விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் நேற்று மாலை 7 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார். வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4 தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு (Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவியான ஆங் சான் சூ சி அவர்கள் ரங்கூனில் விசாரணை மன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கான விதிமுறைகளை மீறினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அங்குள்ள வாவி ஒன்றை நீந்திக் கடந்து அவரது வீட்டுக்குச் சென்ற ஒரு அமெரிக்கருடன் இந்தக் குற்றச்சாட்டு தொடர்புடையதாகும்.அந்த மனிதர் அழைப்பு ஏதும் இல்லாமலேயே அங்கு வந்ததாக ஆங் சான் சூசியின் சட்டத்தரணி வாதாடினார். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது. இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.
இதனால் மனம் கொதித்துப்போன மதிமுக தொண்டர் தீக்குளித்துள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளித்த மதிமுக தொண்டர் சிதம்பரம் அருகில் உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர்.
ராணுவ முற்றுகையின் போது, பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்தியாவுக்கு உறுதி செய்தது இலங்கை அரசு. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று போன் செய்துள்ளார். அப்போது, பிரபாகரன் கொல்லப்பட்ட விஷயத்தை உறுதி செய்ததாகவும், அதிகாரப்பரவல் குறித்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் இருவரும் தகவல் பரிமாறிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி விஷ்ணு பிரசாத், ‘’இலங்கையில் பல ஆண்டாக நடந்து வந்த உள்நாட்டுப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே தெரிவித்தார். பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயத்தையும் அவர் உறுதி செய்தார். ‘இந்நிலையில், அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்து, தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் அதிகாரப்பரவலை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரணாப் வலியுறுத்தினார்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்று இரவு சென்னையில் உள்ள கொங்கு தமிழ் அறக்கட்டளையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்களான பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோர் ஒன்று கூடி இலங்கையின் தற்போதுள்ள நிலைமை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்பாக பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பிரபாகரன் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?
பிரபாகரன் நலமுடன் தான் இருக்கிறார்.
எப்படி இவ்வாறு உறுதியுடன் சொல்கிறீர்கள். நீங்கள் அவருடன் பேசினீர்களா?
நான் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ளுங்கள்.
இலங்கை பிரச்சனையில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
மே-21ல் தமிழகம் முழுவதும் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இலங்கை யின் வட பிரதேசம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் முகமாக நாளை 19 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்துக்கு அரசாங்கத்தினால் விடுதலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் சகல அரசாங்க நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றிவைக்குமாறும் நாளை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையை சகலரும் செவிமடுக்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சகல அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அரச நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் வேண்டுகேள் விடுத்துள்ளார்.
பயங்கர வாதத்திற்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முழுமையாக நிறைவடைந்து விட்டது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முப்படைத்தளபதியினால் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி தங்களுடைய கடமைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் நாட்டின் முழு பாதுகாப்பும் படையினரின் வசமுள்ளதாகவும் முப்படைகளின் தளபதிகளும் படைத்தரப்பு முக்கியஸ்தர்களும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட , விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க ,பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்
வன்னியில் இடம்பெறும் அதிகரித்த மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளதால் யாழ்ப்பாண பல்கலைக்கழக வன்னி மாணவர்கள் கல்விகற்க முடியாத மனநிலை காரணமாக வரும் ஒரு வாரகாலத்திற்கு வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைகழகழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
தமது பெற்றோர்கள் மற்றும் உறவுகளது மரணம் காரணமாக எமது பல்கலைகழக மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். தமது உறவுகள் எங்கிருக்கின்றனர், எப்படி இருக்கின்றனர் என்று பெரும் கவலையுடன் இருப்பதனால் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இன்றுமுதல் வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமக முன் காலாண்டு இடைப்பரீட்சைகளையும் பின்னர் நடத்தும்படி பீடங்களிடம் வலியுறுத்துகின்றோம். மாணவர்களது வகுப்புக்கள் தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்
முப்பது வருடங்களுக்கு மேலாக நாட்டில் நீடித்திருந்த பயங்கரவாதத்தை இரத்த ஆறு ஓடாத வகையில் ஒழித்துக் கட்டிய பெருமை இலங்கைக்கு மாத்திரமே உரித்தாகும் என அனர்த்த இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான சிவிலியன்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் அடுத்தகட்ட இலக்கு எனவும் அவரது அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் கூறினார். புலிகளின் பிடியிலிருந்து அனைத்து சிவிலியன்களையும் அரசாங்கம் எவ்வாறு வெற்றிகரமாக மீட்டெடுத்ததோ அதேபோல் அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவந்து வடக்கில் மீண்டும் ஜனநாயகம் நிலை நிறுத்தப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
![]()
பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிப்பதற்கு முன்னின்று உழைத்தமைக்காக முப்படைகளின் தளபதிகளினதும் பதவி நிலை முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திங்கட்கிழமை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா ஜெனரலாகவும் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரலாகவும் , விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க எயார் சீப் மார்ஷலாகவும் பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.