புலிகள் இயக்கத்தினரின் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் முதலாவது நினைவு தினம் இன்றாகும்.
இத்தினத்தின் நிமித்தம் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.வெலிவேரிய காந்தி ஆரியரட்ன விளையாட்டரங்குக்கு அருகில் மறைந்த ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் நினைவு தூபி இன்று காலை திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை அன்னாரின் நினைவு முத்திரையும் வெளியிடப்படவுள்ளது.