சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

டென்னிஸ்: தரவரிசையில் கிலிஸ்டர்சுக்கு 19வது இடம்

150909kilista.jpgபெல்ஜியம் வீராங்கனை 26 வயதான கிம்கிலிஸ்டர்ஸ் குழந்தை பெற்றுக்கொண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் டென்னிசுக்கு திரும்பினார். நீண்ட நாள் டென்னிசை விட்டு விலகியதால் அவர் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் டென்னிசுக்கு திரும்பிய அமெரிக்க ஒபனை வென்று சாதனை படைத்த அவருக்கு தரவரிசையில் 19வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் டாப் 10க்குள் நுழைவதை அவர் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.

ரஷியாவின் தினரா சபீனா முதலிடத்திலும், அமெரிக்காவின் செரீனா, வீனஸ் முறையே அடுத்த இரு இடங்களிலும் உள்ளனர். இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா 74வது இடத்தில் இருந்து 63வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

ஆண்கள் தர வரிசையில் பெடரர் தொடர்ந்து நம்பர் – 01 அரியணையில் உள்ளார். 2வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் அன்டி முர்ரே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்க பகிரங்கத்தில் 4வது சுற்றிலேயே வெளியேறியதால் முர்ரேவுக்கு இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது- 3வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் ரபெல் நடால் மீண்டும் 2வது இடத்துக்கு வந்துள்ளார். அமெரிக்க பகிரங்கத்தில் பட்டத்தை வென்ற ஆர்ஜன்டினாவின் டெல்போட்ரோ ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பெற்றுள்ளார்.

அமெரிக்க பகிரங்க ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்தியாவின் லியாண்டர் பயசின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து 8 வது இடத்திலேயே நீடிக்கிறார். அவருடன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மற்றொரு இந்திய வீரர் மகேஷ் பூபதி 6வது இடத்தில் உள்ளார்.

ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று ஆரம்பம் – 12 நாடுகள் பங்கேற்பு

1509fiba-news203a.jpgஇந்தியா வில் 23வது ஆசிய பெண்கள் போட்டி இன்று சென்னையில் ஆரம்பமாகின்றது. இப்போட்டி இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 24ம் திகதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறு கிறது.

அதன் விபரம் வருமாறு:

ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு இந்தப் போட்டி கொரியாவில் நடந்தது.

24வது ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி இன்று 17ந் திகதி முதல் வருகிற 24ந் திகதிவரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங் கில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் மொத்தம் 12 நாடு கள் பங்கேற்கின்றன. தர வரிசையின் அடி ப்படையில் பிரிவு 1, பிரிவு 2 என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 1- இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்து ஆகிய நாடுகளும், பிரிவு 2- கஜகஸ்தான், லெபனான், மலேசியா, பிலிப்பைன்ஸ். இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

பிரிவு 1ல் ஒவ்வொரு அணியும் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

புள்ளிகள் அடிப் படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். பிரிவு 1ல் 5வது 6வது இடங்களை பிடிக்கும் அணிகளும் பிரிவு 2ல் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 5 முதல் 8வது இடங்களுக்கான போட்டியில் விளையாடும்.

ஆசிய பெண்கள் கூடைப்பந்து போட்டி யில் இதுவரை கொரியாவே அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. இந்த அணி 12 முறை சாம்பியன் (தங்கப் பதக்கம்) பட்டம் பெற்றுள்ளது. 8 வெற்றியும், 2 வெண்கலமும் பெற்றுள்ளது. சீனா 9 முறையும் ஜப்பான் ஒருமுறையும் பட்டம் பெற்றுள்ளன. அணி அரை இறுதியில் நுழைய கடுமையாக போராட வேண்டும்.

இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ், மலே சியா அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து லெபனான், உஸ்பெகிஸ்தான், இலங்கை, கஜகஸ்தான் அணிகள் மோதுகின்றன. தொடக்க விழா நேற்று நடைபெற்றது

ஷவ்வால் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு

ramadan-mosque.jpgஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (19) சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.09 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கின்றது.

அவ்வாறு ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 0112390783, 2432110, 2434651, மற்றும் 0777366099 தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறி யத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸாவியாக்கள், தக்கியாக்கள் ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அரச துறைகளில் நியமிக்கப்பட்ட 44,000 பட்டதாரிகளுக்கும் பொருத்தமான பதவிகள்

sarath-amunugama.jpgஅரசாங் கத்தால் பல்வேறு துறைகளிலும் நியமிக்கப்ப ட்ட 44,000 பட்டதாரிகளுக்கும் அவர்களுக்குப் பொருத்தமான பதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இவர்கள் பட்டதாரிகள் நியமனத்திற்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்ற போதும் சகல வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் சேவையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், அரச துறையில் ஆங்கில மொழி தேர்ச்சியுள்ள சுருக்கெழுத்தாளர்களுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகிறது. அவ்வாறு திறமையுள்ளவர்களும் அரசதுறைக்கு வர விரும்புவதில்லை. தனியார் துறைகளில் அதிக சம்பளத்தை எதிர்பார்த்து செல்கின்றார்கள்.

மேற்படி 44,000 பட்டதாரிகளில் பெருமளவிலானோர் ஆசிரியர்களாகவே தொழில் புரிகின்றனர். இவர்கள் கூடிய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு சாதாரண ஆசிரியர்களாகவே சேவையாற்றுகின்றனர். இவர்களை அவர்களுக்குப் பொருத்தமான பதவிகளில் நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிரேமதாச மைதானத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டெண்டுல்கர்

sachin-tendulkar.jpgகொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் 138 ஓட்டங்கள் சேர்த்தார். அவர் 42 ஓட்டம் எட்டிய போது இந்த மைதானத்தில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.

டெண்டுல்கர் இங்கு 27 ஒரு நாள் போடியில் ஆடி 4 சதம் உட்பட 1096 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த மைதானத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜயசூரிய, அத்தபத்து, அரவிந்த டி சில்வா, ஜயவர்தன, சங்கக்கார ஆகியோர் ஏற்கனவே 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளனர். அந்த வரிசையில் டெண்டுல்கர் 6 வது இடம் பெற்றுள்ளார்.

* டெண்டுல்கர் நேற்று முன்தினம் அடித்தது அவரது 44 வது ஒரு நாள் போட்டி சதமாகும். இலங்கைக்கு எதிரான 8வது சதமாகும்.

* இலங்கை அணி கப்டன் சங்கக்கார வித்தியாசமான முறையில் (ஹிட் விக்கெட்) ஆட்டம் இழந்தார். அவர் ஆர். பி. சிங் வீசிய பந்தை முன்னால் இறங்கி அடிக்க முற்பட்டார். அப்போது பேட் கையில் இருந்து நழுவி தலைக்கு மேல் பின்னோக்கி சென்று ஸ்டம்பில் விழுந்தது.

* இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கண்டுள்ளது. கடைசியாக 1998 ம் ஆண்டு கொழும்பில் நடந்த சிங்கர் – அகாய் நிடாஹாஸ் கோப்பைக்கான 3 நாடுகள் இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்று இருந்தது.

அதன் பிறகு இந்திய அணி, இலங்கையுடன் 7 இறுதிப் போட்டிகளில் மோதியதில் 5ல் தோல்வி கண்டுள்ளது. 2002ம் ஆண்டு நடந்த சம்பியன்ஸ் கோப்பையின் இரண்டு இறுதிப் போட்டியும் மழையால் ரத்துச் செய்யப்பட்டது. இதனால் இரு அணிகள் இணைந்து சம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

* முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற பிறகு இந்திய அணி கப்டன் டோனி கூறுகையில், ‘இந்த வெற்றியை சமீபத்தில் மறைந்த இந்திய கிரிக்கெட் சபை முன்னாள் தலைவர் துங்கர்பூருக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்றார்.

சவுதி அரேபிய வாகன விபத்தில் மடவளை வாசி மரணம்

மடவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து விப த்தொன்றில் பலியானார். முஹமட் ராயிஸ் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

புனித உம்ரா கடமைக்கு மக்கா நோக்கிப் பயணமான தனது மனைவி, பிள்ளை ஆகியோரை சந்திக்க வந்த சமயமே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதே விபத்தில் இலங்கையைச் சேர்ந்த பரகஹதெனியவை வசிப்பிட மாகக் கொண்ட ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

இலங்கை அணி இன்று தென்னாபிரிக்கா பயணம்

120909sanath-jayasuriya.jpgஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ண  கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை தென்னாபிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சமயக் கிரியைகளையடுத்து குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகினர்.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையவுள்ளது.

மினி உலகக் கிண்ணம்  எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளதோடு அவை ஏ மற்றும் பி  என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மர்ஹும் அஷ்ரப் 9 வது ஞாபகார்த்த தினம் இன்று

mhmasraf.jpgமு. கா. வின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரபின் 9 வது ஞாபகார்த்த தினம் இன்றாகும்.

இதனையொட்டி நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் சாம்பியன் பட்டம்; ஆர்ஜென்டினா வீரர் வசம்

160909.jpgஅமெரிக்க  கிராண்ட்ஸ்லாம் பகிரங்க டெனிஸ் சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்து முன்னிலை வீரர் ரொஜர் ஃபெடரரை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து சாம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா வீரரான ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ கைப்பற்றினார்.
 
நியூயார்க்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல் போட்ரோ 3-6, 7-6 (5), 4-6, 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் ஃபெடரரை வீழ்த்தினார். ஃபெடரர் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தால் தொடர்ந்து 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் புரிந்திருப்பார்.

இதற்கு முன்னர் யு.எஸ். ஓபனில் தான் பங்கேற்ற 40 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்திருந்தார் ஃபெடரர். ஆனால் 41-வது ஆட்டத்தில் அவர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். மேலும் இதற்கு முன்னர் ஃபெடரர் – டெல் போட்ரோ மோதிய 6 ஆட்டங்களில் ஃபெடரரே வெற்றி பெற்றிருந்தார்.

அனுபவமிக்க வீரராக இருந்தும் டெல் போட்ரோவின் அற்புதமான ஆட்டத்தின் முன் ஃபெடரர் தோல்வி கண்டார்.

முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று ஆட்டத்துக்கு முன்னேறி வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோ.

முஸ்லிம் அரச ஊழியர்க்கு 17 இல் சம்பளம்

புனித நோன்புப் பெரு நாளை முன்னிட்டு முஸ்லிம் அரச சேவையாளர்களுக்கு இம்மாதச் சம்பளத்தை 17 ஆம் திகதி வழங்குமாறு திறைசேரியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.