கிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்துவைக்கும் வகையில் திடீர் பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எம். சுபைர் இந்தக்குழுவை நியமித்துள்ளார். இதன் தலைவராக மாகாண வைத்திய அத்தியட்சகர் டொக்டர். குணாலன் பணியாற்றுவார். அமைச்சின் மேலதிகச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் இதில் பணிபுரிவர். மாகாண ஆஸ்பத்திரிகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்ளும் இந்தக் குழு அவற்றின் குறைபாடுகளை அமைச்சரின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டுவரும்.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
கார்கில்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர் ரஞ்ஜித் பேஜ், மாஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மகேஷ் அமலீன், இந்திய திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அனுபம் கேர் ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கி கெளரவித்தார்.
சீ.என்.பீ.ஸி – ஐ.ஐ.எப்.ஏ. குளோபல் லீடர் ஷிப் விருதுகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை – இந்திய வர்த்தக சம்மேளனத்தின் விசேட அமர்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்கினார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெறவுள்ள iifa சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கான குறைந்தபட்ச அனுமதிக் கட்டணம் ரூ.25,000ஆக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலாச்சபை தெரிவித்தது.
இந்த கட்டண முறைமை ரூ.200,000 முதல் 11 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த சபை குறிப்பிட்டது. இந்த புதிய குறைந்தபட்ச நுழைவுச் சீட்டுக்கான ஆசன வசதிகள் பின்புறப்பகுதியில் பிறிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலாச்சபை தெரிவித்தது.
IIFA சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ஓர் அங்கமாக நேற்று இடம்பெற்ற இந்திய திரைப்பட நட்சத்திரங்களுக்கும் – இலங்கை கிரிக்கெட் அணிக்குமிடையில் முதலில் இடம் பெற்ற 10 ஓவர் கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் சங்கக்கார, தலைமையிலான அணி வெற்றியீட் டியது.
இப்போட்டி பி.ப. 1.30 மணிக்கு கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் ஆரம்பமானது.
களத்தடுப்பில் ஈடுபட்ட சுனில் செட்டி, ரித்தேஷ் தேஷ்முக்…
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய சங்கக்கார தனது அணி துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கை அணியில் முன்னாள் வீரர்கள் விளையாடினர். இந்திய திரைப்படவீரர்கள் அணிக்கு சுணில் செட்டி தலைமைதாங்கினார். இவ்வணியில் மஹேல ஜயவர்தன, பர்விஷ் மஃறுப் ஆகியோர் விளையாடினர்.
இதேவேளை, இப்போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி. இரத்நாயக்க மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை மற்றொரு போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முதல் கிரிக்கெட் போட்டி ஒன்றில் களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதில் அவர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.
இதேவேளை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய ஆகியோர் விளையாடினர். இக் கிரிக்கெட் போட்டி சிறுவர் நல நிதிக்காக இடம்பெற்றது. இதற்கு யுனிசெப் அனுசரணை வழங்கியது.
87 வயது முதியவன் என்று நீங்கள் என்னை அழைத்தாலும், தமிழையும், தன்மானத்தையும், திமுகவையும் காப்பதில் என்னைப் போன்ற இளைஞன் யாரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
முதல்வரின் 87வது பிறந்த நாளையொட்டி நேற்று இரவு சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசியதாவது:
ஒரு இயக்கம் ஒரு வீடு குடும்பம் போல். பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், இடையிடையே சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட மாறுபாடுகள் கழகத்தை அழித்துவிடாமல் அந்த மாறுபாடு உண்டாக்குகிறவர்கள் திருந்தும் வகையில் கழகத்தின் வலிமை பயன்படுத்தப்பட்டு அதன் காரணமாக கூரேற்றப்பட்ட ஈட்டி முனையை போல் கனையின் முனைபோல் தி.மு.க. விளங்கி வருகிறது.
அதனால்தான், இடையிடையே யார் யாரோ எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் கூட இந்த இயக்கத்தை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த இயக்கம் இருக்கக் கூடாது என்று தந்திரோபாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களை தாண்டி எப்படி இந்த இயக்கத்தை காப்பாற்றுவது, வீம்பு அல்லது தேவையற்ற வீரபிரதாபம் இவைகளால் இந்த இயக்கத்தை காத்து விடமுடியுமா என்ற கேள்விக்கு அண்ணா அளித்த பதில்-லட்சக்கணக்கான தம்பிமார்களை விழிப்படைய செய்து, ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு இந்த இயக்கத்தை பலி கொடுத்துவிடக்கூடாது என்று எண்ணிய காரணத்தால் இன்று தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், டெல்லியை ஆளும் கட்சிக்கு தோழமை கட்சியாக இருக்க முடிகிறது.
அப்படிப்பட்ட இயக்கத்தை நடத்திச்செல்லும் பெரும் பொறுப்பு தலைவர் என்னுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அகம்பாவத்தோடு கர்வத்தோடும், திமிரோடும் எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்பவன் அல்ல நான். நீங்கள் எல்லாம் என் ஒருவனுடைய சக்தி, அறிவுக் கூர்மையால், சாதுரியத்தால் கிடைத்த வலிமை என்று எண்ணும் அளவுக்கு பைத்தியக்காரன் அல்ல. என்னுடைய வலிமை இந்த இயக்கத்தை நடத்தி செல்வதற்கு எனக்கு ஏற்பட்ட நெஞ்சுரம் எல்லாம் என் எதிரே வீற்றிருக்கும் லட்சோப லட்ச உடன்பிறப்புகளாகிய நீங்கள் வழங்கியது. நானாக உருவாக்கிக் கொண்டவை அல்ல.
நாங்கள் உங்களைவிட பெரியவர்கள் அல்ல. 87 வயது என்ற காரணத்தால் முதியவன், பெரியவன் என்று என்னை அழைக்கலாம். ஆனால், தமிழை, தன்மானத்தை, தி.மு.க.வை காப்பதில் என்னை போல் இளைஞன் இருக்க முடியாது. அந்த உறுதியை நிறைவேற்றுவேன். இந்த இனிய விழாவில் புதிய வரவாக நமது இயக்கத்துக்கு வந்திருக்கும் குஷ்புவை உங்கள் ஆதரவோடு வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.
வங்கதேச தலைநகர் டாக்காவின் மையப் பகுதியில் உள்ள பல நூறாண்டு பழமை வாய்ந்த கயதுலி பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். டாக்காவின் மையப் பகுதியில் உள்ள கயதுலி பகுதி மிகவும் பழமை வாய்ந்த ஒன்று. இங்கு நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள்,வணிக அலுவலகங்கள், ரசாயாணப் பொருள் தயாரிப்பு ஆலைகள் உள்ளன.
இங்கு நேற்று இரவு டிரான்ஸ்பார்மர் ஒன்றிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயாணப் பொருள் நிறுவனங்கள் நிரம்பிய பகுதி என்பதால் தீ படு வேகமாக பரவியது. விடிய விடிய எரிந்த தீயால் அந்தப் பகுதியே சுடுகாடு போலானது. உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் இறங்கினர். மிகவும் குறுகலான பல சந்துகள் அங்கு உள்ளன என்பதால் அந்தப் பகுதிகளுக்குள் மீட்புப் படையினரால் போக முடியவில்லை.
மிகுந்த சிரமத்திற்கிடையே நடந்த மீட்பு நடவடிக்கையில் 100 பேரின் உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 150ஐத் தாண்டும் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். தீயணைப்பு படையினர் மிகுந்த போராட்டத்திற்கிடையே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதும் பொசுங்கிப் போய்க்கிடக்கிறது. பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் எனத்தெரிகிறது. காயமடைந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கடந்த 1971ம் ஆண்டு டாக்காவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக டாக்காவாசிகள் தெரிவிக்கின்றனர். டாக்காவை புரட்டிப் போட்டுள்ள இந்த சம்பவத்திற்கு வங்கதேச அரசு பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை அவர்நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பேகம்கலீதா ஜியாவும் மருத்துவமனைக்குச் சென்று காயம் பட்டவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.இந்த பயங்கர தீ விபத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் இறந்துள்ளதால் தீவிபத்துக்குள்ளான மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதை எதிர்த்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை, உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும், அணு ஆயுத வல்லரசு நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த கொடிய குற்றவாளியான இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ச அனைத்து உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்.
போரில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்களை, வயது முதிர்ந்தவர்கள், தாய்மார்கள், சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர் சிறுமியரை, குண்டுகள் வீசிக் கொன்றும், பீரங்கித் தாக்குதல் நடத்தியும், உணவுக்கே வழி இன்றிப் பட்டினி போட்டும், காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சைக்கு, வழி இன்றிச் செய்தும் சாகடித்தவர் ராஜபக்ச. அவர் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று, அயர்லாந்து நாட்டிலே கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பு ஆயம் அறிவித்தது.
மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்ச நடத்திய அக்கிரமங்கள் குறித்து விசாரணை மன்றம் அமைக்க, ஐநா சபை அறிவித்தது. தமிழ் ஈழ மண்ணில், தமிழ் இனத்தையே கரு அறுக்கும் ரத்த வேட்டை ஆடிய ராஜபக்ச, ‘ஈழத்தமிழர்களுக்குத் தாயகம் கிடையாது; தமிழ் இனம் தனித் தேசிய இனம் அல்ல என்றும்; தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியுள்ளார்.
இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளை, இடித்து நொறுக்கித் தரைமட்டம் ஆக்கிவிட்டு, தமிழர் தாயகத்தில் சிங்களர்களைக் குடியேற்றும் வேலையைத் தீவிரப்படுத்திவிட்டு, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களையும் அழித்துவிட்டு, சிங்கள பௌத்த விஹாரைகளைக் கட்டும் வேலையைச் செய்துகொண்டே, தாயக விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களின் கல்லறைகளை எல்லாம் இடித்துத் தகர்த்து, அவ்வீரர்களின் எலும்புகளைக் குப்பையில் வீசிவிட்டு, கோர வெறியாட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கை ஜனாதிபதி தமிழ்க்குலத்தின் ஜென்மப் பகைவன் மட்டும் அல்ல; மனிதநேயம் உள்ள மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி.
எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்களச் சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும்போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது.
வேதனையால் வெந்து போன தமிழர் இதயத்தில், சூட்டுக்கோலை நுழைக்கும் வகையில், ராஜபக்சவுக்கு, இந்திய அரசு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.
ஜூன் 8 ஆம் தேதி, இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச, ராஜபக்ச தில்லி வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், வரவேற்பு அளிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், ஜூன் 8 ஆம் தேதி, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்துக்கு எதிரே, காலை 10 மணி அளவில், கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே நாளில், மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறிவித்து இருக்கிறோம்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை யில் யுத்தத்தால் தமது இள¨மைப் பருவம் சூறையாடப்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கென வவுனியாவில் பாடசாலையொன்றை அமைக்கவுள்ளதாக பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் தெரிவித்தார்.
சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நிறைவுபெற்றதும் வவுனியாவுக்குச் சென்று இப்பாடசாலையை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது.
முதலாம் நாளான நேற்றுக் காலை கொழும்பு, கொள்ளுப்பிட்டி சினமன்கார்டன் ஹோட்டலில் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விவேக் ஒபரோய் இதனைத் தெரிவித்தார். தமிழ் நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காய் தனது தந்தையின் ஒபரோய் பவுண்டேஷன் மூலம் உதவக்கிடைத்ததை நினைவு கூர்ந்த விவேக் ஒபரோய், அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கும் தனக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவுக்கு நான் இலங்கை செல்வதை அறிந்த இலங்கையில் உள்ள எனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகத்தினர் என்னை இலங்கை செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். இலங்கையில் தமிழர்களின் கஷ்டங்கள் தீர்க்கப்பட சர்வதேச இந்திய திரைப்பட அகடமி வழிசெய்ய வேண்டும் என்று என்னை வேண்டினர்.
அன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சிரார்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதயமானது. அதனை சர்வதேச இந்திய திரைப்பட அகடமியிடம் சொன்னேன் அவர்களும் அதற்குக் சம்மதித்தார்கள். அதன்படி வவுனியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான பாடசாலையொன்றை சர்வதேச இந்திய திரைப்பட அகடமி இலங்கை கிரிக்கெட் சபை என்பவற்றின் உதவியோடு நிறுவத் திட்டமிட்டிருக்கிறேன்.
இது கல்வி புகட்டும் நிலையமாக மாத்திரம் அல்லாது பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சுகாதார, போஷாக்கு நலனோம்புகை நிலையமாகவும் இருக்கும். இது பின்னர் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் படும் என்றார்.
இலங்கைக்கு எடுத்துவரப்படும் வெளிநாட்டு நாணயங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சகல வரிகளையும் ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இதன் படி, வெளிநாட்டு நாணயங்கள் மீதான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேசத்தை கட்டயெழுப்பும் வரி, வற்வரி, அடங்கலான 22% வீத வரிகள் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ரத்துச் செல்லப்ப ட்டுள்ளன. அதிக வரி காரணமாக வர்த்தக வங்கிகள் வெளிநாட்டு நாணயங் களை கொண்டு வருவதை மட்டுப்படுத்தியு ள்ளன. இதனால் சட்டவிரோதமாக நாயணங்களை தருவிப்பது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனாலே குறித்த வரிகளை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சட்டங்கள் திருத்தப்படவுள்ளன. நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி இந்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தாரென அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமி விருது வழங்கும் விழாவுடன் இணைந்து நடத்தப்படும் கிரிக்கெட் காட்சிப் போட்டி மூலம் கிடைக்கும் பணம் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, குறிப்பாக முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகங்களுடன் மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைக்கே பயன்படுத்தப்படுமென யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப் டியூவல் தெரிவித்தார்.
இந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் இலங்கைக் கிரிக்கெட் அணியினரும் கலந்துகொள்ளும் கிரிக்கெட் காட்சிப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை எஸ்.எஸ்.சி.மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டி குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கைக் கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றபோதே யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப் டியூவல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; இந்திய திரையுலகினரும் இலங்கைக் கிரிக்கெட் அணியினரும் இணைந்து கிரிக்கெட் காட்சிப்போட்டி இலங்கைக் கிரிக்கெட் சபை, ஐ.சி.சி.மற்றும் யுனிசெப்பின் அனுசரணையில் நடைபெறுகின்றது.குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகத்துடன் மீள ஒருங்கிணைக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த காட்சிப்போட்டி நடைபெறுகின்றது.
இப்போட்டி மூலம் கிடைக்கும் வருமானமானது இச்சிறுவர்களின் நலத்திட்டத்திற்காகவே பயன்படுகின்றதென்பதைத் தெரியப்படுத்துகின்றோம். போரினால் உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை நெறிப்படுத்தவேண்டிய தேவை எம் அனைவருக்கும் உள்ளது.அந்த ரீதியில் இச்சிறுவர் போராளிகளும் ஏனைய பாதிக்கப்பட்ட சிறுவர்களும் புதியதொரு பயணத்தை அல்லது யுகத்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக இச்சிறுவர்களை சமூகங்களுடன் மீள ஒருங்கிணைக்கப்படவேண்டிய அவசியம் உள்ளதெனத் தெரிவித்தார்.