக்கொள்ள காமினி வித்தியாலயத்துக்கு செல்லவேண்டும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உள்ளடங்கிய வன்னி மாவட்டத்தில் 209 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தாம் வதியும் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக தம்மை பதிவு செய்துகொள்வதற்காக விண்ணப்பிக்காத, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் உடனடியாக மாவட்ட செயலகம், மற்றும் நிவாரணக் கிராமங்கள் அமை க்கப்பட்டுள்ள விசேட கரும பீடத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

13 நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவன் நேற்றுச் சடலமாக மீட்பு

boy.jpgசாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் பதின்மூன்று  நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதினாறு வயது மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபிலநாத்தின் சடலம் நேற்றுப் பிற்பகலில் நகரப் பகுதியில், டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வாழைத்தோட்டத்தில் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டது.
கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் புதைகுழியில்  இருந்து மீட்கப்பட்டது.

மாணவன் கபிலநாத் கடத்தப்பட்ட பின்னர் மூன்று கோடி ரூபா கப்பம் தருமாறு அவரின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டனர் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
குடாநாட்டில் சற்று அமைதி நிலை தோன்றிவரும் இவ்வேளையில், மேற்படி  சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர் அருள் விநாயகர் மோட்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.திருச்செல்வத்தின் மகனான கபிலநாத் என்பவராவார். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஜி.சீ.ஈ (சாதாரண) தர வகுப்பு மாணவன். கடந்த டிசெம்பரில் நடைபெற்ற பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.