வெளிநாடு பண மோசடி

வெளிநாடு பண மோசடி

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாண ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்ச  ரூபாய் பணம் மோசடி !

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்ச  ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு போலி முகவரால்  ஏமாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்  இது குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்  கொழும்பைச் சேர்ந்த குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்த நேற்றை தினம் குறித்த நபரை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ள நிலையில் அவரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபரினால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் சிலரும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.