வசந்த முதலிகே

வசந்த முதலிகே

“மகிந்தவைப் போல் நாற்காலியில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் மகிழ்ச்சியாக செல்கிறேன்.” – வசந்த முதலிகே

“மகிந்தவைப் போல் நாற்காலியில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் மகிழ்ச்சியாக செல்கிறேன்.” என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே நேற்று தெரிவித்தார்.

என் நேரம் முடிந்துவிட்டது. நான் விரக்தியிலிருந்து வெளியேறவில்லை. இப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மதுஷன் சோயுரத் இந்த தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்புவது உறுதி. அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

மார்ச் 6, 2021 அன்று நான் ஏற்பாட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போதிருந்து, பல்கலைக்கழகங்களில் கற்கும் சகோதர சகோதரிகளின் பிரச்சினைகள் மட்டுமல்ல, துன்பப்படும் மக்களின் பிரச்சினைகளும் பேசப்பட்டன. அதுமட்டுமின்றி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.

என்னை கொல்ல திட்டமிட்டார்கள். அந்தச் சவால்களையெல்லாம் சளைக்காமல் எதிர்கொண்டேன்.

மகிந்தவைப் போல் நாற்காலியில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் மகிழ்ச்சியாக செல்கிறேன். ஏனென்றால் அவர்களில் பலமான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த ஒரு தலைவர் மதுஷன் என்று அழைக்கப்படுகிறார்.

நான் போனதால் போராட்டம் நிற்காது. இந்தப் பிரச்சினைகள் தீரும் வரை அவை தொடரும். எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்காகவும் குரல் எழுப்புவேன்.” எனத் தெரிவித்தார்.

“வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும்.”- யாழில் வசந்த முதலிகே !

வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும்  எனஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவரும் வசந்த முதலிகே தெரிவித்தார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக  நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பாக பொதுக்கருத்தரங்கு இன்று யாழில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவருமான வசந்தமுதலிகே தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்துதெரிவிக்கையிலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவருமான வசந்தமுதலிகே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீதியாக இருக்கும் விடயம் போராட்டம், அதில் ஒன்றிணைந்து போராடுவதே நிலைப்பாடு அதனை பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் நம்புகின்றது. வடக்கில் காணிப்பிரச்சினை, இராணுவ மாயக்கப்பட்ட பிரச்சினை, வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் ஏனைய பிரச்சினைகள் தீர்த்துவைக்ககூடிய முதற்படியின் பயங்கரவாதச்சட்டத்தின் ஊடாக கொண்டுசெல்ல முடியும்.

வடக்கின் பிரச்சினையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சினையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்படவேண்டும். அதுதான் எமது நிலைப்பாடு. அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது.

இந்த பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆணித்தரமான கருத்தாகவே காணப்படுகின்றது. கடந்த காலத்தில் மக்கள் அணிவகுப்பில் நின்றதை அவதானித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டம், என்ற விடயத்திற்கு துணைநின்ற எங்களுக்கு அரசின் மூலம் அறிவிக்கப்பட்டது பயங்கரவாதம் என்றனர்.

டிலான் அலெஸ், ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவின் ஒன்று சேர்ந்து பொய்யான சாட்சிகளை உருவாக்கி தடுத்துவைத்து விசாரணை செய்யும் நோக்கில் அவர்கள் இரண்டு வருடங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கினர். 1979 ஆவது ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதச்சட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரையான காலம் வரை 100க்கு மேற்பட்டவர்கள் இன்னும் தடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்போது அரசாங்க புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர். அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர்.

இப்போது பொஸிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மூலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நிலைநாட்டமுடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் – என்றார்.

நாட்டை நாசமாக்கிவிட்டு “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்று புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் – சஜித் காட்டம் !

பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மறுபுறம் இந்நாட்டில் ஜனநாயகப் போராட்டத்திற்காக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,வசந்த முதலிகே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும், இது ஒரு விசித்திரமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொடம்கஸ்லந்த தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற சில பிரதான தலைவர்களில் முன் நிலையில் இருந்த ஒருவரான நிவார்ட் கப்ரால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தானும் தனது கும்பலும் செய்த பொருளாதாரக் குற்றங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதும்போது, இந்நாட்டை பொருளாதார ரீதியில் வங்குரோத்துச் செய்து பாரிய பொருளாதார குற்றங்களை இழைத்த கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,முதலிகே உள்ளிட்டோரை சிறையில் அடைத்தமை என்னவொரு அநியாயமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார குற்றத்தைச் செய்த கும்பலே சரி என்றால் சிறையில் இருக்க வேண்டும் எனவும்,ஆனால் பொருளாதாரக் கொலையைத் தடுக்கப் போராடிய குழுவைச் சிறையிலடைக்கும் நிலையே நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் தற்போது தேர்தலொன்றையே கோருவதாகவும்,அதனைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி போராடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவுக்கு தோல்நோய்ப் பாதிப்பு

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை போதிய காற்றோட்டம் அற்ற சூரியவெளிச்சம் படாத இடத்தில் தடுத்துவைத்திருப்பதன் காரணமாக அவர் தோல்நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சந்த முதலிகேயின் சகோதரர் அனுர முதலிகே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளதாவது,

எனது சகோதரர் மிகக்குறைந்தளவு வசதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார், அவரை ஏன் மோசமான நிலையில் தடுத்துவைத்துள்ளனர் என்பதற்கான காரணங்களை தெரியாத நிலையில் பயங்கரவாத விசாரணை பிரிவினர் உள்ளனர். வசந்தமுதலிகே தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் போதிய காற்றோட்ட வசதிகளோ அல்லது சூரிய ஒளியே இல்லாததன் காரணமாக அவர் தோல்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வசந்த முதலிகேயின் கழுத்து உட்பட உடல் பகுதிகள் தோல்தொற்று நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. பயங்கரவாத விசாரணை பிரிவினர் அவரை தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர்கள் சில மருந்துகளை வழங்கியுள்ளனர் ஆனால் பயங்கரவாத விசாரணை பிரிவினர் அதனை வழங்கவில்லை.
தங்களிடம் குறிப்பிட்ட மருந்து போதியளவு இல்லை என பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்தனர் பின்னர் நாங்கள் 14000 ரூபாய்க்கு மருந்தை வாங்கிக்கொடுத்தோம். ஆனால் மோசமான சூழ்நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் அவர் இன்னமும் குணமடையவில்லை – என்றார்.