ஹெகலிய ரம்புக்வெல்ல

ஹெகலிய ரம்புக்வெல்ல

தரமற்ற மருந்துகள் கொடுக்கல் வாங்கல் விவகாரம் – கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயணத்தடை !

நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார்.

 

தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (31) ஆஜராகுமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு வருகை தராமைக்கு முன்வைத்த காரணம் பொய்யானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரச செலவு முகாமைத்துவ அமைச்சு உப குழுக் கூட்டத்தில் அமைச்சர் நேற்றைய தினம் கலந்துகொள்ளவில்லை என அதன் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

 

விடயங்களை ஆராய்ந்த மாளிகாகந்த நீதவான், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்ததுடன், நாளை காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

இலங்கையை விட்டு வெளியேறிய மருத்துவர்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க தீர்மானம் !

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சுமார் 300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இதனால் இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சுகாதார அமைச்சின் அனுமதி பெறாவிட்டால் வைத்தியர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

“வெளிநாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

“வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு விடுப்பு அனுமதி உள்ளதா..? என்பதைச் சரிபார்க்க விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகளுக்கும் நாங்கள் தெரிவித்துள்ளோம். அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன், இலங்கை மருத்துவ சபையினால் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவர்கள் வெளிநாடுகளில் கூட பயிற்சி செய்ய முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

கறுப்புப் பட்டியலில் உள்ள மருத்துவர்களின் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, அரச மருந்தக சங்க விற்பனை நிலையங்களில் காலாவதியான மருந்துகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

“காலாவதியான மருந்துகளின் இருப்புக்களை வழங்க சப்ளையர்கள் மறுத்துவிட்டதாக இந்த விற்பனை நிலையங்கள் எங்களுக்குத் தெரிவித்துள்ளன,” என்று அவர் கூறினார்.

சவாலான பணியாக இருந்தாலும் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

குற்றத்தை நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டு உடன் விலகுவேன். – மைத்திரிபால சிறீசேன காட்டம் !

நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகுவதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மஹிந்தானந்த தெரிவித்த கருத்துக்குத் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டின் ஜனாதிபதி ஒருவா் ஓய்வு பெற்ற பின்னா், அவருக்கு அமைச்சா் ஒருவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தாம், இன்று வசிப்பது அமைச்சா் ஹெகலிய ரம்புக்வெல்ல வசித்த வீடாகும் என்றும்  அவர் தெரி வித்துள்ளார்